Latest Updates
-
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?
பெற்றோர்களே! உங்க குழந்தைங்க வாழ்க்கையில தோல்வியை சந்திக்கும்போது...நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
தொடர்ந்து முயற்சி செய்தால் மட்டுமே வெற்றி சாத்தியம். தோல்வி என்பது கற்றல் அனுபவம் சார்ந்தது. ஏனெனில், அது குழந்தைகள் தங்கள் தற்போதைய திறன்களை எங்கு மேம்படுத்தலாம் மற்றும் எப்படி விரிவுபடுத்தலாம் என்பதை பற்றி யோசிக்க வைக்கிறது.
இன்றைய நாளில் பெரும்பலான குழந்தைகள் தோல்வியை சந்திக்க பயப்படுகிறார்கள். குழந்தைகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதை விட முக்கியமான குறிக்கோள் வாழ்க்கையை பற்றிய கற்றல் பாடங்களை தெரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகள் சாதனையாளராக வெற்றியாளராக வளர, பெற்றோர்கள் தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவ வேண்டும்.

மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், தோல்வி என்பது ஒரு சிறந்த அறிவுறுத்தல் தருணம். தோல்விகளை சந்திக்கும்போது முடங்கிபோயி அப்படியே உட்கார்ந்திரக்கூடாது. தோல்விகள் சிறிய அழுத்தங்கள் மற்றும் பின்னடைவுகளை எவ்வாறு கையாள்வது என்பதை உங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். இது வாழ்க்கையில் அவர்கள் வெற்றி பாதையை நோக்கி செல்ல ஊக்குவிக்கும்.
உங்கள் குழந்தைக்கு தோல்வி ஏன் முக்கியமானது? அதை வெற்றியாக மாற்றுவதற்கான உதவிக்குறிப்புகள் பற்றி ஒவ்வொரு பெற்றோரும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
தோல்வியில் இருந்து கற்றல்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கற்றல் செயல்முறையை கற்றுக்கொடுக்க உதவுவதற்காக சிரமங்கள், முயற்சிகள் மற்றும் தவறுகள் பற்றிய நேர்மறையான அணுகுமுறைகளை முன்மாதிரியாகக் கொள்கிறார்கள். ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பலனளிக்கும் வேலை, வளர்ச்சி மற்றும் கற்றல் அவசியம்.
உதவி கேட்பது, புதுமையான அணுகுமுறைகளைப் பயன்படுத்துதல் மற்றும் முன்னேறுவதற்கு தோல்விகளை சந்திப்பது பொதுவானது. இது வெற்றிக்கு வழிவகுக்கும் முறைகளை வலியுறுத்துகிறது. இருப்பினும், தோல்வி என்பது வெற்றிக்கான படிக்கெட்டுகள் என்பதை குழந்தைகள் புரிந்துகொண்டால், வெற்றியின் புதிய உயரங்களுக்கு உயர முடியும்.
தோல்விகளை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்
உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் வாழ்க்கையில் சந்தித்த தோல்விகளை பற்றியும், அதன்பிறகு அடைந்த வெற்றியை பற்றியும் விரிவாக கூற வேண்டும். நீங்கள் வாழ்க்கையில் சந்தித்த கடினமான பக்கங்களையும் உங்கள் குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டும்.
பல தடைகளை தாண்டி, வாழ்க்கையிலும் தொழிலும் நீங்கள் எவ்வாறு வெற்றி பெற்றீர்கள் என்பதை பலமுறை உங்கள் குழந்தைகளுக்கு கூறும்போது, அவர்களும் தொடர்ந்து முயற்சி செய்ய ஊக்கமாக இருப்பார்கள். இதனால், அவர்கள் வாழ்க்கையில் வரும் தோல்விகளை எளிதாக கடந்து வெற்றிக்கான பாதையை நோக்கி பயணிப்பார்கள்.
திறமையாக ஏதாவது செய்யுங்கள்
உங்கள் குழந்தைகளுடன் திறமையான செயல்களில் ஈடுபடுங்கள். அவர்களுடன் படங்களுக்கு வண்ணம் தீட்டவும், அவர்களின் பொம்மையை அலங்கரிக்கவும் அல்லது களிமண்ணை கொண்டு பொம்மைகள் உருவாக்கவும் செய்யுங்கள். இதுபோன்ற திறமையான செயல்பாடுகளில் உங்கள் குழந்தைகளை ஈடுபடுத்தி, அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.
உங்கள் குழந்தையுடன் பயனுள்ள ஒன்றைச் செய்வது, கற்றலுக்கு வரம்பு இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தும். இந்த கற்றல் பழக்கத்தை முன்மாதிரியாக்குவது, புதிய திறன்களைத் தக்கவைத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவும்.
உங்கள் பலம் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்
குழந்தைகளைப் பொறுத்தவரை, அவர்களின் பலத்தைப் பற்றி அறிந்து கொள்வது நீண்ட காலத்திற்கு அவர்கள் சிறந்து விளங்க உதவுகிறது. வாழ்க்கையின் ஆரம்பத்தில் அவர்களின் தொழில்முறை இலக்குகளைக் கண்டறிய இது அவர்களுக்கு உதவும். இளமை பருவத்தில், அவர்களின் குறைபாடுகள் அவர்கள் யார் என்பதை தீர்மானிக்கவில்லை என்பதை அவர்கள் கண்டுபிடிப்பார்கள்.
வெற்றிக்கு தோல்வி அவசியம் என்பதையும், ஏதாவது தோல்வியடைந்த பிறகும், இன்னும் முன்னேற முடியும் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்வார்கள். அவர்களுக்குத் தேவையானது பெற்றோரான உங்களின் பாராட்டு மற்றும் ஆதரவு வார்த்தைகள் மட்டுமே.
அவர்கள் தோல்வியில் இருந்து மீளட்டும்
உங்கள் குழந்தைகள் தங்களுக்காகச் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்களை அவர்களுக்காகச் செய்வதற்குப் பதிலாக, அவர்களை ஊக்குவித்து வழிநடத்துவது பெற்றோராகிய உங்கள் கடமையாக இருக்க வேண்டும். திட்டமிட்டபடி விஷயங்கள் நடக்காதபோது அல்லது ஒரு சிரமத்தை முன்வைக்கும்போது குழந்தைகள் சமாளிக்கவும் பின்னடைவு திறன்களை அடிக்கடி பயிற்சி செய்யவும் வாய்ப்பு உள்ளது.
தசைகளைப் போலவே, நமது சமாளிக்கும் வழிமுறைகள் நமக்குத் தேவைப்படும் வரை எவ்வளவு வலிமையானவை என்பதை நாம் உணரவில்லை. தோல்வியில் இருந்து உங்கள் குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம் அவர்களை வலிமையக்கி, இன்னும் பலமாக அவர்களை முன்னேற வைக்கும்.



Click it and Unblock the Notifications