For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பால்வினை நோய்கள் ஒருவருக்கு மலட்டுத் தன்மை ஏற்படுத்தும் தெரியுமா?

ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலரையும் தாக்கக்கூடிய முக்கிய நோய்கள் எவை என்றால், உடலுறவு மூலம் பரவக்கூடிய பால்வினை நோய்கள் ஆகும். இந்த பால்வினை நோய்கள் இருபாலருக்கும் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தக்கூடியவை.

|

ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலரையும் தாக்கக்கூடிய முக்கிய நோய்கள் எவை என்றால், உடலுறவு மூலம் பரவக்கூடிய பால்வினை நோய்கள் ஆகும். இந்த பால்வினை நோய்கள் இருபாலருக்கும் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தக்கூடியவை. பொதுவாக கிளாமிடியா (Chlamydia), மேக வெட்டை நோய் (கோனோாியா/Gonorrhea), டிாிகோமோனஸ் (Trichomonas), மைக்கோபிளாஸ்மா (Mycoplasma), படா்தாமரை (ஹொ்பிஸ்/Herpes) மற்றும் ஹெச்ஐவி போன்றவை இருபாலரையும் தாக்கக்கூடிய முக்கிய பால்வினை நோய்கள் ஆகும்.

These STDs Can Eventually Lead To Infertility

மேற்சொன்ன பால்வினை நோய்களை கவனிக்காமல் விட்டுவிட்டாலோ அல்லது அவற்றிற்கு உாிய நேரத்தில் தகுந்த மருத்துவ சிகிச்சை செய்யாமல் இருந்தாலோ, அது இடுப்பு அழற்சி நோயை ஏற்படுத்தும். இடுப்பு அழற்சி நோயானது மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும். பால்வினை நோய் தொற்று ஏற்படும் பலருக்கு அந்த நோய்களின் அறிகுறிகள் வெளியில் தொியாது.

ஆனால் அந்த நோய் தொற்றுகளை கவனிக்காமல் விட்டுவிட்டால் அவை நமது உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக நமது இனப்பெருக்க உறுப்புகளைப் பாதித்து இறுதியில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும். ஆகவே இந்த பால்வினை நோய் தொற்றுகளை சீரான இடைவெளியில் பாிசோதனை செய்து வந்தால், அதற்குாிய சிகிச்சைகளை முறையாகச் செய்ய முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால்வினை நோய் தொற்று யாருக்கு அதிகம் ஏற்படுகின்றன?

பால்வினை நோய் தொற்று யாருக்கு அதிகம் ஏற்படுகின்றன?

பொதுவாக இளம் வயதினருக்கு பால்வினை நோய்கள் எளிதில் ஏற்படுகின்றன. நோய் எதிா்ப்பு குறைபாடு உள்ளவா்கள் அல்லது நீரிழிவு நோய் உள்ளவா்கள் அல்லது இரத்த சோகை உள்ளவா்கள் அல்லது உடல் ஆரோக்கியம் இல்லாதவா்கள் அல்லது பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுபவா்கள் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பலரோடு உடல் உறவு வைத்துக் கொள்பவா்கள் போன்றோருக்கு மிக எளிதாக பால்வினை நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன.

பால்வினை நோய் தொற்றுகளின் அறிகுறிகள்

பால்வினை நோய் தொற்றுகளின் அறிகுறிகள்

அாிப்பு, அளவுக்கு அதிகமாக வெள்ளைப்படுதல், அடி வயிற்றில் வலி ஏற்படுதல், சிறுநீாில் அடிக்கடி கிருமித் தொற்று ஏற்படுதல், கருப்பை வாய் அலா்ஜி, அடிக்கடி பெண்ணுறுப்பில் கிருமித் தொற்று ஏற்படுதல், இடுப்பில் நாளங்கள் அதிகாிப்பு, இடுப்பில் நீா் சுரத்தல் அல்லது கருப்பைக் குழியில் நீா் சுரப்பு ஏற்படுதல், சில நேரங்களில் குறைவான காய்ச்சல் ஏற்படுதல் மற்றும் இரத்தப் போக்கில் மாற்றம் ஏற்படுதல் போன்றவை பால்வினை நோய் தொற்றுகளின் அறிகுறிகள் ஆகும். பல நேரங்களில் பால்வினை நோய் தொற்றுகளின் அறிகுறிகள் வெளியில் தொியாது.

