For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் குழந்தைக்கு ஒருநாளைக்கு அதிகபட்சம் எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்கலாம்?

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிகவும் இன்றியமையாத உணவாகும். இது இயற்கையாகவே சுரக்கும் ஒரு விஷயமாக இருந்தாலும் சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு சரியாக இருக்காது.

|

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிகவும் இன்றியமையாத உணவாகும். இது இயற்கையாகவே சுரக்கும் ஒரு விஷயமாக இருந்தாலும் சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு சரியாக இருக்காது. தாய்ப்பால் குழந்தைகளுக்கு சரியாக கொடுக்கவில்லை என்றால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளது.

how to increase breastmilk supply in tamil,

Image Courtesy

எனவே தான் குழந்தைக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே இந்த தாய்ப்பால் சுரப்பு பிரச்சினையை சில வழிமுறைகள் மூலம் சரி செய்யலாம். அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாய்ப்பால் சுரப்பு சாத்தியமா?

தாய்ப்பால் சுரப்பு சாத்தியமா?

தாய்ப்பால் சுரப்பு என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதில் நமது உடல் உறுப்புகள் ஹார்மோன்கள் சேர்ந்து செயலாற்றும் அற்புதமான விஷயம். ஆனால் பல நேரங்களில் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு சரியாக இருப்பதில்லை. உடனே அவர்கள் குழந்தைக்கு புட்டுப்பால் கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் அப்படி செய்யாமல் அடிக்கடி தாய்ப்பாலே கொடுத்து வந்தால் சுரப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. குழந்தை குடிக்கும் போது ஹார்மோன்கள் தூண்டப்பட்டு சுரப்பு தானாகவே அதிகரிக்க ஆரம்பித்து விடும்.

சிறிய உடற்பயிற்சி

சிறிய உடற்பயிற்சி

பம்ப்பிங் செய்வது உங்கள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். குழந்தை வாய் வைத்து உறிஞ்சி குடிக்கும் போது ஆக்ஸிடோசின் ஹார்மோன் சுரப்பு ஏற்பட்டு தாய்ப்பால் சுரக்க ஆரம்பித்து விடும். எனவே வெறுமனே அப்படியே விட்டு விடக் கூடாது. குழந்தையை குடிக்க வைக்க வேண்டும். 2 மணி நேரத்துக்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுத்து ஒரு நாளைக்கு 2-3 முறை கொடுக்கும் போது தானாகவே தாய்ப்பால் சுரப்பு அதிகமாகி விடும். முதலில் 10 மில்லி லிட்டர் ஏற்பட்டால் கூட பிறகு 60-1 20 மில்லி லிட்டர் வரை சுரப்பு கிடைக்கலாம். இப்படி சுரப்பு அதிகமாகும் போது அடிக்கடி குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நாளைக்கு இரண்டு முறை கொடுத்தாலே போதும் வயிறு நிறைஞ்சு தூங்க ஆரம்பித்து விடும்.

தண்ணீர் குடியுங்கள்

தண்ணீர் குடியுங்கள்

உங்களை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடித்தால் அதிக தாய்ப்பால் சுரக்க வாய்ப்புள்ளது. ஒரு நாளைக்கு 4 லிட்டர் தண்ணீராவது குடியுங்கள். குளிர்ந்த நீரை விட வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால் அதிகமான பால் சுரக்கும்.

MOST READ: இந்த 2019-ல் வண்டி வாங்க சிறந்த நாட்கள் இவைதான்... இதுல வாங்குங்க வண்டி அமோகமா இருக்கும்

நல்ல தூக்கம்

நல்ல தூக்கம்

பிறந்த குழந்தையை வைத்துக் கொண்டு தூங்குவது கஷ்டம் தான். ஆனால் குழந்தை தூங்கும் சமயத்தில் தூங்கிக் கொள்ளுங்கள். நல்ல தூக்கமும் உங்கள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.

கவலை வேண்டாம் சந்தோஷம் போதும்

கவலை வேண்டாம் சந்தோஷம் போதும்

தாய்ப்பால் சுரப்பு இல்லை என்று கவலை கொள்ளாதீர்கள். மன அழுத்தம் இல்லாமல் சந்தோஷமாக இருங்கள். உங்கள் மன நிலையும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க இயலும். தாய்ப்பாலே இல்லாமல் இருப்பதற்கு கொஞ்ச தாய்ப்பால் சுரப்பு குழந்தைக்கு கிடைக்கிறதே என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள். தேவையில்லாமல் கவலைப்பட வேண்டாம்.

இயற்கை வழி

இயற்கை வழி

தாய்ப்பால் சுரக்க நிறைய இயற்கை மூலிகைகள் உள்ளன. இதனால் எந்தவித பக்க விளைவுகளும் இல்லை. லாக்டோனிக் போன்ற மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். எனவே உங்களுக்கு ஏற்ற இயற்கை முறைகளை நீங்கள் மேற்கொள்ளலாம்.

உணவு ஆரோக்கியம்

உணவு ஆரோக்கியம்

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு அதிக கலோரிகள் தேவை. எனவே நன்றாக சாப்பிட வேண்டும். சாலட், காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள், மாமிச உணவுகளை எடுங்கள். இது உங்கள் பால் சுரப்பை அதிகரிக்கும்.

MOST READ: கர்ப்பமாக இருப்பவர்கள் நெல்லிக்காய் சாப்பிடலாமா? ஒருவேளை சாப்பிட்டா எப்படி சாப்பிடணும்?

விடாமுயற்சி பலனளிக்கும்

விடாமுயற்சி பலனளிக்கும்

முதலில் தாய்ப்பால் இல்லை என்று முயற்சியை கைவிட்டு விடாதீர்கள். நல்ல சுரப்பிற்கு சில பேருக்கு இரண்டு, மூன்று மாதங்கள் கூட ஆகும். எனவே விடாமுயற்சியுடன் முயலுங்கள். உங்கள் உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுதல், உணவு இப்படி எல்லாவற்றையும் மாற்றி முயலுங்கள். கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.

பராம்பரிய வீட்டு சிகிச்சை

பராம்பரிய வீட்டு சிகிச்சை

ஒவ்வொரு வீட்டிலும் பராம்பரிய உணவுப் பொருட்கள் இருக்கும். உங்கள் சமையலறையிலயே ஏராளமான வீட்டு சிகிச்சைகள் இருக்கின்றன. காலையில், இரவில் என்று 1 டீ ஸ்பூன் வெந்தயம் சாப்பிட்டு வரலாம், சீரக விதைகள் மற்றும் கருப்பட்டி, அர்கார் பருப்பு மற்றும் தண்ணீர், அரிசி மாவு சூப், ஓமம் போன்ற நிறைய வீட்டு சிகிச்சைகள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. அதையும் முயற்சி செய்து பார்க்கலாம். கண்டிப்பாக நல்ல முன்னேற்றம் காணப்படும். மேற்கண்ட எளிய வழிகள் உண்மையாகவே தாய்மார்களுக்கு உதவி உள்ளது. நீங்களும் ட்ரை பண்ணி பலன் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

My Breastfeeding Story: How I Increased My Breastmilk Supply?

Here is the story of how i increased my breastmilk supply, personal experience. Read on.
Story first published: Tuesday, February 12, 2019, 1:01 [IST]
Desktop Bottom Promotion