Latest Updates
-
மனிதத் தன்மையற்ற வரலாற்றின் டாப் 10 கொடூரமான அரசர்கள் - முதலிடத்தில் எந்த அரசர் இருக்கிறார் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா?
உங்க குழந்தை மண் சாப்பிடுறாங்களா? அப்போ அதை எப்படி தடுத்து நிறுத்தலாம் தெரியுமா? அவசியம் ட்ரை பண்ணுங்க!
குழந்தைகள் தாங்கள் வளரும் ஒவ்வொரு மாதத்திலும் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். அந்த வகையில் 8-9 மாதங்கள் ஆகும் போது குழந்தைகள் வெவ்வேறு பொருட்களை சாப்பிட ஆரம்பிக்கின்றனர். இந்த சமயத்தில் குழந்தைகள் தங்களுக்கு கிடைத்த அனைத்தையும் வாயில் போடுவது உண்டு.
சில குழந்தைகள் மண் சாப்பிட ஆரம்பிக்கின்றனர். இதை சரியான நேரத்தில் சரி செய்யாவிட்டால் குழந்தையின் உடல்நிலை பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ளது என்று குழந்தை நல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மண்ணில் ஏகப்பட்ட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் கிருமிகள் இருப்பதால் அது குழந்தைகளுக்கு பிரச்சினையை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. எனவே உங்க குழந்தை மண் சாப்பிடுகிறது என்றால் அதை எப்படி தடுத்து நிறுத்தலாம் என அறிந்து கொள்வோம்.
குழந்தை மண் சாப்பிடுவதை நிறுத்த தேவையான வழிகள்
உங்கள் குழந்தையின் ஊட்டச்சத்தை முதலில் சரி பார்க்க வேண்டும்
குழந்தை மண் சாப்பிடுகிறது என்றால் அதற்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை ஒரு முக்கிய காரணமாக அமையலாம். மண் சாப்பிடுவதற்கு கால்சியம் பற்றாக்குறை ஒரு காரணமாக அமைகிறது. எனவே முடிந்த வரை குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவை அளியுங்கள். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை கொடுக்கும் போது அவர்களுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
குழந்தைக்கு வலுக்கட்டாயமாக உணவளிக்க வேண்டாம்
குழந்தைக்கு போதுமான அளவு உணவு கொடுப்பதே சிறந்தது. அவர்களுக்கு அளவுக்கு மீறி உணவு கொடுப்பது உணவின் மீது வெறுப்பை ஏற்படுத்தலாம். எனவே அவர்கள் சாப்பிடுவதற்கு மற்ற பொருட்களை நாடலாம். அவர்களுக்கு பால் பிடிக்கவில்லை என்றால் அதை கொடுக்காதீர்கள். எனவே உங்கள் குழந்தைக்கு பிடித்த உணவுகளிலயே கவனம் செலுத்துங்கள்.
குழந்தைகள் நல மருத்துவரை அணுகுங்கள்
உங்கள் குழந்தை மண் சாப்பிடுவதை தடுக்க அவர்களை குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம். குழந்தையின் உடல்நிலை மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் மருத்துவர் அதற்கேற்ற மருந்துகளை உங்களுக்கு பரிந்துரைப்பார்.
உணவில் ஜிங்க் சேர்த்துக் கொள்ளுங்கள்
உங்கள் குழந்தைக்கு ஜிங்க் நிறைந்த உணவுகளை கொடுப்பது மிகவும் நல்லது. இது உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்க உதவி செய்யும். மருத்துவரின் பரிந்துரை பேரில் ஜிங்க்கை வைட்டமின் மாத்திரையாக கூட எடுத்துக் கொள்ளலாம்.
இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை கொடுங்கள்
இரும்புச் சத்து குறைபாடும் குழந்தை மண் சாப்பிடுவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. எனவே குழந்தையின் உணவில் இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். மருத்துவரின் பரிந்துரை பேரில் இரும்புச் சத்து மாத்திரையாகக் கூட கொடுக்கலாம். உங்கள் குழந்தையின் ஹீமோகுளோபின் அளவை அடிக்கடி சரிபார்த்து வருவதும் நல்லது.
குழந்தையை வீட்டிற்குள்ளேயே விளையாட விடுங்கள்
பெரும்பாலான குழந்தை மண் சாப்பிடுவதற்கு முக்கிய காரணம் வெளியில் அடிக்கடி விளையாடவிடுவது தான். எனவே குழந்தையை வீட்டிற்குள்ளேயே விளையாட விடுங்கள். அவர்களின் ஒவ்வொரு செயலையும் கவனமாக கவனிக்க வேண்டியது அவசியம். குறுநடை போடும் உங்கள் குழந்தையை அடிக்கடி கண்காணிப்பது மிகவும் அவசியம்.
வீட்டை சுத்தமாக பராமரியுங்கள்
வீட்டில் அழுக்கு, தூசி மற்றும் மண் போன்றவை தேங்கி இருந்தால் குழந்தை அதை எடுத்து வாயில் வைக்க நேரிடலாம். எனவே எப்பொழுதும் உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். திரைச்சீலைகள், தரை விரிப்புகள் இவற்றை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
குழந்தையின் கைகளை அடிக்கடி கழுவுவது நல்லது
குழந்தைகள் எதையாவது தொட்டு வாயில் வைப்பது சகஜமான விஷயம் என்றால் கூட குழந்தையின் கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது. சிறு வயதில் இருந்தே அவர்களுக்கு கைகளை கழுவும் பழக்கத்தை சொல்லிக் கொடுங்கள்.
குழந்தைக்கு பல் முளைப்பது
குழந்தைக்கு பல் முளைக்க ஆரம்பித்தவுடன் குழந்தை வாயில் போட்டு எதையாவது மெல்ல ஆரம்பித்து விடும். இதுவும் மண் சாப்பிடுவதற்கு ஒரு காரணமாக அமைகிறது. எனவே குழந்தை வாயில் வைத்து கடிக்க ஏற்ற டீத்தர் பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.
குழந்தைக்கு ஏற்படும் கவலை மற்றும் மன அழுத்தம்
குழந்தைக்கு ஏற்படும் கவலை மற்றும் மன அழுத்தமும் அவர்கள் மண் சாப்பிட ஒரு காரணமாக அமைகிறது. எனவே குழந்தையுடன் நிறைய நேரம் செலவழியுங்கள். குழந்தைக்கு மன அழுத்தம் மற்றும் பதட்டம் அதிகரிக்கும் போது மண், காகிதங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களை சாப்பிட ஆரம்பிக்கின்றனர்.
மன வளர்ச்சி பிரச்சினைகள்
சில குழந்தைக்கு ஏற்படும் மன வளர்ச்சி பிரச்சினைகளும் மண் சாப்பிடுவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. ஆட்டிசம் குறைபாடுகள் போன்றவையும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. எனவே உங்கள் குழந்தையின் மன வளர்ச்சியில் மாற்றம் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.
ஊட்டச்சத்து நிபுணரை சந்திக்கவும்
குழந்தை மண் சாப்பிடுவதற்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை ஒரு முக்கிய காரணமாக அமைவதால் ஊட்டச்சத்து நிபுணரை சந்திப்பது நல்லது. அவர் குழந்தைக்கு இருக்கும் ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் எந்த மாதிரியான உணவு வகைகளை குழந்தைக்கு அளிக்கலாம் போன்ற விஷயங்களை உங்களுக்கு பரிந்துரைப்பார்.



Click it and Unblock the Notifications

