Latest Updates
-
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
பெற்றோர்களே! உங்களுக்கும் உங்க டீன் ஏஜ் பிள்ளைக்கும் இடையில் நல்ல வலுவான உறவு இருக்க இத பண்ணுங்க!
உங்களுக்கு டீன் ஏஜ் வயதில் பிள்ளைகள் இருக்கிறார்களா? உங்கள் பிள்ளை டீன் ஏஜ் வயதை நெருங்க இருக்கிறார்களா? அப்படியானால், பெற்றோர்களே நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. ஏனெனில், டீன் ஏஜ் பிள்ளைகளை கையாள்வது என்பது மிகவும் சிரமமான விஷயம்.
உங்கள் டீன் ஏஜ் பிள்ளையின் நடத்தைகளுக்கு, ஹார்மோன்கள் அல்லது பருவமடைதல் மீது நீங்கள் குற்றம் சாட்டலாம். ஒரு டீனேஜரை கையாள்வது என்பது ரோலர் கோஸ்டர் போல ஒருபோதும் எளிதானது அல்ல. மேலும் குழந்தையின் டீனேஜ் வயதைக் கையாளும் போது, பெரும்பலான பெற்றோர்கள் குறைந்தபட்சம் அவர்களை எச்சரிக்கை மட்டுமே செய்கிறார்கள்.

குறிப்பாக பெற்றோர்கள் பிரிந்திருக்கும்போது அல்லது விவாகரத்து செய்யும்போது, சமாளிக்க இது கடினமான நேரமாக இருக்கும். ஒரு இளைஞனைக் கொண்ட ஒரு குடும்பம் ஒவ்வொரு நாளும் ஒரு போர்க்களம் போல தோற்றமளிக்கும். அது ஒரு பெரிய விஷயமாக இருக்க வேண்டிய அவசியமில்லை, சிறிய விஷயங்கள் கூட அவர்களுக்கு எதிர்மறை உணர்ச்சிகளைத் தூண்டும்.
உணர்ச்சிகளின் அடிப்படையில் அவர்கள் தொடர்ந்து மாறிவருகிறார்கள் மற்றும் உருவாகிறார்கள் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, அவர்களுடனான அவர்களின் உறவும் மாற வேண்டும், மேலும் சிறப்பாக இருக்க வேண்டும்.
அவர்கள் யார் என்பதையும், அவர்கள் யாராக மாற விரும்புகிறார்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள உதவுவதற்கு பெற்றோரின் மரியாதை மற்றும் வழிகாட்டுதல் அவசியம். உங்கள் டீன் ஏஜ் பிள்ளையுடனான உறவை வலுப்படுத்துவதற்கு பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
எப்போதும் விமர்சிக்க வேண்டாம்
உங்கள் டீன் ஏஜ் பிள்ளை எதைச் செய்தாலும் எப்போதும் குறைகளைக் கண்டுபிடித்து விமர்சிக்காதீர்கள். இந்த வயதில் அவர்கள் இப்படிதான் இருப்பார்கள் என்பதை ஏற்றுக்கொண்டு அவர்களுக்குப் பிடித்த வீடியோ கேம் அல்லது பாடல் அல்லது ரீல்களில் நீங்களும் கூட பங்கேற்க முயற்சிக்கலாம்.
பெற்றோர்கள், அவர்களின் டீன் ஏஜ் பிள்ளையுடன் சேர்ந்து விளையாடும்போது, உறவு மகிழ்ச்சியாகவும் வலுவாகவும் இருக்கும். ஒரு பெற்றோராக நண்பராக நீங்கள் அவர்களுடன் இருப்பதன் மூலம் அவர்களை உற்சாகப்படுத்தலாம், மேலும், உங்கள் டீன் ஏஜ் பிள்ளை செய்யும் எல்லாவற்றிலும் நல்லதைப் பார்க்க முயற்சி செய்யுங்கள்.
