Latest Updates
-
கைகளில் சொடக்கு எடுக்கும்போது அதிலிருந்து ஏன் சத்தம் வருகிறது? இப்படி செய்வது பாதிப்பை ஏற்படுத்துமா? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், 2 தக்காளியும் இருந்தா.. காலையில் இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. -
அக்டோபர் 19, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்படையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம் -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது?
பெண்களே! உங்க பிரசவத்திற்கு பிறகு முதலில் மலம் கழிக்கும்போது இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கணுமாம்!
Pooping After Birth In Tamil: குழந்தையை பெற்றெடுப்பது என்பது ஒவ்வொரு பெண்களுக்கும் மறு ஜென்மம் போல. குழந்தை பிறந்த பிறகு ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படலாம். பொதுவாக குழந்தை பிறந்தவுடன் மலம் கழிப்பது அவர்களுக்கு கடினமாக இருக்கும்.
ஒவ்வொரு பெண்களும் தங்கள் வாழ்க்கையில், இந்த பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். குடல் இயக்கம், அதிகரித்த இரத்தப்போக்கு இவைகளுடன் மலம் கழிக்கவும் புதிய தாய்மார்கள் போராட வேண்டியிருக்கும்.

சுகப் பிரசவம் மற்றும் ஆப்ரேஷன் செய்வது என இரண்டு வகையான டெலிவரியை சந்திக்கும் பெண்கள், பிரச்சனையையும் இரண்டு வகையாக சந்திக்கலாம். இவர்கள் கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என்றாலே, கவலைகள் மற்றும் மன அழுத்தத்தை சந்திக்கலாம்.
குழந்தை பிறந்த பிறகு பிறப்புறுப்பில் உங்களுக்கு சி-பிரிவு இருந்தால், கீறலில் வலி அல்லது எரிச்சல் போன்றவை ஏற்படலாம். மேலும், குடல் இயக்கமும் சவாலானதாக இருக்கும். சில சமயங்களில் வலியும் கூட ஏற்படலாம். குழந்தை பிறந்த பிறகு பெண்கள் வெளியேற்றும் முதல் மலம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி இங்கே காணலாம்.
பிரசவம் குடல் இயக்கத்தை எவ்வாறு பாதிக்குமா?
பிரசவத்திற்குப் பிறகு சில நாட்கள் நீங்கள் கழிவறைக்கு செல்லும் அனுபவத்தை பாதிக்கக்கூடிய பல காரணிகள் உள்ளன. உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள், மருத்துவ சிகிச்சைகளால் கழிவறைக்கு செல்ல நீங்கள் அச்சம் கொள்ளலாம். குழந்தை பிறந்த பிறகு நீங்கள் மலம் கழிக்க சிரமப்படலாம். பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் அனுபவிக்கும் பொதுவான பிரச்சனைகளில் சில பின்வருமாறு:
பிரசவத்திற்குப் பிறகு மலச்சிக்கல்
பிரசவத்திற்குப் பின் ஏற்படும் மூல நோய்
பிரசவத்திற்குப் பிறகு வயிற்றுப்போக்கு
பிரசவத்திற்குப் பின் மலம் கழித்தல்
நிபுணர்களின் கூற்றுப்படி, பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு மலம் கழித்தல் பிரச்சினைகள் மிகவும் பொதுவானவை. அவற்றை அனுபவிக்காமல் இருப்பது இயற்கைக்கு மாறானதாக இருக்கும். இதை எல்லா பெண்களும் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கிறார்கள்.
பிரசவத்திற்குப் பிறகு மலம் கழிக்க எவ்வளவு நேரம் ஆகும்?
குழந்தை பிறந்த பிறகு, பெரும்பாலான பெண்களுக்கு மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் முதல் குடல் இயக்கம் இருக்கும். ஆனால் இந்த மதிப்பீடு ஒரு மதிப்பீடு மட்டுமே. ஏனெனில், ஒவ்வொரு பெண்ணின் உடல் செயல்பாடும் வேறுபடும். சில பெண்களுக்கு அவர்கள் பிறந்த அதே நாளில் முதல் குடல் இயக்கம் இருக்கலாம், மற்றவர்களுக்கு ஒரு வாரம் வரை ஆகலாம்.
பிரசவத்திற்குப் பின் மலம் கழிப்பதை எளிதாக்குவது எப்படி?
உங்கள் செரிமானத்தை மேம்படுத்த மல மென்மையாக்கியைப் பயன்படுத்தலாம்
நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்
மலம் கழிக்க உங்களை கட்டாயப்படுத்த வேண்டாம்
மலம் கழிக்க உகந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அதாவது நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள்.
கழிவறைக்கு செல்லும்போது, உங்களுக்கு வசதியாக இருக்க ஒரு சிறிய படி ஸ்டூல் வாங்க வேண்டும்.
சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள்
மலம் கழிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தால், மூச்சை உள்ளிழுத்து மெதுவாக சுவாச பயிற்சி செய்ய வேண்டும். தொடர்ந்து மூச்சை இழுக்கும் போது மெதுவாக விட வேண்டும். உங்களுக்கு ஆப்ரேஷன் செய்திருந்தால், தையல் இருக்கும், கவனமாக இருக்க வேண்டும். மேலும், உங்களுக்கு மலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்போது மட்டுமே சுவாச பயிற்சி செய்ய வேண்டும்.
இறுதிக்குறிப்பு
குழந்தை பிறந்ததற்கு பிறகு மலம் கழித்தல் பிரச்சனைகளை அனுபவிப்பது மிகவும் பொதுவானது. பிரசவத்திற்குப் பிறகு ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு குடல் இயக்கம் இல்லை என்றால், உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். இதில் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை. உங்கள் எல்லா கேள்விகளையும் உங்கள் மருத்துவரிடம் கேட்டு தெளிவு பெறுங்கள்.



Click it and Unblock the Notifications


