Latest Updates
-
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
உங்க குழந்தைக்கு பல் முளைக்கிறதா? அப்ப வெண்ணிலா சாற்றை இப்படி யூஸ் பண்ணா போதுமாம்!
குழந்தைகளுக்கு பல் முளைக்கும் போது நிறைய அசெளகரியத்தை சந்திக்கின்றனர். அதனால் தான் குழந்தைகள் பல் முளைக்கும் போது எதையாவது எடுத்து கடித்திக் கொண்டே இருப்பார்கள். குழந்தைக்கு பல் முளைப்பது அது அவர்களை எரிச்சலூட்டுகிறது. இந்த பல் வலி மற்றும் அசெளகரியத்தை போக்க வெண்ணிலா சாறு உதவுகிறது.
வெண்ணிலா சாற்றின் மருத்துவ பயன்பாடு நீண்ட மற்றும் நிலையான வரலாற்றைக் கொண்டுள்ளது. எனவே வெண்ணிலா சாற்றைக் கொண்டு உங்கள் குழந்தைக்கு பல் துலக்குவது நல்லதா கெட்டதா என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.

வெண்ணிலா சாற்றின் எந்த பண்புகள் பற்களுக்கு நல்லது
வெண்ணிலா சாற்றின் வாசனை இனிமையான ஒன்றாக இருப்பதால் நீங்கள் நிம்மதியாக உணர முடியும். பல் முளைக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி பதட்டம் இருப்பதால் வெண்ணிலா சாற்றை பயன்படுத்துவது ஒரு ரிலாக்ஸான தீர்வை வழங்குகிறது.
வெண்ணிலா சாறு ஒரு இயற்கையான தளர்த்தியாக செயல்படுகிறது. வெண்ணிலா சாறு குழந்தைகளை இரவு நேரத்தில் நிம்மதியாக உறங்க வைக்கும். இது மூளைச் செல்களை அமைதிப்படுத்துகிறது. பல் முளைக்கும் குழந்தைகளை நிதானமாக உணர வைக்கும்.
வெண்ணிலா சாறு ஒரு வலி நிவாரணி
யூஜெனால், சாலிசிலிக் அமிலம் மற்றும் கூமரின் போன்ற இராசயனங்கள் வெண்ணிலா சாற்றில் இருப்பதால் இது ஒரு இயற்கையான வலி நிவாரணியாக செயல்படுகிறது. இது பல் வலியில் இருந்து நிவாரணம் வழங்குகிறது. பல் முளைக்கும் குழந்தைகளுக்கு வெண்ணிலா சாற்றை தேய்ப்பதன் மூலம் நிவாரணம் பெற முடியும். வெண்ணிலா சாறு குழந்தைகளின் பற்களைச் சுற்றியுள்ள நியூரான்களை அமைதிப்படுத்தி வலியை குறைக்கிறது.
வெண்ணிலா சாறு குணப்படுத்துவதை ஊக்குவிக்கிறது
வெண்ணிலா சாற்றில் காணப்படும் மற்றொரு முக்கியமான கலவை வெண்ணிலின் ஆகும். இது நிறைய ஆன்டி ஆக்ஸிடன்களின் வளமான ஆதாரமாக செயல்படுகிறது. இது குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வெண்ணிலா சாற்றில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பற்களில் ஏற்படும் காயங்களை நிர்வகிக்க உதவுகிறது.
வெண்ணிலா சாற்றின் அழற்சி எதிர்ப்பு பண்புகள்
வெண்ணிலா சாற்றில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது. இது ஈறுகளின் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. பல் முளைக்கும் குழந்தைகளுக்கு வெண்ணிலா சாற்றை தேய்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வெண்ணிலா சாறு வயிற்று வலிக்கு உதவுகிறது
பல் முளைக்கும் குழந்தைகளுக்கு அதிகமாக எச்சில் வடியும். அதிகப்படியாக எச்சில் வடிப்பது வயிற்று அசெளகரியத்தையும் காட்டுகிறது. அதே மாதிரி பல் முளைக்கும் குழந்தைகளுக்கு எதையாவது வாயில் வைத்து மெல்ல வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும்.
வாயில் போட்டு எதையாவது விழுங்கி விட்டால் வயிற்று வலி மற்றும் செரிமான சிரமம் உண்டாக வாய்ப்புள்ளது. வெண்ணிலா சாற்றில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் வயிற்று வலி அமைதிப்படுகிறது. பாக்டீரியா தொற்றுக்களை தடுக்கிறது.
வெண்ணிலா சாற்றை பற்களுக்கு எப்படி பயன்படுத்த வேண்டும்
குழந்தைகளுக்கு பல் முளைக்கும் போது விரல்களில் சிறிது வெண்ணிலா சாற்றை எடுத்து குழந்தைகளின் ஈறுகளில் தேய்க்க வேண்டும். இப்பொழுது வெண்ணிலா சாற்றில் உள்ள யூஜெனால் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
வெண்ணிலா சாறு பாதுகாப்பான ஒன்றா?
வெண்ணிலா சாற்றை பாதுகாப்பான அளவில் மட்டுமே குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டும். உங்கள் குழந்தையை அமைதிப்படுத்த சில துளிகள் போதும். FDA இன் படி, வெண்ணிலா சாற்றில் 35% மட்டுமே ஆல்கஹால் உள்ளது. எனவே இதை சிறிய அளவில் மட்டுமே பயன்படுத்துங்கள்.
மேலும் அதிக வெண்ணிலா சாற்றை பயன்படுத்தாதீர்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் குழந்தைகள் நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.
வெண்ணிலா சாற்றின் பயன்கள்
வெண்ணிலா சாறு அமைதியற்ற குழந்தையை அமைதிப்படுத்த உதவுகிறது. இந்த வெண்ணிலா சாற்றில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், வலி நிவாரணி பண்புகள் உள்ளன. இது ஈறுகள், பல்வலி, வயிற்று வலி போன்றவற்றிற்கு உதவுகிறது. எனவே குழந்தைகளுக்கு போதுமான அளவில் பயன்படுத்தி பலன் பெறுங்கள்.



Click it and Unblock the Notifications












