For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பகாலத்தில் பெண்கள் வெண்டைக்காய் சாப்பிடுவது அவர்களுக்கு பாதுகாப்பானதா?

கர்ப்பகாலத்தில் பெண்கள் வெண்டைக்காய் சாப்பிடுவது அவர்களுக்கு பாதுகாப்பானதா?

|

கர்ப்பகாலம் என்பது பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியை தரக்கூடிய காலமாகும், பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலமும் இதுதான். ஏனெனில் இந்த காலத்தில் அவர்கள் செய்யும் அனைத்து செயல்களும் குழந்தைகளின் ஆரோக்கியத்தின் மீது பிரதிபலிக்கும். எனவே அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக உணவு விஷயத்தில்.

is it safe to eat lady fingers during pregnancy.

சாதாரண நாட்களில் பெண்கள் சாப்பிடும் அனைத்தையும் கர்ப்பகாலத்தில் சாப்பிட முடியாது. கர்ப்ப காலத்திற்கென தனி உணவுமுறையை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் ஒரு சந்தேகம் கர்ப்பகாலத்தில் வெண்டைக்காய் சாப்பிடலாமா? கூடாதா? என்பதுதான். இந்த பதிவில் அந்த கேள்விக்கான பதிலை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ப்பகாலத்தில் வெண்டைக்காய் சாப்பிடலாமா?

கர்ப்பகாலத்தில் வெண்டைக்காய் சாப்பிடலாமா?

கர்ப்பகாலத்தில் அதிகளவு காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. கர்ப்பகாலத்தில் ஏற்படும் பல மாற்றங்களை உடலில் தக்கவைத்துக் கொள்ள அதற்கான ஊட்டச்சத்துக்கள் அவசியமாகும். வெண்டைக்காயை கர்ப்பிணி பெண்கள் தாராளமாக சாப்பிடலாம். கர்ப்பபகாலத்தில் வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

வெண்டைக்காயின் ஊட்டச்சத்துக்கள்

வெண்டைக்காயின் ஊட்டச்சத்துக்கள்

வெண்டைக்காயில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. 100 கிராம் வெண்டைக்காயில் 30 கலோரிகளும், 7.6 கிராம் கார்போஹைட்ரேட்டுகளும், 3.2 கி நார்ச்சத்துக்களும், புரோட்டின் 2 கிராமும், போலேட் அமிலம் 87.8 கிராமும், வைட்டமின் சி 21 மிகி, கால்சியம் 75 மிகி, மக்னீசியம் 57 மிகி உள்ளது. வெண்டைக்காய் பெண்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இதில் இருக்கும் அதிகளவு போலேட் மற்றும் ரிபோபிளேவின் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதாகும்.

வைட்டமின் சி

வைட்டமின் சி

வைட்டமின் சி நமது உடல் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது, இது குழந்தையின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது ஒரு சிறந்த ஆக்சிஜனேற்றியாக இருப்பதால் கார்டியோவாஸ்குலர் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தையும் தடுக்கிறது. இது உங்கள் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் சருமம் மற்றும் எலும்புகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

MOST READ: சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி இந்த அடையாளம் உள்ள பெண்களின் திருமண வாழ்க்கையில் ராஜயோகம் இருக்குமாம்

போலேட்

போலேட்

போலேட் மற்றும் போலிக் அமிலம் குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடு ஏற்படும் அபாயத்தை தடுக்கிறது. இது வெண்டைக்காயில் அதிகம் உள்ளது. வெண்டைக்காயை கர்ப்பகாலத்தின் 4 முதல் 12 வது வாரத்தில் அதிகம் சாப்பிட வேண்டும். இந்த காலகட்டத்தில்தான் குழந்தைகளின் நரம்பு குழாய்கள் வளர்ச்சிபெறும். இதற்கு போலிக் அமிலம் மிகவும் அவசியமானதாகும்.

ஆன்டி ஆக்சிடண்ட்கள்

ஆன்டி ஆக்சிடண்ட்கள்

வெண்டைக்காயில் அதிகளவு ஆக்சிஜனேற்றிகள் உள்ளது, இது கருவில் இருக்கும் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் குழந்தைக்கு இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

நார்ச்சத்துக்கள்

நார்ச்சத்துக்கள்

கர்ப்பகாலத்தில் ஏற்படும் மலசிக்கலைத் தடுக்க வெண்டைக்காயில் இருக்கும் நார்ச்சத்துக்கள் அதிகம் உதவும். இதிலுள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயத்தை தடுக்கிறது மேலும் இரத்தத்தில் இருக்கும் கொழுப்பின் அளவை குறைக்கிறது.

MOST READ: இந்திய-சீன கலாச்சாரத்தின் படி இந்த எண்கள் உங்களுக்கு உண்மையிலேயே அதிர்ஷ்டத்தை வழங்குமாம் தெரியுமா?

நல்ல தூக்கம்

நல்ல தூக்கம்

டிரிப்டோபான் போன்ற அத்தியாவசிய அமினோ அமிலங்கள் வெண்டைக்காயில் புரதங்களுடன் உள்ளன, இது மனஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கும், நல்ல தூக்கத்தை வழங்குவதற்கும் உதவுகிறது. மேலும் இது உங்கள் இரத்தத்தில் இருக்கும் நச்சு பொருட்களை வெளியற்றுவதுடன் இதில் இருக்கும் நார்சத்துக்கள் இரத்தத்தில் இருக்கும் குளுகோஸின் அளவை சமநிலைப்படுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is It Safe to Eat Lady Fingers During Pregnancy

is it safe to eat lady fingers during pregnancy.
Story first published: Wednesday, July 17, 2019, 17:52 [IST]
Desktop Bottom Promotion