Just In
- 3 hrs ago
தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...!
- 8 hrs ago
இந்த ராசிக்காரங்களுக்கு குருபகவான் முழு யோகங்களையும் வாரி வழங்குவார் தெரியுமா?
- 20 hrs ago
வாஸ்துவின் படி உங்கள் புத்தாண்டு காலண்டரை இந்த திசையில வைச்சுறாதீங்க...இல்லனா பிரச்சினைதான்...!
- 20 hrs ago
ஆண்களே… உங்கள் ஆண்குறியில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா?...தீர்வுகளை தெரிந்துகொள்ளுங்கள்…!
Don't Miss
- Automobiles
ஹூண்டாய் கார்கள் மீது ரூ.2 லட்சம் வரை அதிரடி சேமிப்புச் சலுகைகள்!
- Movies
திருமணமானதை மறந்து டாப்லெஸாக போஸ் கொடுத்த நடிகை.. தீயாய் பரவும் போட்டோ.. வாயடைத்துப்போன ரசிகர்கள்!
- News
மாமல்லபுரத்தை அழகுபடுத்த கோரிய தாமாக முன்வந்து ஹைகோர்ட் வழக்கு.. செங்கல்பட்டு ஆட்சியருக்கு வார்னிங்
- Finance
ஸ்டெர்லைட் ஆலை மூடல் எதிரொலி.. காப்பர் உற்பத்தி படு வீழ்ச்சி..!
- Technology
முதல் மாதம் இலவசம், ரூ.1000 தள்ளுபடி: ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பு
- Education
CBSE: 11-ம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக 12ம் வகுப்பு தேர்வெழுதலாம்- அரசாணை வெளியீடு
- Sports
நம்பர் 1 இடத்தை அப்படிலாம் விட்ற முடியாது.. 7 சிக்ஸ் விளாசி ரோஹித்துடன் முட்டி மோதிய கேப்டன்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கர்ப்பகாலத்தில் பெண்கள் பாகற்காய் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும்?
கர்ப்பகாலம் என்பது பெண்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காலமாகும். ஏனெனில் தங்கள் செயல்பாடுகள் முதல் சாப்பிடும் உணவுவரை அனைத்தையும் தனக்கு மட்டுமின்றி தன் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நலனையும் கருத்தில் கொண்டு பெண்களை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக உணவுகளில் பெண்கள் அதீத கவனம் செலுத்த வேண்டும்.
பாகற்காய் ஆரோக்கியமான பொருள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் கர்ப்பகாலத்தில் அதனை சாப்பிடலாமா என்றால் அது கேள்விக்குரிய ஒன்றுதான். மகப்பேறு மருத்துவர்களின் கருத்துப்படி பெண்கள் கர்ப்பகாலத்தில் தாராளமாக பாகற்காய் சாப்பிடலாம். இந்த பதிவில் கர்ப்பகாலத்தில் பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

அதிகளவு போலேட்
கர்ப்பிணி பெண்களுக்கு போலேட் மிகவும் அவசியமான ஒரு ஊட்டச்சத்தாகும். . இந்த கனிமமானது புதிதாகப் பிறந்த குழந்தையை நரம்புக் குழாய் குறைபாடுகளிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. பாகற்காயில் அதிகளவு போலேட் உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு தினமும் தேவையான போலெட்டில் நான்கில் ஒரு பங்கு இதிலிருந்து கிடைக்கும்.

அதிக நார்ச்சத்துகள்
பாகற்காயில் அதிகளவு நார்ச்சத்து நிரம்பியுள்ளது இது உங்களுக்கு திருப்தியான உணர்வை அளிக்கும். இது அதிக கலோரி உணவுகள் மற்றும் நொறுக்குத்தீனிகள் மீதான உங்கள் ஆர்வத்தை குறைக்கிறது. இது உங்களை கர்ப்பகாலத்திலும் எடை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளும்.

செரிமான பாதை கோளாறுகளை குணப்படுத்தும்
உலகம் முழுவதும் அதிகப்படியான கர்ப்பிணி பெண்கள் சந்திக்கும் இரண்டு முக்கியமான பிரச்சினைகள் மலச்சிக்கலும், மூல நோயும்தான். பாகற்காயில் இருக்கும் நார்ச்சத்துக்கள் உங்கள் செரிமான பாதை பிரச்சினைகளை சரி செய்வதன் மூலம் இந்த பிரச்சினைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்.
MOST READ: இந்தியர்கள் பசுமாட்டை கடவுளாக வழிபடுவதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா?

சர்க்கரை எதிர்ப்பு
பாகற்காயில் சர்க்கரை நோய்க்கு எதிரான பண்புகள் உள்ளது. இதனால் இதனை தினமும் எடுத்துக்கொள்ளலாம். இதிலிருக்கும் சாரன்டின் மற்றும் பாலிபெப்டைட்-பி போன்ற ஊட்டச்சத்துக்கள் கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோயை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

ஆன்டி ஆக்சிடன்ட்கள்
பாகற்காயில் வைட்டமின் சி அதிகமுள்ளது, இந்த ஆக்ஸிஜனேற்றி கர்ப்பிணிப் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராட உதவுகிறது. மேலும் இது புது அம்மாக்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்துகிறது
பாகற்காய் பெரிஸ்டால்சிஸை ஊக்குவிக்கவும் உதவும் மேலும் கர்ப்பிணி பெண்களின் குடல் இயக்கங்களையும், செரிமான அமைப்பையும் அதிகரிக்க உதவுகிறது. இதனால் சில பக்கவிளைவுகளும் ஏற்படலாம்.

நச்சுத்தன்மை
பாகற்காயில் அல்கலைன் பொருட்களான ரெசின், குயினைன், சபோனிக், மொராசிடின் போன்ற பொருட்கள் உள்ளது. இவை நமது உடலில் நச்சுத்தன்மையை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த நச்சுத்தன்மையால் வயிற்றுவலி, குமட்டல், முகத்தில் தடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே இதனை அதிகம் சாப்பிடாமல் மிதமான அளவில் சாப்பிடவும்.