Latest Updates
-
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும
கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது என்னென்ன நன்மைகளை கொடுக்கும்? விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் நந்தினி!
ஒருவர் ஆரோக்கியமாக வாழ உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது. உடற்பயிற்சிக்கு பாலின வேறுபாடுகள் இல்லை. ஆண்களைப் போலவே பெண்களும் ஆரோக்கியமாக இருக்க அவசியம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். பெண்களைப் பொறுத்தவரை மற்ற காலங்களை போலவே கர்ப்ப காலத்திலும் உடற்பயிற்சி செய்யவேண்டியது அவசியமானது.
கூடுதல் பரிசாக உடற்பயிற்சி செய்வது உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். இயற்கையாகவே, கர்ப்ப காலத்தில் கடுமையான பயிற்சிகள் தவிர்க்கப்பட வேண்டும், ஆனால் எல்லா பயிற்சிகளையும் நிறுத்தக்கூடாது. இந்த பதிவில் கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன மகப்பேறு மருத்துவர் நந்தினி நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எடையை பராமரிக்கும்
இயற்கையாவே கர்பகாலத்தில் பெண்களின் எடை அதிகரிக்கும். ஆனால், கர்ப்பகாலத்தில் உடற்பயிற்சி செய்பவர்கள் உடற்பயிற்சி செய்யாதவர்களை விட குறைந்த அளவே எடை அதிகரிப்பிற்கு ஆளாகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது. எனவே, கர்ப்பகால உடற்பயிற்சிகள் பிரசவத்திற்கு பின் ஏற்படும் எடை அதிகரிப்பிலிருந்து உங்களை பாதுகாக்கும்.
பிரசவத்திற்கு ஆயத்தமாக்கும்
கர்ப்பகாலத்தில் மிதமான உடற்பயிற்சிகளை தொடர்ச்சியாக செய்வது பெண்களின் சகிப்புத்தன்மை மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். அவர்களின் ஆற்றல் அதிகரிக்கும்போது பிரசவம் மிகவும் சுலபமாக இருக்கும். அதுமட்டுமின்றி வலியையும் குறைக்கும்.
இலகுவாக உணரச் செய்யும்
கர்ப்ப காலத்தில் பெண்கள் உடலில் நிறைய வித்தியாசமான ஹார்மோன்களை வெளியிடப்படுகிறது, அதனால் நீங்கள் இலகுவாக உணர அந்த ஹார்மோன்களை வெளியேற்ற வேண்டும். உடல் எடை அதிகரித்திருக்கும் நேரத்தில் மனதளவில் இலகுவாக உணர உடற்பயிற்சிகள் உதவும்.
வலியை குறைக்க உதவும்
உடற்பயிற்சிகள் கர்ப்பகாலத்தில் ஏற்படும் வலி மற்றும் பிடிப்புகளை சரிசெய்ய உதவுகின்றன. தினமும் பத்து நிமிடங்கள் தொடர்ச்சியாக காலை அசைப்பது உங்களின் கால் வீக்கத்தை குறைக்கலாம். இது உங்கள் மனதை அசௌகரியத்தில் இருந்து தடுக்க உதவுகிறது. மேலும் நன்றாக தூங்குவதால் மனசோர்வும் குறையும்.
கவனச்சிதறல்
கர்ப்பகாலத்தின் போது உடற்பயிற்சி செய்வது நீங்கள் அடிமையாக இருந்த சில பழக்கத்திலிருந்து உங்களை விடுவிக்கும். புகைபிடிக்கவோ, மது அருந்தவோ தோன்றும் நேரத்தில் சில உடற்பயிற்சிகளை செய்வது அந்த பழக்கத்திலிருந்து உங்களை விடுவிக்க உதவும். நீங்களும், உங்கள் குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல வழிகளில் உடற்பயிற்சிகள் உதவும்.
மலச்சிக்கலை குணப்படுத்தும்
கர்ப்ப கால உடற்பயிற்சி வலியைக் குறைப்பதோடு, மலச்சிக்கலைக் குறைக்கவும் உதவுகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. மலச்சிக்கல் என்பது கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சினையாகும். கர்ப்ப காலத்தில் இறுக்கமான இடுப்பு தசைகள் மலச்சிக்கலுக்கு பங்களிப்பதால், இந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்வது இடுப்பு பகுதி அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் குடல் இயக்கங்களை எளிதாக்கும்.
நீச்சல்
உடலில் அதிகமாக உள்ள எடையை எளிதாக குறைக்க யாஅனைவருமே விரும்புவார்கள். நீச்சல் கர்பகாலத்தில் செய்யக்கூடிய எளிதான மற்றும் பாதுகாப்பான உடற்பயிற்சியாகும், மேலும் குழந்தைக்கு அதிக அழுத்தம் தராமல் செய்யக்கூடிய பயிற்சியாகும். இது உங்களின் எடையை குறைத்து அழகாக காட்டுவதோடு மனஅழுத்தத்தையும் குறைக்கும்.



Click it and Unblock the Notifications
