Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
பெற்றோர்களே! இந்திய சுதந்திரத்தை பற்றி உங்க குழந்தைகளுக்கு நீங்க என்ன சொல்லிக் கொடுக்கணும் தெரியுமா?
Independence Day 2023 In Tamil: ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இன்று, நாடு முழுவதும் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 77வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் இருந்து தாய்நாட்டின் சுதந்திரத்தை குறிக்கும் இந்த நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
நம் நாட்டின் பெருமைகளையும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களை பற்றியும் நம் வருங்கால தலைமுறைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். நாட்டின் வளமான வரலாற்றைப் பற்றி குழந்தைகளுக்கு கற்பிப்பது மிகவும் முக்கியம். தேசத்தின் பொக்கிஷமாகக் கருதப்படும் குழந்தைகள், தங்கள் முன்னோர்களைப் பற்றியும், அவர்கள் செய்த தியாகங்களைப் பற்றியும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அவர்களின் முன்னோர்களால் தான் சுதந்திர நாட்டின் காற்றை சுவாசிக்க முடிகிறது என்பதை அவர்களுக்கு கற்பிக்க வேண்டும். இந்தியாவின் சுதந்திர தினத்தைப் பற்றி உங்கள் குழந்தைகளுக்கு எப்படிக் கற்பிப்பது என்பது பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதைகளைச் சொல்லுங்கள்
சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதைகளைச் சொல்வதுதான். பகத் சிங், திருப்பூர் குமரன், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார் போன்ற இன்னும் எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி அவர்களிடம் கூறுங்கள்.
அவர்கள் மிக இளம் வயதிலேயே தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராட பலரைத் தூண்டினர். அமைதியான அணுகுமுறையால் உலகம் முழுவதையும் உலுக்கிய காந்திஜியின் அகிம்சை இயக்கத்தைப் பற்றி அவர்களிடம் சொல்லுங்கள்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதைகளில் இருந்து சிறிய வாழ்க்கைப் பாடங்களை அவர்களுக்குக் கொடுங்கள். அதனால் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் முடியும்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்வையிடவும்
சுதந்திரப் போராட்டங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். அவர்களின் வரலாற்றை அவர்களுக்கு உணர்த்துங்கள். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக நம் முன்னோர்கள் எப்படிப் போரிட்டார்கள் என்பதை அவர்களுக்குக் கூறுங்கள்.
பயணத்திற்கு முன், அந்த இடத்தைப் பற்றிய ஆர்வத்தை அவர்களிடம் உருவாக்குங்கள். இதனால் அவர்கள் அதைப் பார்வையிடவும் அதைப் பற்றி மேலும் அறியவும் உற்சாகமடைவார்கள். கதைசொல்லல் ஒரு சிறந்த கற்றல் வழி என்றாலும், தளத்திற்குச் சென்று உண்மைகளைப் பற்றி அவர்களுக்குக் கற்பிப்பது முற்றிலும் வேறுபட்ட கற்றல் அனுபவத்தை உங்கள் குழந்தைக்கு கொடுக்கலாம்.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய திரைப்படங்களைப் பாருங்கள்
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு உங்கள் குழந்தைகளை அறிமுகப்படுத்துவதற்கான மற்றொரு சிறந்த வழி, அவர்களை சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய திரைப்படங்களைப் பார்க்க வைப்பதாகும். நம் நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் செழுமையான பாரம்பரியத்தை தொலைக்காட்சித் திரையில் வெளிப்படுத்த எப்போதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மகாத்மா காந்தி, பகத் சிங், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய பல திரைப்படங்கள் உள்ளன. அனைத்து திரைப்படங்களின் பட்டியலை உருவாக்கி வார இறுதி நாட்களில் ஒன்றாகப் பாருங்கள்.
சமூக நடவடிக்கைகளில் பங்கேற்கவும்
பல சமூக நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இருக்க உங்கள் குழந்தைகளுக்கு எப்போதும் கற்றுக்கொடுங்கள். ஒற்றுமையுடன் செய்யும் பணியின் மதிப்பை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.
மக்கள், மொழி, சாதி மற்றும் மதம் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபட்டிருந்தாலும், இந்தியா சுதந்திரம் பெற ஒற்றுமை எவ்வாறு உதவியது என்பதை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். மக்கள் ஒன்றுபட்டால் அனைத்தையும் தோற்கடிக்க முடியும் என்பதை உங்கள் குழந்தைக்கு புரியவையுங்கள்.
சுதந்திர தின விழாவை டிவியில் பார்க்கலாம்
சுதந்திர தின கொண்டாட்டத்தைப் பார்க்க செங்கோட்டைக்குச் செல்வது எப்போதுமே சிறந்த தேர்வாக இருந்தாலும், அதிக மக்கள் அதை டிவியில் பார்ப்பது மற்றொரு நல்ல வழி. உங்கள் குழந்தையை அதிகாலையில் எழுப்பி சுதந்திர தின விழாவைப் பார்க்கச் செய்யுங்கள். சுதந்திர தினத்தன்று, நாட்டின் பிரதமர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செங்கோட்டை அல்லது லால் கிலாவில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய புத்தகங்களை பரிசளிக்கவும்
சுதந்திர தினத்தைப் பற்றி குழந்தைகளுக்கு கற்பிப்பதற்கான மற்றொரு சுவாரஸ்யமான வழி, புத்தகங்கள் போன்ற கல்வி சம்பந்தப்பட்ட ஆதாரங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதாகும். உங்கள் குழந்தைகளுக்கு இந்தியாவின் சுதந்திரத்திற்கு வழிவகுத்த பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் பற்றிய புத்தகங்களைக் கொடுங்கள்.
சுதந்திரப் போராட்டம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் மற்றும் ஆய்வுப் பொருட்களைக் கொடுங்கள், மேலும் பிராந்திய அளவில் போராடி இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு பங்களித்த சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிமுகப்படுத்துங்கள்.



Click it and Unblock the Notifications












