For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாய்ப்பால் குழந்தை குடிக்க மட்டும்தானா?... பெரியவங்களும் இப்படியெல்லாம் பயன்படுத்தலாம்...

தாய்ப்பாலில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. இங்கே தாய்ப்பாலின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பட்டியலிடப்பட்டிருக்கிறது. அவற்றைப் படித்து பயன் பெறுங்கள்.

|

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மட்டும் இல்லை. அவர்களின் நோயெதிர்ப்பு சக்திகளை வலுப்படுத்தும் ஆன்டி பாடிகளும் இதில் உள்ளன. எனவே தான் தாய்ப்பால் குடித்த குழந்தைகளை எந்த நோயும் அண்டாது என்பார்கள். இந்த ஆன்டி பாடிகள் இயற்கையாகவே தொற்று எதிர்ப்பு பொருளாகவும், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு பொருளாகவும் செயல்படுகிறது. எனவே தான் பிறந்த குழந்தைக்கு ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

breast milk benefits in tamil

இந்த தாய்ப்பாலை கொண்டு நிறைய சிகிச்சைகள் அளிக்கும் திட்டத்தை மருத்துவமனைகள் பயன்படுத்துகின்றன. இதைத் தவிர இந்த தாய்ப்பாலைக் கொண்டு சின்னஞ் சிறிய உடல் உபாதைகளை வீட்டிலேயே சரி செய்யலாம். வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எச்சரிக்கை

எச்சரிக்கை

நீங்கள் இந்த தாய்ப்பாலை மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் சட்டப் பூர்வமான தாய்ப்பால் வங்கியிலிருந்து பெறலாம். ஏனெனில் இங்கே அதை பாதுகாப்பாக பதப்படுத்தி வைத்திருப்பர். எனவே இவை பாதுகாப்பானதாக இருக்கும். அதே நேரத்தில் தாய்ப்பால் தீவிர பாக்டீரியல் மற்றும் பூஞ்சை தொற்றான ஸ்ட்ரீப்டோகோக்கஸ், ஸ்டேஃபிளோகோகஸ் மற்றும் கேண்டிடா (ஈஸ்ட்), அதே நேரத்தில் வைரல் தொற்றான சைட்டோமெலகோவைரஸ் (CMV), ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ், மற்றும் மனித இம்யூனோ நியுரோபிசிசி வைரஸ் (எச்.ஐ.வி) போன்ற வைரஸ் தொற்றுக்களை கொண்டிருக்கலாம். சுத்தமான ப்ரஷ்ஷான தாய்ப்பாலை காது, கண்களில் ஊற்றும் போது அப்பகுதியில் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே தாய்ப்பாலை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக பயன்படுத்துவது நல்லது.

தாய்ப்பால் பயன்கள்

தாய்ப்பால் பயன்கள்

இந்த தாய்ப்பாலை கொண்டு சின்ன சின்ன உடல் உபாதைகளை சரி செய்வது நம் பாட்டி காலத்திலிருந்து இருந்து வந்தது. ஆனால் சந்ததிகள் மாற மாற நாம் அதன் முக்கியத்துவத்தை அறியாமல் விட்டு விட்டோம். இந்த தாய்ப்பாலை கொண்டு குணப்படுத்தும் முறை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டதில்லை. ஆனால் இதனால் அதிகளவில் பக்க விளைவுகளும் இல்லை. நீங்கள் இந்த முறையை மேற்கொள்ள நினைத்தால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று பின் செய்வது நல்லது.

எதற்கெல்லாம் பயன்படும்?

எதற்கெல்லாம் பயன்படும்?

தாய்ப்பால் குழந்தையின் உணவுக்காக என்று மட்டும் நினைத்தால் அது மிகப்பெரிய தவறு. அதன்மூலம் பெரியவர்களான நமக்கும் மருந்தாகப் பயன்படும். அப்படி எந்தெந்த விஷயங்களுக்கு இந்த தாயப்பாலை மருந்தாகப் பயன்படுத்தலாம் என்பதைப் பார்க்கலாம்.

1. கண், காது தொற்று சரியாக

2. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க

3. மருக்கள் மறைய

4. தோல் அரிப்பு, மதமதப்பு போக்க

5. மார்பகக் காம்பு புண்கள்

6. சரும மாய்ச்சரைஸர்

7. சுற்றுப்புறத் தொற்று நீங்க

8. தொண்டைப்புண்

9. ஸ்கின் கிளன்சராக

10. லென்ஸ் கிளீனர்

11. தீக்காயங்கள் குணமடைய

12. அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு

என பல்வேறு வகைகளில் இந்த ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய தாய்ப்பால் பயன்படுத்தப்படுகிறது.

காது, கண் தொற்று

காது, கண் தொற்று

சில மக்களிடையே தாய்ப்பால் காது, கண்களில் ஏற்படும் தொற்றை குணப்படுத்துகிறது என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. கண்கள் சிவத்தல் போன்றவற்றிற்கு இது மருந்தாக செயல்படுகிறது என்கின்றனர்.

காயங்கள்

காயங்கள்

வெட்டு காயங்கள், எரிந்த சருமம், காயங்கள் போன்றவற்றை தொற்றுகள் ஏற்படாமல் தடுத்து குணப்படுத்த உதவுகிறது. வெட்டுக் காயங்களின் மேல் சில துளிக்ள தாய்ப்பாலை விட்டு வந்தால் விரைவில் குணமடையும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்தல்

நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்தல்

உங்களுக்கு சலதோஷம் மற்றும் காய்ச்சல் போன்றவை ஏற்பட்டால் தாய்ப்பால் குடித்தால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து விரைவில் குணமாகும் என்கின்றனர்.

பாலுண்ணி மற்றும் மருக்கள்

பாலுண்ணி மற்றும் மருக்கள்

உங்கள் பாலுண்ணி மற்றும் மருக்களில் சிறுதளவு தாய்ப்பாலை தடவி வந்தால் சீக்கிரமாக அது உலர்ந்து உதிர்ந்து விடும் என்கிறார்கள்.

அரிப்பு மற்றும் மதமதப்பு

அரிப்பு மற்றும் மதமதப்பு

பூச்சிக்கடி, தேனீக்கள் கெட்டு, சின்னம்மை, விஷக்கடி, விஷச்செடி இவற்றால் ஏற்படும் அரிப்பு மற்றும் மதமதப்பு இவற்றை போக்க தாய்ப்பால் உதவுகிறது.

மார்பக காம்பு புண்கள்

மார்பக காம்பு புண்கள்

புண்ணான மார்பக காம்புகளில் சில துளிகள் மார்பக பாலை தடவும் போது வலி மற்றும் தொற்று குணமாகிறது.

சரும மாய்ஸ்சரைசர்

சரும மாய்ஸ்சரைசர்

வறண்ட சருமம் மற்றும் எக்ஸிமா போன்ற சரும பிரச்சினைகளை போக்க பயன்படுகிறது. வெடிப்புற்ற உதடுகள், குழந்தைக்கு ஏற்படும் டயப்பர் ரேஸ், குழந்தையின் தலையில் ஏற்படும் சரும உதிர்வு போன்றவற்றிற்கும் தாய்ப்பால் பலனளிக்கின்றனர் என்கின்றனர் சிலர்.

சுற்றுப்புற தொற்று

சுற்றுப்புற தொற்று

சுற்றுப் புறத்தில் இருந்து ஏற்படும் தொற்று களையும் எதிர்த்து போரிடுகிறது. தூசி மற்றும் மாசுக்களால் உண்டாகும் அழற்சிக்கு தாய்ப்பால் சிறந்த மருந்தாக இருக்கும்.

தொண்டை புண்

தொண்டை புண்

தாய்ப்பாலை தொண்டையில் படும் படி கொப்பளித்து வந்தால் தொண்டை புண் குணமாகும். எப்பேர்ப்பட்ட தொண்டைப் புண், தொண்டை வலியும் குணமாகிவிடும்.

