For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாய்ப்பாலை சூடுபடுத்தலாமா?... எப்படி பயன்படுத்த வேண்டும்?

தாய்ப்பாலை ஆரோக்கியமாக சேகரித்து குழந்தைக்கு கொடுப்பது முக்கியம். எனவே இந்த முறையை ஒவ்வொரு தாய்மார்களும் அறிந்து கொள்வது அவசியம்.

|

குழந்தை பிறந்ததிலிருந்து ஆறு மாத காலம் வரை தாய்ப்பால் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த தாய்ப்பாலில் தான் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. ஆனால் வேலைக்கு போகும் சில தாய்மார்கள் குழந்தைக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள்.

best way to store breastmilk in tamil

மேலும் சில சமயங்களில் அதிகமான சுரப்பால் தாய்ப்பாலும் வீணாகி விடும். எனவே இந்த பிரச்சினைகளை தாய்ப்பாலை தகுந்த முறையில் சேகரிப்பதன் மூலம் தடுக்கலாம். தாய்ப்பாலை ஆரோக்கியமாக சேகரித்து குழந்தைக்கு கொடுப்பது முக்கியம். எனவே இந்த முறையை ஒவ்வொரு தாய்மார்களும் அறிந்து கொள்வது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சேகரிக்கும் வழிகள்

சேகரிக்கும் வழிகள்

அறை வெப்பநிலை (25 டிகிரி செல்சியஸ்க்கு மேலாக இருக்க கூடாது) 6 மணி நேரம் வரை பாதுகாக்கலாம். ஐஸ்கட்டிகள் உள்ள குளிர்சாதன பெட்டி என்றால் 24 மணி நேரம் வரை சேகரித்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். பிரிட்ஜில் (4 டிகிரி செல்சியஸ்) என்ற வெப்ப நிலையில் வைத்துக் கொண்டால் 5 நாட்கள் வரை பாதுகாக்கலாம். பிரிட்ஜில் வைக்கும் போது முட்டை, மாமிசம் மற்றும் சமைக்காத உணவுப் பொருட்களுடன் தாய்ப்பாலை வைக்க கூடாது.

பிரிட்ஜின் உறையும் அறையில் வைத்தால் இரண்டு வாரங்கள் வரை சேமிக்கலாம். ஹோம் ப்ரீசர் (-18 டிகிரி செல்சியஸ்) என்றால் ஆறு மாதங்கள் வரை கூட தாய்ப்பாலை சேகரித்து பாதுகாக்கலாம்.

இந்த முறைகள் மூலம் நீங்கள் வேலைக்கு போனால் கூட உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் எப்பொழுதும் கிடைக்கும் படி செய்யலாம்.

உறைந்த தாய்ப்பால்

உறைந்த தாய்ப்பால்

நீங்கள் சேமித்த தாய்ப்பாலை எவ்வளவு விரைவாக பயன்படுத்துகிறீர்களோ அது நல்லது. ஏனெனில் உறைந்த தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அழிந்து போக வாய்ப்புள்ளது. ஆனால் குழந்தைக்கு கொடுக்கும் பார்முலா பீடிங்கை விட உறைந்த தாய்ப்பால் சிறந்தது.

எப்படி தாய்ப்பாலை குளிர்படுத்துவது

எப்படி தாய்ப்பாலை குளிர்படுத்துவது

ஒரு ஸ்டெர்லைஸ்டு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது பிளாஸ்டிக் பாட்டில் அல்லது பிளாஸ்டிக் பேக்குகள். கண்ணாடி பாட்டில்கள் வேண்டாம் ஏனெனில் அதில் விரிசல்கள் விழ வாய்ப்புள்ளது.

பாட்டில்களில் தேதியை குறித்து லேபிள்கள் ஒட்டி விடுங்கள். ஏனெனில் அப்பொழுது தான் பழைய பால்களை முதலில் பயன்படுத்த முடியும்.

தாய்ப்பாலை சேகரிக்கும் பம்ப்பை சுத்தமாக கழுவி சூடான மற்றும் சோப்பு நீரில் பயன்படுத்தி ஸ்டெர்லைஸ் பண்ணி தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.

பாக்டீரியா

பாக்டீரியா

தாய்ப்பாலை பம்ப் கொண்டு சேகரிப்பதற்கு முன்பு உங்கள் கைகளை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். ஏனெனில் சிறியளவு பாக்டீரியா கூட தாய்ப்பாலில் பெருக ஆரம்பித்து விடும். இதை தவிர்க்க எல்லா பொருட்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.

பாட்டில்

பாட்டில்

புதிதாக சேகரிக்கப்பட்ட பாலிற்கும், ஏற்கனவே சேகரிப்பட்ட பாலிற்கும் வித்தியாசம் கண்டு கொள்ளுங்கள். எனவே சரியான பாலை எடுத்து பயன்படுத்துங்கள். இரண்டையும் ஒன்றாக கலந்து கொடுக்காதீர்கள்.

நீங்கள் ஸ்டோர் செய்து வைத்த பால் உள்ளே பிரிந்து இருப்பதை சில சமயங்களில் காணலாம். எனவே அவ்வப்போது குலுக்கி பயன்படுத்துங்கள். சில குழந்தைகளுக்கு குளிர்ச்சியான பால் பிடிக்கும். எனவே அப்படியே பிரிட்ஜில் இருந்து எடுத்து பயன்படுத்தலாம். இல்லையென்றால் வெதுவெதுப்பான நீரில் சேகரித்த பாட்டிலை சிறிது நேரம் வைத்து வெதுவெதுப்பாக பாலை கொடுக்கவும்.

உறைய வைத்தல்

உறைய வைத்தல்

நீங்கள் பாட்டில் அல்லது பேக்குகளில் பாலை சேகரித்து குளிர வைக்கும் போது மேலே கொஞ்சம் பகுதியை காலியாக விடவும். ஏனெனில் பால் உறையும் போது விரிவடைய வாய்ப்புள்ளது. பேக்குகளில் விரிசல்கள் இருந்தால் உள்ளே பனிக்கட்டிகள் உருவாக வாய்ப்புள்ளது. எனவே விரிசல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் கொஞ்சம் மட்டும் தாய்ப்பாலை உறைய வைக்க விரும்பினால் ஒரு பாத்திரத்தில் மூடி போட்டோ அல்லது பிளாஸ்டிக் பேக்குகளில் அடைத்தோ வைக்கலாம். ஏனெனில் கொஞ்சம் பால் சீக்கிரம் உறைந்து விடக் கூடும். இந்த தாய்ப்பாலை உங்கள் குழந்தையின் திட உணவில் கூட சேர்த்து கொடுக்கலாம்.

ப்ரஷ்ஷான தாய்ப்பாலை கூட ஒரு 1 மணி நேரம் குளிர்வித்து குழந்தைக்கு கொடுக்கலாம்.

12 மணி நேரம் தாய்ப்பாலை உறைய வைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் உறைந்த தாய்ப்பாலை கரைய வைத்து கொடுக்கலாம். தாய்ப்பால் பனிக்கட்டியாக மாறிய பிறகு மீண்டும் குளிர்விக்க வேண்டாம்.

மைக்ரோவேவ்

மைக்ரோவேவ்

மைக்ரோவேவ் ஓவனில் வைத்தோ அல்லது அடுப்பில் சூடு படுத்தியோ தாய்ப்பாலை காய்ச்சக்கூடாது. உங்களுக்கு அவசரமாக தேவைப்பட்டால் உறைந்த தாய்ப்பாலை வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள் அல்லது ஒரு பெளலில் வெதுவெதுப்பான நீரில் அதை கொஞ்சம் நேரம் வையுங்கள். அதை பயன்படுத்துவதற்கு முன் பாட்டிலின் வெளிப்புறத்தை நன்றாக துடைத்து விட்டு அப்புறம் குழந்தைக்கு கொடுக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What’s the best way to store breastmilk?

You can store your breastmilk to keep it fresh for your baby in a number of ways.
Desktop Bottom Promotion