Latest Updates
-
5500 பணக்காரர்கள் அவர்களின் உடலை சேமிக்க பல கோடிகளை முதலீடு செஞ்சுருக்காங்க...காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
பெண்களே! நீங்க கர்ப்பமாக இருப்பதை எப்படி சர்ப்ரைஸாக உங்க கணவருக்கு சொல்லலாம் தெரியுமா?
பெண்களுக்கு சந்தோஷமான தருணம் என்றால் அது கர்ப்ப காலம் தான். முதன் முதலில் கர்ப்பமாக ஆகும் போது இருக்கிற சந்தோஷம் மிகப் பெரியது. அதிலும் அதை கணவரிடம் சொல்வது என்பது மறக்க முடியாத சந்தோஷ தருணம் என்றே சொல்லலாம்.
ஒரு பெண் தான் கர்ப்பமாக இருப்பதை தன் கணவரிடம் நிறைய வழிகளில் சொல்ல முயற்சிக்கிறார். அதற்காக அவள் நிறைய மெனக்கெடல்களையும் செய்வதுண்டு. இருப்பினும் நீங்கள் தாயாக போவதையும் அவர் தந்தையாக போவதையும் எப்படி வித விதமான வழிகளில் சொல்லலாம்.

அந்த இனிய நிகழ்வை எப்படி சர்ப்ரைஸாக உங்கள் கணவருக்கு தெரிவிக்கலாம் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
சிறந்த தந்தை என்ற 'டி-ஷர்ட்' வாங்கி கொடுங்கள்
உங்கள் கணவர் அப்பாவாக ஆகப் போகிறார் என்பதை தெரிவிக்கும் விதத்தில் அவருக்கு ஒரு டி-ஷர்ட்டை நீங்கள் பரிசாக வழங்கலாம். அந்த டி-ஷர்ட்டில் சிறந்த டாடி என்ற வாசகம் அல்லது படம் இருக்கும் டி-ஷர்ட்டை நீங்கள் அவருக்கு பரிசளிக்கலாம். இந்த டி-ஷர்ட் வழியாக மறைமுகமாக அந்த இனிய செய்தியை அவருக்கு எடுத்துரைக்கலாம்.
பேமிலி பார்ட்டியை ஏற்பாடு செய்யுங்கள்
நீங்கள் கர்ப்பமாக இருப்பதை உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் கூற ஒரு பேமிலி பார்ட்டியை ஏற்பாடு செய்யலாம். இரவு உணவின் போது உங்கள் கணவருக்கு ஒரு அழகான டின்னரை ஏற்பாடு செய்யுங்கள். அந்த நேரத்தில் அவருக்கு அந்த நற்செய்தியை எடுத்துக் கூறி சர்ப்ரைஸ் கொடுக்கலாம்.
மளிகை கடை லிஸ்ட்டில் மகப்பேறு பொருட்கள்
உங்கள் கணவருடன் நீங்கள் மளிகைக்கடைக்கு செல்லும் போது அதில் குழந்தை பேற்றுக்கான பொருட்களை பட்டியலிட்டு காட்டலாம் அல்லது அந்த கடைகளில் குழந்தைக்கு தேவையான பொருட்களை வாங்கி உங்கள் கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம். இந்த செய்தி கண்டிப்பாக அவரை ஆச்சர்யப்படுத்தும். உங்கள் கணவர் மிகவும் சந்தோஷம் அடைவார்.
கர்ப்பத்தை பற்றிய புத்தகங்கள் அல்லது திரைப்படங்கள் வாயிலாக தெரிவிக்கலாம்
'மை பாய்ஸ் கேன் ஸ்விம்' போன்ற கர்ப்பத்தை பற்றிய வேடிக்கையான புத்தகங்களை வாங்கி உங்கள் கணவருக்கு பரிசளிக்கலாம் அல்லது திரைப்படங்கள் வாயிலாக உங்கள் கணவருக்கு அந்த நற்செய்தியை நீங்கள் எடுத்துரைக்கலாம். நீங்கள் இருவரும் இணைந்து இருக்கும் போது திரைப்படங்கள் வாயிலாக அதை நீங்கள் எடுத்துக் கூறலாம்.
குழந்தை இருக்கும் டி-ஷர்ட்டை அணியுங்கள்
உங்கள் கர்ப்பத்தை வெளிப்படுத்தும் வகையில் குழந்தை இருக்கும் டி-ஷர்ட்டை வாங்கி அணியலாம். இது உங்கள் கணவரை சந்தோஷத்தில் ஆழ்த்தும்.
காபி குவளையை பரிசளியுங்கள்
உங்கள் கணவர் அப்பாவாக போவதை தெரிவிக்க அவருக்கு காபி குவளையை பரிசளியுங்கள். நீ, நான் மற்றும் குழந்தை போன்ற வாசகங்கள் நிரம்பிய காபி குவளையை அவருக்கு நீங்கள் பரிசளிக்கலாம். காலையில் ஒரு கப் காபியுடன் உங்கள் கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம். இப்படி செய்வது உங்கள் இருவருக்கும் மிகப்பெரிய சந்தோஷத்தை அளிக்கும்.
பண்டிகை நாட்களில் வாழ்த்து அட்டைகளை பரிசளியுங்கள்
ஈஸ்டர், அன்னையர் தினம் மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற நன்னாளில் வாழ்த்து அட்டைகளை உங்கள் கணவருக்கு வழங்கும் போது குழந்தையை பற்றிய வாசகங்களை எழுதி அவருக்கு நீங்கள் பரிசளிக்கலாம். காதலர் தினம் போன்ற அட்டைகளில் உங்கள் குழந்தைகளின் வருகையை குறிப்பிட்டு அவருக்கு நீங்கள் பரிசளிக்கலாம். இதன் மூலம் உங்கள் கணவரின் முகத்தில் சந்தோஷத்தை காண முடியும்.
காரில் குழந்தை இருக்கிறது போன்ற போர்டு வைக்கலாம்
உங்கள் கணவருடன் நீங்கள் காரில் வெளியே செல்லும் போது அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் காரில் குழந்தை இருக்கிறது போன்ற போர்டு வைக்கலாம். இது அவருக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுக்கும்.
உங்கள் முதல் குழந்தை வழியாக சொல்லலாம்
நீங்கள் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரிக்கிறீர்கள் என்றால் புதிய உறுப்பினர் வருகையை உங்கள் முதல் குழந்தை வழியாக தெரிவிக்கலாம். உங்கள் குழந்தைக்கு தம்பி அல்லது தங்கை வரும் விதத்தை தெரிவிக்கும் வகையில் ஒரு டி-ஷர்ட்டை அணிவிக்கச் சொல்லலாம்.
ஒரு CD அல்லது மியூசிக்கை உருவாக்குங்கள்
உங்கள் கணவருக்கு பிடித்த மியூசிக் அல்லது பாடல்களை ரெக்கார்ட் செய்து பரிசளியுங்கள். அந்த மியூசிக் அல்லது பாடல்கள் வாயிலாக உங்கள் கணவர் அப்பாவாக ஆகும் விஷயத்தை நீங்கள் எடுத்துரைக்கலாம். இந்த மியூசிக் CD குழந்தை பிறந்த பிறகும் என்றும் ஒரு நினைவாக உங்களுடன் எப்பொழுதும் இருக்கும்.



Click it and Unblock the Notifications













