Latest Updates
-
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்
பெற்றோர்களே! மதத்தை பற்றி உங்க குழந்தைகளுக்கு இந்த விஷயங்கள கட்டாயம் சொல்லிக் கொடுக்கணுமாம்!
குழந்தை பருவம் என்பது மிகவும் அழகானது. அந்த வயதில் குழந்தைகள் கற்றுக்கொள்ளும் விஷயங்கள், அவர்களின் வாழ்வின் எல்லை வரைகூட மறக்காமல் இருக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு விஷயங்களையும் பெற்றோர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால், மதத்தை பற்றி கற்றுக்கொடுக்க யோசித்து இருக்கிறீர்களா?
எல்லா பெற்றோர்களும் தாங்கள் எந்த மதத்தை பின்பற்றுகிறோமோ, அந்த மதத்தை பற்றி சொல்லிக்கொடுப்பார்கள். ஆனால், நீங்கள் பின்பற்றும் மதத்தைப் பற்றி உங்கள் பிள்ளைக்குக் கற்பிப்பதற்கு முன், உலகில் உள்ள பல்வேறு வகையான மதங்களைப் பற்றி அவர்களுக்கு கற்பிப்பது முக்கியம். இது மதத்தை பற்றியும் மனிதர்களை பற்றியும் குழந்தைகளுக்கு புரிந்துகொள்ள உதவும்.

குழந்தைக்கு மதங்கள், அவர்களின் நம்பிக்கை, கொள்கை, சித்தாந்தம் மற்றும் அவை அனைத்தையும் ஏன் மதிக்க வேண்டும் என்பது பற்றிய சுருக்கமான யோசனையை கொடுங்கள். ஒவ்வொரு மதத்தின் அடிப்படையையும், அவைகளை ஒன்றுக்கொன்று வித்தியாசப்படுத்துவதையும் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுங்கள்.
மற்ற மதங்களிலிருந்து கற்றுக்கொள்வதை தடுக்காதீர்கள்
வளரும் பிள்ளைகளுக்கு மதங்களை பற்றி எந்த விஷயமும் தெரியாது. உங்கள் பிள்ளை உங்கள் சொந்த மதத்தை பற்றி மட்டுமே தெரிந்துகொள்ள வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்காதீர்கள். மற்ற மதங்களைப் பற்றி கற்றுக் கொள்வதைத் தடுக்காதீர்கள்.
அவர்கள் எல்லா மதங்களையும் பற்றி தெரிந்துகொள்ளட்டும். மதத்தின் பிற வடிவங்களைப் பற்றி அவர்கள் தங்கள் சொந்தக் கருத்துக்களையும் விருப்பங்களையும் கொண்டிருக்கட்டும். குழந்தைகளின் கருத்து பற்றி அவர்களுடன் நீங்கள் ஆரோக்கியமான விவாதம் செய்யலாம்.
மதத்தின் மீது வெறுப்பு கொள்ளாதீர்கள்
வயது வந்தவராக, எல்லா பெற்றோர்களும் கண்டிப்பாக வெவ்வேறு மதங்களைப் பற்றிய உங்கள் சொந்தக் கருத்துக்களைக் கொண்டிருப்பீர்கள். எந்த விஷயங்களை பற்றியும் உங்கள் சொந்த கருத்தைக் கொண்டிருக்க உங்களுக்கு நிச்சயமாக உரிமை உண்டு. ஆனால், உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள குழந்தையை கட்டாயப்படுத்தாதீர்கள். உங்கள் பிள்ளைக்கு மதம் பற்றிய பாரபட்சமற்ற கருத்தைக் கொடுங்கள்.
பல்வேறு சமய நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்யுங்கள்
ஒரு மதத்தின் உண்மையான விழுமியங்களைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுவதற்காக பல்வேறு மதங்களின் திருவிழாக்களில் பங்கேற்க அவர்களை நீங்கள் ஊக்குவிக்கலாம். பண்டிகை நாளில் பண்டிகையின் முக்கியத்துவம், அது ஏன் கொண்டாடப்படுகிறது, பின்பற்றப்படும் சடங்குகள் என்ன என்பதைப் பற்றிய சில உண்மைகளை நீங்கள் அவர்களுக்கு சொல்லலாம்.
வெவ்வேறு வழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்
மதக் கற்றலை வேடிக்கையாகவும் சுவாரஸ்யமாகவும் ஆக்குவதற்கான மற்றொரு வழி, கோவில்கள், மசூதிகள், ஜெப ஆலயங்கள் போன்ற பல்வேறு வழிபாட்டுத் தலங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வது. இந்த வழிபாட்டுத் தலங்களின் வெவ்வேறு கட்டிடக்கலை அழகு அனைத்து மதங்களின் மீதும் விருப்பு மற்றும் அன்பின் உணர்வை உருவாக்கும்.
அன்புமும் நம்பிக்கையும்
மனிதகுலத்தின் மீதான அன்பும் நம்பிக்கையும் எல்லாவற்றுக்கும் மேலாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு மதத்தைப் பற்றிக் கற்பிக்கும்போது, சக மனிதர்களிடம் அன்பும் கருணையும் எல்லா மதத்திற்கும் மேலானது என்பதை அவர்கள் மனதில் பதிய வைக்கவும்.
மதத்தின் அடிப்படையில் ஒருபோதும் பாகுபாடு காட்டக்கூடாது. பச்சாதாபம், கருணை, தாராள மனப்பான்மை, கருணை போன்ற மனித மாண்பை ஒவ்வொரு மனிதனுக்கும் அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் பரவ வேண்டும்.



Click it and Unblock the Notifications
