Latest Updates
-
அக்டோபர் 19, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்டையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம் -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? -
வெள்ளை நிற ஆடையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன எடுக்கணும்?
கர்ப்பம் என்பது கணவன் மனைவி, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் ஆகிய அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் காலம். அது குடும்பத்தின் மகிழ்ச்சி மட்டும்மல்ல கர்ப்பமாக இருக்கும் தாயின் மகிழ்ச்சியும் அடங்கி இருக்கிறது. ஆனால் கர்ப்பமாக இருக்கும் 9 மாதங்களுக்கு தாயை மிகவும் கவனமாக கவனிக்க வேண்டும். கர்ப்பத்தின் மகிழ்ச்சியைத் தவிர, பல தம்பதிகளுக்கு கணவன்-மனைவி 9 மாதங்கள் உடலுறவில் இருந்து விலகி இருக்க வேண்டுமா அல்லது சேர்ந்து இருக்கலாமா என பல கேள்விகள் உள்ளது.
உண்மையில் கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவு கொள்ளலாமா?
கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவு கொள்வது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் ஆரோக்கியமற்றது என்பது பொதுவான தவறான கருத்து. ஆனால் உண்மை என்னவென்றால், கர்ப்பத்தில் சிக்கல்கள் இல்லாவிட்டால், ஒரு பெண் தனக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருக்கும் வரை உடலுறவு வைத்துக் கொள்ளலாம்.

கர்ப்பத்துடன் உடலுறவு கொண்டால் உள்ளே இருக்கும் குழந்தைக்கு ஆபத்தில்லையா.. உடலுறவு கொள்ள வேண்டுமென்றால்.. என்ன பொசிஷனில் முயற்சி செய்ய வேண்டும் போன்ற கேள்விகளுக்கான பதில்களை இப்போது தெரிந்து கொள்வோம்...
மருத்துவர்கள் சொல்வது என்ன?
கர்ப்ப காலத்தில் நீங்கள் சுதந்திரமாக உடலுறவு கொள்ளலாம். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், எந்த பிரச்சனையும் இல்லை என்றால், உடலுறவில் ஈடுபடலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உண்மையில், கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வதால் பல நன்மைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். கணவன்-மனைவி இடையே நெருக்கம் மற்றும் உணர்ச்சி ரீதியான தொடர்பை மேம்படுத்த காதல் உதவுகிறது. மனநிலை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறது.
கர்ப்ப காலத்தில் எந்த பொசிஷன் சிறந்தது
நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது உடலுறவு கொள்ள விரும்பினால், சில பொசிஷன் நல்லது. அதனால் எந்த பிரச்சனையும் ஏற்படாது. தம்பதிகள் அவர்களுடைய வசதிக்கு ஏற்ப செளகரியமாக எந்த நிலையில் உடலுறவு கொள்ளலாம் என முடிவுச்செய்துக் கொள்வது நல்லது. அதுவும் கரண்டி நிலை அதாவது செக்ஸ் ஸ்பூன் பொசிஷன் தான் சரியாக இருக்கும் என மருத்துவ நிபுணர்ககள் கூருகின்றனர். அது கர்ப்பிணிப் பெண்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது. அசௌகரியமாகவும் இருக்காது. இந்த போஸ் கர்ப்பிணி வயிற்றில் எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாது. அதனால் இந்த நிலைதான் சரியாக இருக்குமாம்...
செக்ஸ் உறவு கொள்வதால் கருச்சிதைவு ஏற்படுமா..?
கருவில் குழந்தையின் வளர்ச்சி சீராக இல்லை என்றால் மட்டுமே கருச்சிதைவு ஏற்படும். மாறாக, உங்கள் கணவருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதால் ஒருபோதும் உங்களுக்கு கருச்சிதைவு ஏற்படாது. அதே சமயம், மருத்துவ சிகிச்சைகள் அடிப்படையில் கர்ப்பம் அடைந்திருந்தால் செக்ஸ் உறவை தவிர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால், இது போல கர்ப்பம் அடைந்த பெண்கள், செக்ஸ் உறவின் போது உச்சகட்டம் அடைந்தால், அதன் எதிரொலியாக குறைப்பிரசவம் ஏற்படக் கூடும்.
உடலுறவை எப்போது தவிர்க்க வேண்டும்
1. அதிக ஆபத்துள்ள கர்ப்பம் இருந்தால், உடலுறவைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் உடலுறவு கொள்ள விரும்பினால், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகுதான் உடலுறவு கொள்ளத் தொடங்க வேண்டும்.
2. நஞ்சுக்கொடி பிரீவியாவால் பாதிக்கப்பட்டிருந்தால், உடலுறவைத் தவிர்க்க வேண்டும். இரத்தப்போக்கு மற்றும் குழந்தைக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்ப்பதற்காக, உடலுறவைத் தவிர்க்க வேண்டும்.
3. அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களும் கர்ப்ப கால செக்ஸை தவிர்க்க வேண்டும்.
4. கர்ப்ப காலத்தில் லேசான ரத்தப்போக்கு இருக்கிற பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்படலாம். இப்படிப்பட்ட பெண்களும் உறவைத் தவிர்ப்பதே நல்லது.
5. கருப்பையில் கிருமித்தொற்று ஏற்படலாம்' என்று அறிவுறுத்தப்பட்ட கர்ப்பிணிகளும் செக்ஸை தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் கர்ப்ப காலம் முழுதும் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications
