Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
ஐந்து வயதில் குழந்தை பெற்ற உலகின் இளம் தாய், உண்மை சம்பவம்!
சமீபத்தில் டெல்லியை சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தை 25 வயது ஆண் மகனுக்கு நிகரான பாலியல் வளர்ச்சி பெற்றிருந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இதை வயதுக்கு மிஞ்சிய வளர்ச்சி என கூறுகிறார்கள். மருத்துவ ரீதியில் ஆங்கிலத்தில் இது "Precocious puberty" என குறிப்பிடப்படுகிறது.
இதுவே உங்களுக்கு ஆச்சரியமாக இருந்தால், வெறும் ஐந்து வயது சிறுமி, ஓர் குழந்தையை பெற்றெடுத்த சம்பவத்தை பற்றி அறிந்தால் நீங்கள் எவ்வளவு ஆச்சரியப்படுவீர்கள். ஆம், உண்மை தான். பெருவை (Peru) சேர்ந்த ஓர் இளம் குழந்தையின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் தான் இது.

1939
1939-ம் ஆண்டு பெருவை சேர்ந்த ஐந்து ஆண்டு ஏழு மாத வயது நிரம்பிய சிறுமி ஓர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். உலகிலேயே இவர் தான் இளம் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
Source

லீனா மெடினா
லீனா மெடினா எனும் அந்த சிறுமி பெருவில் உள்ள டிக்ரபோ எனும் ஓர் சிறிய ஊரில் பிறந்தவர். திடீரென லீனாவிற்கு வயிறு அசாதாரணமாக வீக்கமடைந்தது. இதனால் அச்சமுற்ற பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
Source

7 மாத கர்ப்பம்
அப்போது தான் லீனா ஏழு மாதம் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இது, மருத்துவர்கள் மற்றும் பெற்றோரை மிகவும் ஆச்சரியமடைய வைத்தது.
Source

மருத்துவர். ஜிரார்டோ
மருத்துவர். ஜிரார்டோ லோசாடா என்பவர் தான் லீனாவிற்கு பால் சுரப்பி, பாலியல் உறுப்புகள் முழுமையாக வளர்ந்திருப்பதை கண்டறிந்தார்.
Source

பிரசவம்
1939-ம் ஆண்டு மே மாதம் 14-ம் நாள் லீனாவிற்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவம் பார்த்த மருத்துவர் ஜிரார்டோ பெயரையே அந்த குழந்தைக்கு வைத்தனர்.
Source

தாய் - அக்கா
ஜிரார்டோ வளரும் வரை தனது தாயை அக்கா என்று தான் நினைத்து வந்தார். தனது பத்து வயதில் தான் லீனா தனது அக்கா அல்ல, தாய் என்பதை ஜிரார்டோ அறிந்தார்.
Source

நாற்பது வயதில் மரணம்
1979 வரை ஜிரார்டோ நல்ல ஆரோக்கியமாக தான் இருந்தார். பிறகு எலும்பு நோய் தாக்கத்தால் நாற்பது வயதில் மரணமடைந்தார்.
Source

லீனா தந்தை கைது
லீனாவின் தந்தையை கற்பழிப்பு வழக்கில் போலீஸ் முதலில் கைது செய்தனர். பிறகு, போதியளவு ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டார். லீனாவின் வாழ்க்கை வரலாறு டாக்குமெண்டரியாக எடுக்கப்பட்டுள்ளது. இவரது எக்ஸ்-ரே, புகைப்படங்கள் போன்றவை இன்றளவும் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
Source



Click it and Unblock the Notifications