சரும சுத்தப்படுத்தி

சரும சுத்தப்படுத்தி

மேக்கப் ரீமுவல் மற்றும் பருக்கள் போன்றவற்றை போக்க சரும க்ளீன்சர் மாதிரி செயல்படுகிறது.

காண்டாக்ட் லென்ஸ் க்ளீனர்

காண்டாக்ட் லென்ஸ் க்ளீனர்

தாய்ப்பால் காண்டாக்ட் லென்ஸ் க்ளீனராகவும் பயன்படுகிறது. காண்டக்ட் லென்ஸை சுத்தம் செய்ய ஏதாவது ஒரு கெமிக்கல் கலந்த லோஷனை விடவும் தாய்ப்பால் சிறந்தது.

தாய்ப்பால் உணவு

தாய்ப்பால் உணவு

இயற்கையாகவே தாய்ப்பால் இனிப்பாகவும் சுவையாகவும் இருக்கும். உங்கள் குழந்தைக்கு திட உணவுப் பொருட்களை ஆரம்பிக்கும் போது அவர்கள் எளிதாக சாப்பிட உணவுடன் தாய்ப்பாலை கலந்து கொடுக்கலாம். இதை மாட்டுப் பால் மற்றும் ஆட்டுப் பாலிற்கு கூட சிலர் பயன்படுத்துகின்றனர்.

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவு, வறட்சியில் ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கான உணவு, அழற்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதய நோய்கள் மற்றும் சீறுநீரக செயலிழப்பு, உணவு உட்கொள்ள பிரச்சினை இருப்பவர்களுக்கு தாய்ப்பால் பயன்படுகிறது.

நோயெதிர்ப்பு சக்தி

நோயெதிர்ப்பு சக்தி

தாய்ப்பால் புற்று நோய் நோயாளிகளுக்கு, உறுப்பு மாற்று சிகிச்சை பெற்றவர்களுக்கு, நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு பயன்படுகிறது.

தீக்காயம்

தீக்காயம்

நெருப்பால் பாதிக்கப்பட்ட சருமம் விரைவில் குணமாகப் பயன்படும். தீக்காயத்தின் மீது தாய்ப்பாலை காட்டனில் நனைத்து மேலே வைக்கவும்.

நெருப்பால் பாதிக்கப்பட்ட சருமத்தை குணப்படுத்த பயன்படுகிறது.

அறுவை சிகிச்சை நோயாளிகள்

அறுவை சிகிச்சை நோயாளிகள்

குடல் அறுவை சிகிச்சைக்கு பிறகு போதுமான ஊட்டச்சத்துக்காக தாய்ப்பாலை உணவாக நோயாளிகளுக்கு கொடுக்கின்றனர்.

தடுப்பு மருந்து

தடுப்பு மருந்து

கிரோன் நோய், பெருங்குடல் அழற்சி மற்றும் ஒவ்வாமையை தடுக்க தாய்ப்பால் வழங்கியிலிருந்து பயன்படுத்துகின்றனர்.

குறிப்புகள்

குறிப்புகள்

நீங்கள் சுத்தமான தாய்ப்பாலை கண் மற்றும் காதில் உள்ள திறந்த காயங்களுக்கு தடவினால் நிலைமை இன்னும் மோசமாகக் கூடும். அதிகமான தாய்ப்பால் சுரப்பு இருந்தால் அதை சேகரித்து பிரிட்ஜில் வைத்து கூட உங்கள் குழந்தைகளுக்கு பசிக்கும் போது கொடுக்கலாம். இன்னும் தாய்ப்பால் மீதமிருந்தால் தாய்ப்பால் வங்கிகளுக்கு தானமாக கொடுக்கலாம். இது குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளும் பயனடைக் கூடிய நன்கொடையாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Breast Milk Uses and Home Remedies

here we are giving the list of breastmilk benefits, read and use this tips.
Desktop Bottom Promotion