Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
பிள்ளைகளே! உங்க அப்பா மீது நீங்க வைத்திருக்கும் பாசத்தை 'இந்த' வழிகள் மூலம் வெளிப்படுத்தலாமாம்!
பெரும்பாலும் ஒரு குடும்பத்தின் வலுவான தூணாக தந்தை இருக்கிறார். அவர் தனது குடும்பத்தை பாதுகாப்பதற்கும் அவர்களின் வாழ்க்கையின் இன்பங்களை வழங்குவதற்கும் அயராது உழைக்கிறார். தன் குடும்பத்தின் தேவையை அறிந்து செயல்படுவார்.
எந்தவொரு மனிதனைப் போலவே, ஒவ்வொரு தந்தைக்கும் உடல்நலம், ஆசை, நிதி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என பல பிரச்சனைகள் இருக்கும். குடும்பத்திற்கு தலைவனாக இருக்கும் தந்தை, அவரது தொழில் அல்லது பணி வாழ்க்கையினால் அடிக்கடி அழுத்தங்களுக்கு ஆளாகலாம்.

உங்கள் தந்தையின் இந்த மன அழுத்தமான வாழ்க்கையை நீங்கள் மாற்றலாம். உங்கள் தந்தையுடனான அந்த பிணைப்பை வலுப்படுத்தவும், அவரிடம் உங்கள் அன்பைக் காட்டவும் சில வழிகள் உள்ளன. அவை என்னென்ன வழிகள் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
அர்ப்பணிக்கப்பட்ட குடும்ப நேரம்
உங்கள் தந்தை தனது குடும்பத்தை பாதுகாக்க நாள் முழுவதும் வேலை செய்கிறார். மேலும் அவரது வேலையில் ஏற்ற தாழ்வுகளைச் சந்திக்கிறார் மற்றும் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகிறார். அதே நேரத்தில் அவர் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.
ஒருவேளை தந்தை வேலையிலிருந்து வந்த பிறகு, அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து புதிய விஷயங்களைப் பற்றி விவாதிக்கலாம். பெரும்பாலும், யாரோ ஒருவர் சொல்வதைக் கேட்பது அவர்களுடன் இணைந்திருப்பதை உணரவும். இது அவர்களின் மீது அக்கறை காட்டுவதாகவும் உணர வைக்கிறது.
முயற்சிகளைப் பாராட்டுங்கள்
பாராட்டு என்பது ஒரு நபரின் முயற்சிகள் அங்கீகரிக்கப்பட்டதாகவும் தங்களை சிறப்பாகவும் உணர வைக்கிறது. மேலும் மதிப்புமிக்க உணர்வைத் தருகிறது என்று கூறப்படுகிறது. உங்கள் தந்தை உங்களுக்காக ஒரு அழகான வீட்டை உருவாக்கினாலோ, அல்லது சைக்கிள் மற்றும் பைக் போன்ற வாகனங்களை வாங்கிக் கொடுக்கலாம்.
குடும்பத்திற்கு அவர் செய்த இதயப்பூர்வமான பங்களிப்பிற்காக வேண்டுமென்றே அவருக்கு நன்றி சொல்லுங்கள். அவரின் உழைப்பினால் உங்களுக்கு கிடைத்த பொருட்களுக்காக அவரின் முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவியுங்கள்.
ஒரு சமூக வட்டத்தை உருவாக்கவும்
பெரும்பாலும் குடும்பத்தின் ஆண் உறுப்பினர் பணிச்சுமை மற்றும் குடும்ப சமநிலை ஆகியவற்றால் மிகவும் பிஸியாகவே இருக்கிறார். இதனால், அவர்கள் தனக்காக நேரத்தை செலவிடுவதைத் தவிர்க்கலாம். அவர் விரும்பிய பொழுதுபோக்குகளை செய்ய அவரை ஊக்குவிக்கலாம்.
குடும்பமாக, பள்ளி அல்லது கல்லூரியில் இருந்து அவரது நண்பர்களுடன் சந்திப்பை ஏற்படுத்துவது போன்ற உற்சாகமான விஷயங்களுடன் உங்கள் தந்தை மீண்டும் ஊக்குவிக்கலாம். மேலும் உங்கள் தந்தை தரமான நேரத்தை செலவிட ஒவ்வொரு வாரமும் ஒரு நாளை நீங்கள் திட்டமிட வேண்டும்.
உடல் தொடுதல்
கடைசியாக உங்கள் தந்தையை எப்போது கட்டிப்பிடித்தீர்கள்? உங்கள் தந்தை மனம் வருத்தமடையும் நேரம் அல்லது சோர்ந்துபோயி உட்காரும் இடங்கள் இருக்கலாம். அந்த நேரங்களில் அவரை கட்டிப்பிடியுங்கள். அவருடைய அன்புக்குரியவர்களின் அரவணைப்பை எப்படி உணர வைப்பது என்பதற்கான சில யோசனைகளை நீங்கள் கொண்டு வர வேண்டும்.
கட்டிப்பிடிப்பதற்குப் பதிலாக, வீட்டிலோ அல்லது ஒரு தொழில்முறை நிபுணரிடமிருந்து அவரின் உடல் அசதியை போக்க மசாஜ் செய்ய சொல்லலாம். பரிசு கொடுப்பது மற்றும் ஒருவருடன் நேரத்தை செலவிடுவது போன்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காதல் மொழிகளை நீங்கள் அவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். உங்கள் தந்தைக்கும் அவரது நண்பர்களுக்கும் வார இறுதி கிரிக்கெட்டில் போட்டி வைத்து நீங்கள் அவரை ஆச்சரியப்படுத்தலாம்.
இறுதிக்குறிப்பு
தந்தை என்பவர் நம்மைப் போன்ற ஒரு தனிமனிதர். அவர் தனது முயற்சி, அன்பு, அக்கறையுடன் தனது குடும்பத்தை நேசிக்கவும், பராமரிக்கவும், பாதுக்காகவும் உழைக்கிறார். அதற்காக வாழ்கிறார். அவரது குடும்பமாக நீங்கள் அவருக்கு எதற்காக நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்பதை அவருக்குத் தெரிவிக்கலாம். ஏனெனில், அதுவே அவர்களின் மன ஆரோக்கியத்திற்கான மிகப்பெரிய சிகிச்சையாகும்.



Click it and Unblock the Notifications
