Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
உங்க டீனேஜ் பிள்ளை எப்பவும் கோபப்படுறாங்களா? அப்ப இந்த விஷயங்கள பண்ணுங்க... இனி கோபப்பட மாட்டாங்க!
உங்களுக்கு டீனேஜ் வயதில் பிள்ளை இருக்கிறதா? அவர்கள் எப்போதும் கோபமாக இருக்கிறார்களா? அவர்களை சமாளிக்க உங்களால் முடியவில்லையா? டீனேஜ் வயது நடத்தை மிகவும் கணிக்க முடியாதது. மகிழ்ச்சி, தனிமையில் இருந்து எரிச்சல் மற்றும் கோபம் என எல்லாத் திசைகளிலும் அவர்களின் மனநிலை மாறிக்கொண்டு இருக்கும். இந்நிலையில், அவர்களால் தெளிவாக யோசிக்க முடியாது.
டீனேஜ் வயதில் பிள்ளைகள் பல உணர்ச்சிகளைக் கடந்து செல்கின்றனர். இந்த நேரத்தில், ஒரு சிறிய பிரச்சனை கூட அவர்களின் மனநிலையை மாற்றி, சிக்கல்களை உருவாக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தங்கள் டீனேஜ் பிள்ளைகளை பெற்றோர்கள்தான் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் டீனேஜ் பிள்ளையின் கோபமான நடத்தையைச் சமாளிக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில பயனுள்ள உதவிக்குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

ஏற்கனவே கோபத்தில் இருக்கும் இளைஞர்களை திட்டுவது அல்லது அடிப்பது சரியான வழி அல்ல. இதுபோன்ற சூழ்நிலைகளில், நீங்கள் அமைதியாக அவர்களின் கோபத்தை சமாளித்து வெளியேற செய்ய வேண்டும். அவர்களுடன் தனித்தனியாக பேசுங்கள் அல்லது சிறிது நேரம் கழித்து அவர்களை எரிச்சலூட்டிய விஷயங்கள் பற்றி விசாரிக்கலாம். இந்த வழியில் உங்கள் டீன் ஏஜ் பிள்ளையை அடிக்கடி தூண்டும் அல்லது எரிச்சலூட்டும் சில முக்கியமான விஷயங்களை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
கோரிக்கையையும் நிறைவேற்றுவதை நிறுத்துங்கள்
உங்கள் டீனேஜ் பிள்ளை கேட்பதையெல்லாம் நீங்கள் நிறைவேற்றினால், அது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம். கேட்டது எல்லாம் கிடைக்கிறது என்ற எண்ணத்தில் உங்கள் பிள்ளை தவறான வழியில் செல்ல வாய்ப்புள்ளது. பெரும்பாலும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றாதபோது டீனேஜ் பிள்ளைகள் கோபப்படுகிறார்கள்.
இந்த நிலையைத் தடுக்க, அவர்கள் விரும்பும் அனைத்தையும் நீங்கள் கொடுக்கக்கூடாது. இந்தப் பழக்கத்தை ஆரம்பத்திலிருந்தே நீங்கள் கட்டுட்படுத்த வேண்டும். சூழ்நிலைகளை புரிந்துகொள்ள உங்கள் பிள்ளைக்கு நீங்கள் உதவ வேண்டும். அவர்களுக்கு மிகவும் தேவைப்படும் பொருட்களை மட்டுமே வாங்கி கொடுங்கள்.
கவனிக்க வேண்டும்
பொதுவாக டீனேஜ் வயதில் பிள்ளைகள் பெற்றோர்களிடம் இருந்து விலக ஆரம்பிப்பார்கள். எல்லாவற்றையும் உங்களிடம் பகிர மாட்டார்கள். தங்களுக்குள்ளே விஷயங்களை வைத்துக்கொண்டு பேசாமல் இருந்தால், உங்கள் பிள்ளையிடம் மனம் திறந்து நீங்கள் பேசுங்கள். இதனால், அவர்களும் உங்களுடன் மனம் திறந்து பேசுவார்கள்.
உங்கள் பிள்ளை சொல்வதைக் கேட்டு, அவருடைய கோபத்தைத் தூண்டுவது எது என புரிந்து கொள்ளுங்கள். உங்கள் பிள்ளை உங்கள் மீது நம்பிக்கை வைக்கும்படி, நடந்துகொள்ளுங்கள். இது இருவரின் உறவுக்கும் நல்லது. உங்கள் டீனேஜ் பிள்ளையின் கோபத்தைத் தணிக்க வெவ்வேறு தந்திரங்களையும் வழிகளையும் பயன்படுத்துங்கள். அவர்களின் பிரச்சனைகளை புரிந்துகொண்டு, அவர்களுக்கு உதவுங்கள்.
எப்போது விலகிச் செல்ல வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்
உங்கள் டீனேஜ் பிள்ளையிடம் இருந்து நீங்கள் எப்போதும் விலகி இருக்க வேண்டும் என தெரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கும் அவர்களுக்கும் பெரிய வாக்குவாதம் நடக்கும்போது, ஒரு பெற்றோராக, அந்த வாக்குவாதத்திலிருந்து எப்போது விலகிச் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இது உங்கள் குழந்தையை அமைதிப்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களின் கோபத்தை குறைக்கவும் இடம் கொடுக்கும். கோபம் குறைந்த பிறகு இருவரும் அமைதியாக அமர்ந்து பேசலாம். உங்கள் நடத்தைக்கான நியாயத்தை பற்றி இருவரும் கேட்கலாம்.
கோபத்திற்கு வரம்பு அமைக்கவும்
உங்கள் பிள்ளையை அடக்குவதற்கு கொஞ்சம் திட்டுவது அவசியம். ஆனால் திட்டுவதற்கு சரியான நேரம் எப்போது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கோப வரம்புகளை நிர்ணயித்து, அதற்கு மேல் செல்லாதீர்கள். அடிக்கடி அவர்களிடம் கடிந்துகொள்வது, கோபப்படுவது அவர்களை நீங்கள் திட்டுவதற்கு ஆளாக்கிவிடும்.
இதனால், நீங்கள் சொல்வதை அவர்கள் மதிக்க மாட்டார்கள். எல்லாவற்றையும் சரியான நேரத்தில் செய்யும்போது, உங்கள் குழந்தையின் கோபப் பிரச்சினைகளை நீங்கள் எளிதாகச் சமாளிக்கலாம் மற்றும் அவற்றைத் தீர்க்கலாம்.



Click it and Unblock the Notifications

