Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
குழந்தை பிறந்த பின் பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய 7 பழங்கள் என்னென்ன? விளக்குகிறார் மருத்துவர் நித்யா...!
குழந்தை பிறந்த பிறகு பெண்களின் வாழ்க்கை என்பது முற்றிலும் மாறிவிடும். அதுவரை இருந்த அவர்களின் உலகம் அடியோடு மாறி அவர்களின் குழந்தையே அவர்களின் உலகமாக மாறிவிடுவார்கள். குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயது வரை அவர்களின் உணவு தேவைக்கு தாய்ப்பாலூட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
தாய்ப்பால்தான் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தரக்கூடியது. எனவே குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பாலை அதிகரிக்ககூடிய ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் பெரும்பாலும் எளிதில் கிடைக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களை சாப்பிடாமல் புறக்கணிக்கிறார்கள்.

ஆனால் அவைதான் குழந்தைக்குத தேவையான ஊட்டச்சத்துக்கள், ஆக்சிஜனேற்றிக்களை கொண்டுள்ளது. மேலும் அம்மாவுக்கு தாய்ப்பால் கொடுக்க தேவையான ஆற்றலையும் கொடுக்கிறது. ஊட்டச்சத்து குறைவாக இருக்கும் பெண்கள் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க சாப்பிட வேண்டிய பழங்கள் என்னென்ன என்று பகிர்ந்து கொள்கிறார் மகப்பேறு மருத்துவர் நித்யா.
ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரி அதிக விட்டமின் சி நிறைந்த பழமாகும். எனவே புதிதாகி அம்மாவானவர்கள் அதிகளவு ஸ்ட்ராபெர்ரி சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறார்கள். இதில் நீர்சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடலின் நீர் மேலாண்மையை சீராக வைத்திருக்க உதவுகிறது. எனவே பெண்கள் விரும்பும் போதெல்லாம் குழந்தைக்கு பால் கொடுக்கலாம்.
சப்போட்டா
குழந்தை பிறந்த பிறகு அவர்களின் தேவைகளை அறிந்துகொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பால் கொடுக்கும்போது ஏற்படும் வாந்தி, மயக்கம், குமட்டல் போன்றவற்றை சமாளிக்க உங்களுக்கு அதிக ஆற்றல் தேவைப்படும். அதற்கு தேவையான ஆற்றல் அனைத்தும் சப்போட்டா பழத்தில் அதிகளவில் உள்ளது.
ப்ளூபெர்ரி
ப்ளூபெர்ரியில் அதிகளவு சிட்ரஸ் அமிலமும் அதிகளவில் ஆன்டிஆக்சிடண்ட்களும் உள்ளது. மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில் இதில் ஆன்டிஆக்சிடண்ட்கள் அதிகளவில் உள்ளது. தாய்ப்பாலில் அதிகளவில் ஆன்டிஆக்சிடண்ட்கள் இருந்தாலும் இதன் மூலம் அதிக ஆன்டிஆக்சிடண்ட்கள் குழந்தைகளுக்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இது அம்மாக்களுக்கு அதிகளவில் பரிந்துரைக்கப்படுகிறது. தாய்ப்பாலூட்டும் அம்மாக்களுக்கு உடலின் திரவ சமநிலையை பராமரிப்பதற்கு பொட்டாசியம் அதிகளவில் தேவைப்படுகிறது. எனவே புதிதாக அம்மாவான பெண்கள் அவசியம் வாழைப்பழம் சாப்பிட வேண்டுமென்று பரிந்துரைக்கிறார் மருத்துவர்.
பச்சை பப்பாளி
பச்சை பப்பாளி தாய்ப்பாலின் உற்பத்தியை அதிகரிக்க பயன்படும் சிறந்த பழமாகும். இது பால் உற்பத்தியை அதிகரிக்கும் அதே நேரத்தில் அத்தியாவசிய வைட்டமின்களான ஏ, பி, சி மற்றும் ஈ ஆகியவற்றையும் பெண்களுக்குத் தருகிறது.
பரங்கிக்காய்
இது பெரும்பாலான நபர்களுக்கு தெரியாத ஒரு விஷயமாகும். அம்மாவின் உடலில் போதுமான ஊட்டச்சத்துக்களுடன் இருந்தால்தான் குழந்தைக்கு அவர்களால் போதுமான ஊட்டச்சத்துக்களைத் தரமுடியும். தாய்ப்பாலில் போதுமான அளவு ஊட்டச்சத்து நிறைந்திருக்க பரங்கிக்காய் சாப்பிட வேண்டியது அவசியம்.
அவோகேடா
அவோகேடாவில் ஒமேகா -3, ஒமேகா -6 மற்றும் ஒமேகா -9 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இந்த அத்தியாவசிய அமினோ அமிலங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாலை உற்பத்தி செய்ய உதவுவதோடு குழந்தைகளுக்கத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க உதவும்.



Click it and Unblock the Notifications