தலைகீழாக சிந்திக்க தூண்டுதலை உருவாக்கவும்
தூண்டுதல்கள் எப்போதும் சோகமாகவோ அல்லது உங்களை வருத்தமடையச் செய்யும் வகையில் வடிவமைக்கப்படவோ இல்லை. உங்கள் உரையாடலின் போக்கை மாற்ற நீங்கள் அவற்றை நன்றாகப் பயன்படுத்தலாம். இதன் மூலம் உங்கள் டீன் ஏஜ் பிள்ளையின் சிந்தனையை நீங்கள் தலைகீழாக மாற்றலாம் மற்றும் அவர்கள் ஒரு சூழ்நிலையை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
எதிர்மறையான சூழ்நிலையை நீங்கள் பார்க்கும் போதெல்லாம், அதை நேர்மறையாக மாற்ற முயற்சி செய்யுங்கள். இது சமையல் மற்றும் மொப்பிங் போன்ற எளிய வீட்டு வேலையாக கூட இருக்கலாம். அவர்கள் ஏதோ ஒன்றை சமைக்கிறார்கள் என்றால், விரக்தியைக் காட்டுவதற்குப் பதிலாக, நீங்கள் அவர்களை சிறந்த முறையில் பாராட்டலாம்.
அக்கறை காட்டுகிறீர்கள் என்பதைக் காட்ட நேரம் ஒதுக்குங்கள்
உங்கள் டீன் ஏஜ் பிள்ளையின் மீது நீங்கள் எவ்வளவு அக்கறை காட்டுகிறீர்கள் என்பதைக் காட்ட பல வழிகள் உள்ளன. எனவே, உங்கள் அக்கறையான இயல்பை உங்களுக்குள்ளே வைத்துக்கொள்ளாதீர்கள். ஏனெனில் பதின்வயதினர் உங்கள் மனதை வாசிப்பவர்கள் அல்ல. அவர்களுக்குப் பிடித்தமான உணவைத் தயாரித்து, அவர்களுக்குப் பிடித்தமான ஷாப்பிங் மாலுக்கு அழைத்துச் செல்லலாம் அல்லது அவர்களுக்காக ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்யலாம்.
டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு பெற்றோரின் ஆதரவு மிகவும் முக்கியமானது என்று உளவியலாளர்கள் நம்புகிறார்கள். எனவே, அவர்கள் வாழ்வில் விரும்பும் அன்பு மற்றும் ஆதரவின் நங்கூரமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
எல்லைகளை அமைத்து கொள்ளுங்கள்
நீங்கள் எந்த வகையான பெற்றோராக இருக்க விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். மேலும் எல்லைகளை அமைத்து தெளிவுபடுத்துவதன் மூலம் நீங்கள் சிறந்தவராக இருக்க முடியும். அவர்களுடன் ஆரோக்கியமான உறவை ஏற்படுத்திக் கொள்ள நீண்ட நேரம் யோசித்து நல்ல முடிவுகளை எடுங்கள்.
சிறந்த பெற்றோராக இருக்க, நீங்கள் உங்கள் சொந்த ஹேக்குகளை அமைக்க வேண்டும். உங்கள் பட்டியலில் உங்களை முதலிடத்தில் வைத்து, முதலில் உங்கள் உணர்ச்சிகளைக் கவனித்து, ஆரோக்கியமான உறவுகள் எப்படி இருக்கும் என்பதற்கு உங்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருங்கள்.
அவர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்ளுங்கள்
உங்கள் டீன் ஏஜ் பிள்ளை கவலையுடன் வரும்போதெல்லாம், அவர்களை நிராகரிக்காதீர்கள் அல்லது அவர்களை அவமானப்படுத்தாதீர்கள். கடினமான சூழ்நிலைகளைக் கையாளும் போது பதின்வயதினர் குழப்பமடையலாம் அல்லது அதிக மன அழுத்தமாக உணரலாம் மற்றும் அவற்றைச் செயல்படுத்துவது ஒரு கடினமான பணியாகத் தோன்றலாம்.
எனவே, நீங்கள் அவர்களின் செயல்களை ஏற்கவில்லை என்றால், அவர்களை கேலி செய்வதற்குப் பதிலாக, எதிர்மறையான மற்றும் தரக்குறைவாக வார்த்தைகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக அவர்களுக்கு ஆதரவாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
வீட்டில் பாதுகாப்பற்ற மற்றும் மகிழ்ச்சியற்ற இடத்தை உருவாக்குவது உங்களை பிள்ளையின் சுயமரியாதையை பாதிக்கலாம். குறிப்பாக அவர்கள் விரும்பும் ஒருவரிடமிருந்து விமர்சனம் வரும்போது, அது அவர்களை கடுமையாக பாதிக்கும்.



Click it and Unblock the Notifications

