For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமணத்திற்கு முன் ஏன் துணையின் இரத்த வகையை கட்டாயம் கேட்டு தெரிஞ்சுக்கணும் தெரியுமா?

குறிப்பிட்ட இரண்டு இரத்த பிரிவினரைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தை வாழ்நாள் முழுவதும் ஒருசில ஆரோக்கிய பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும் என்பது தெரியுமா?

|

நீங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துவிட்டீர்களா? உங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணையைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? அவருடன் டேட்டிங் செய்ய போகிறீர்களா? சந்தோஷம். ஆனால் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்த பின்னர் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கு வாழ்க்கைத் துணையாக வருபவரின் குணங்கள், அவரது பண்புகள் மற்றும் நீங்கள் இருவரும் எவ்வளவு இணக்கமாக இருக்கிறீர்கள் போன்றவற்றிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ, அதே அளவு உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தைப் பற்றிய விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

Why Couples Should Get Their Blood Type Checked Before Getting Married

ஆம், திருமணம் செய்து கொள்ளும் இருவர் அடுத்ததாக ஒரு புதிய உயிரை இவ்வுலகிற்கு கொண்டு வரப் போகிறார்கள். ஆனால் தற்போது நிறைய தம்பதிகள் குழந்தைப் பெற்று கொள்வதில் சிரமத்தை சந்திக்கின்றனர். ஆனால் குழந்தையைப் பெற்றெடுத்த பின் அந்த குழந்தை கஷ்டப்படுவதை எந்த ஒரு பெற்றோரும் விரும்பமாட்டார்கள். சொல்லப்போனால், தாம் பெற்றெடுக்கும் குழந்தை சிறு வலியைக் கூட சந்திக்கக்கூடாது என்றே பலரும் நினைப்பார்கள். அப்படி இருக்கையில், குறிப்பிட்ட இரண்டு இரத்த பிரிவினரைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தை வாழ்நாள் முழுவதும் ஒருசில ஆரோக்கிய பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும் என்பது தெரியுமா? இதுக்குறித்து விரிவாகப் பார்ப்போம் வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ABO மற்றும் Rh இரத்த வகை

ABO மற்றும் Rh இரத்த வகை

இரத்த வகைகளில் ABO மற்றும் Rh இரத்த வகை பற்றி கேட்டிருப்பீர்கள். ABO என்பது பல்வேறு வகையான இரத்தக் குழுக்களைக் குறிக்கிறது: A, B, O மற்றும் AB. அதே சமயம் Rh என்பது ஒரு வகையாக புரதம். இது இரத்த சிவப்பணுக்களில் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். அதில் இரத்த சிவப்பணுக்களில் Rh புரதம் இருந்தால், அது Rh பாசிட்டிவ் என்றும், புரதம் இல்லாவிட்டால், அது Rh நெகட்டிவ் என்றும் அழைப்பார்கள். Rh பாசிட்டிவ் மிகவும் பொதுவான இரத்த வகை. ஆனால் Rh நெகட்டிவ் ஆரோக்கியத்தைப் பாதிக்காது, ஆனால் உங்கள் கர்ப்பத்தைப் பாதிக்கும். எனவே தான் திருமணத்திற்கு முன் அல்லது குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு முன், தங்களின் Rh ஐ சரிபார்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

Rh இரத்த வகையைக் கொண்ட தம்பதிகள்

Rh இரத்த வகையைக் கொண்ட தம்பதிகள்

நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையும், Rh பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் ஆக இருந்தால், அதில் பிரச்சனை ஏதும் இல்லை. ஆனால் தாய் Rh நெகட்டிவ்வாகவும், தந்தை Rh பாசிட்டிவ்வாகவும் இருக்கும் போது, பிறக்கும் குழந்தை Rh பாசிட்டிவ்வாகத் தான் இருக்கும். இத்தகைய சந்தர்ப்பங்களில், அதிகப்படியான இரத்தப்போக்கு மற்றும் பல சிக்கல்களை சந்திக்க வாய்ப்புள்ளன.

தம்பதிகளின் பொருந்தமில்லாத இரத்த வகைகள் ஐசோஇம்யூனைசேஷனுக்கு வழிவகுக்கும்

தம்பதிகளின் பொருந்தமில்லாத இரத்த வகைகள் ஐசோஇம்யூனைசேஷனுக்கு வழிவகுக்கும்

ஒரு Rh நெகட்டிவ் தாய் மற்றும் Rh பாசிட்டிவ் தந்தையிடம் இருந்து உருவாகும் Rh பாசிட்டிவ் குழந்தை, ஐசோஇம்யூனைசேஷன் என்று அழைக்கப்படும் ஒரு செயல்முறைக்கு வழிவகுக்கும். இது நிகழும் போது, குழந்தை கருப்பையில் இருக்கும் போது, குழந்தையின் இரத்தம் தாயின் உடலில் நுழையக்கூடும். இது கர்ப்பத்திற்கு பின் ஏற்படும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஒருவேளை தாய் குழந்தையை கலைத்தாலும், Rh பாசிட்டிவ் தந்தையின் இரத்தம் கலந்தாலும், இந்த ஆபத்து நிகழும்.

ஆகவே தான் Rh நெகட்டிவ் தாய் மற்றும் Rh பாசிட்டிவ் தந்தையாக இருப்பவர்கள் ஒரு Rh பாசிட்டிவ் குழந்தையைத் தவிர்க்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தம்பதியரின் இரத்த வகைகள் பொருந்தவில்லை என்றால் என்ன செய்வது?

தம்பதியரின் இரத்த வகைகள் பொருந்தவில்லை என்றால் என்ன செய்வது?

Rh நெகட்டிவ் தாய் மற்றும் Rh பாசிட்டிவ் தந்தை கொண்ட தம்பதிகளுக்கு, ஆன்டி-டி ஊசி சிகிச்சையாக பயன்படுத்தப்படுகிறது. இந்த ஊசி தந்தையின் Rh பாசிட்டிவ் இரத்தத்திற்கு தாயின் இரத்தம் வெளிப்படும் போது ஆன்டிபாடிகள் உருவாவதைத் தடுக்கிறது. இந்த ஆன்டிபாடிகள் குழந்தைக்கு மஞ்சள் காமாலை மற்றும் இரத்த சோகை போன்ற நோய்களால் அவஸ்தைப்பட செய்யும். ஆனால் இந்த ஊசி, தம்பதியினர் தங்கள் குடும்ப திட்டத்தை பாதுகாப்பாக முன்னேற அனுமதிக்கும்.

எனவே தான் மருத்துவர்கள் எப்போதும் பெற்றோராகும் தம்பதிகள் ஒருவருக்கொருவர் இரத்த வகையைப் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள். அதே சமயம் தம்பதிகள் வேறு சில இரத்த பரிசோதனைகளையும் கட்டாயம் செய்ய வேண்டும்.

HIV மற்றும் STDs

HIV மற்றும் STDs

HIV மற்றும் STDs போன்ற நோய்கள் மிகவும் மோசமான தொற்றுநோயாகும். இத்தகைய தொற்று இருக்கிறதா என்பதை தம்பதிகள் அறிந்து கொள்வதால், கொடிய தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க உதவும்.

தலசீமியா சோதனை

தலசீமியா சோதனை

நீங்கள் இரத்த பரிசோதனைக்கு செல்லும் போது, தலசீமியாவிற்கும் பரிசோதனை செய்யுங்கள். இந்த சோதனையால் பிறப்பு குறைபாட்டின் அபாயத்தைத் தடுக்கலாம். ஒரு தலசீமியா நோயாளியின் உடலில் குறைவான ஹீமோகுளோபின் மற்றும் சிறிய அளவிலான இரத்த சிவப்பணுக்கள் அதிகளவில் இருக்கும். இந்நிலை பிறப்பு குறைபாடுகளின் அபாயத்தை அதிகரிக்கும்.

உதாரணமாக, இரண்டு தலசீமியா மைனர் நோயாளிகள், ஒரு தலசீமியா குழந்தையைப் பெற்றெடுப்பார்கள். இந்த குழந்தை ஒவ்வொரு மாதமும் உயிர் வாழ்வதற்கு இரத்தமாற்றம் தேவைப்படும். இது மிகவும் விலையுயர்ந்த பணியாக இருப்பதுடன், குழந்தை வாழ்நாள் முழுவதும் உயிர் வாழ்வதற்கான கஷ்டப்பட வேண்டியிருக்கும். எனவே தான் தலசீமியா மைனர் பெற்றோர்கள் பிரசவத்தைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கருவுறுதல் சோதனை

கருவுறுதல் சோதனை

இந்த சோதனை முற்றிலும் தம்பதிகளின் விருப்பம். நீங்கள் திருமணத்திற்கு பிறகு குழந்தைக்கு திட்டமிட விரும்பினால், கருவுறுதல் சோதனைக்கு செல்லலாம். இந்த கருவுறுதல் சோதனையில் விந்து பகுப்பாய்வு முதல் ஹார்மோன் பகுப்பாய்வு மற்றும் அல்ட்ராசவுண்ட் ஆகியவை அடங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Couples Should Get Their Blood Type Checked Before Getting Married

It is important to know your partner’s blood type before getting married because it can determine the health of your future child.
Desktop Bottom Promotion