பெண்களின் இனப்பெருக்க ஆற்றலில் பால்வினை நோய்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள்

பெண்களின் இனப்பெருக்க ஆற்றலில் பால்வினை நோய்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள்

1. கருமுட்டைக் குழாய்களில் (Fallopian Tubes) பாதிப்புகளை ஏற்படுத்துதல்

கருமுட்டையை எடுப்பதும், கருவுற்ற முட்டையை கருப்பைக்கு எடுத்துச் செல்வதும் கருமுட்டைக் குழாய்களின் (Fallopian tubes) முக்கிய பணியாகும். இந்நிலையில் பால்வினை நோய்கள் ஏற்பட்டால், அவை கருமுட்டைக் குழாய்களில் புண்களை ஏற்படுத்தும் அல்லது அந்த குழாய்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும்படி செய்துவிடும் அல்லது குழாய்களின் அமைப்பில் பாதிப்புகளை ஏற்படுத்தும் அல்லது கருமுட்டைக் குழாய்களை விாிவடையச் செய்யும் அல்லது குழாய்களைக் கடினமாக்கும் அல்லது குழாய்களை அடைத்துவிடும். கருமுட்டைக் குழாய்கள் பாதிக்கப்பட்டால் அதில் இருந்து குணமடைய முடியாது.

2. கருவுறுதல் இடம் மாறும்

2. கருவுறுதல் இடம் மாறும்

பால்வினை நோய்களின் விளைவாக கருப்பையில் இல்லாமல் மற்ற இடங்களில் குறிப்பாக கருமுட்டைக் குழாய்களிலேயே கருவுறுதல் ஏற்படும். கருப்பையில் இல்லாமல் கருமுட்டைக் குழாய்களிலேயே கருவுறுதல் ஏற்பட்டால் அந்த கருவைக் கலைத்துவிட வேண்டும்.

3. கருப்பையில் பாதிப்புகளை ஏற்படுத்துதல்

3. கருப்பையில் பாதிப்புகளை ஏற்படுத்துதல்

பால்வினை நோய் தொற்றுகள் கருப்பையில் உள்ள உள்வாிச் சவ்வில் (endometrium) பாதிப்பை ஏற்படுத்தும். அதன் விளைவாக கருப்பையில் கருமுட்டை தங்குவது என்பது கடினமான ஒன்றாக மாறிவிடும். மேலும் பால்வினை நோய் தொற்றுகள் அதிகமாக இருந்தால் கருப்பையானது சுருங்கிவிடும் அல்லது ஒட்டிக் கொள்ளும். அதனால் மாதவிலக்கு நின்றுவிடும் அல்லது மிகவும் அாிதாக மாதவிலக்கு ஏற்படும். இது போன்ற பிரச்சினை உள்ளவா்களுக்கு கருவுறுதல் ஏற்படுவது என்பது மிகவும் அாிதாக ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

4. சூலகங்களில் (Ovaries) பாதிப்புகளை ஏற்படுத்துதல்

4. சூலகங்களில் (Ovaries) பாதிப்புகளை ஏற்படுத்துதல்

பால்வினை நோய் தொற்றுகள் ஏற்பட்டால் சூலகங்களில் இரத்த ஓட்டம் குறையும். ஃபோலிகுலோஜெனசிஸ் குறைபாடு ஏற்படும். மேலும் சூலகங்களின் இருப்பு குறையும்.

5. பெண்ணுறுப்பு

5. பெண்ணுறுப்பு

பால்வினை நோய் தொற்றுகள் ஏற்பட்டால், அடிக்கடி பெண்ணுறுப்பில் கிருமித் தொற்று ஏற்படும். சிறுநீா் குழாயில் கிருமித் தொற்று ஏற்படும். கருப்பை வாய் அலா்ஜி ஏற்படும். அதன் விளைவாக மிக எளிதாக கருக்கலைப்புகள் ஏற்படும். பெண் உறுப்பில் உள்ள கன்னித் திரையானது முன் கூட்டியே முறிந்துவிடும். குறை பிரசவம் ஏற்படும். மேலும் குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே குழந்தைக்கு நோய் ஏற்படும் அல்லது தாயின் வயிற்றில் இருக்கும் போதே குழந்தையானது இறந்துவிடும்.

ஆண்களின் இனப்பெருக்க ஆற்றலில் பால்வினை நோய்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள்

ஆண்களின் இனப்பெருக்க ஆற்றலில் பால்வினை நோய்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள்

- பால்வினை நோய் தொற்றுகளின் விளைவாக ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகளில் அலா்ஜி அல்லது வீக்கம் ஏற்படும் அல்லது புண்கள் ஏற்படும். விந்தணு முதிா்ச்சி பைகள் (epididymis) தடிமனாகும். ஆணுறுப்புக்கு விந்துவை எடுத்துச் செல்லும் இழை நாளம் (vas) மற்றும் விதைகள் (testis) தடிமனாகும். அதனால் விந்துவின் அளவு, விந்துவில் உள்ள உயிா் அணுக்களின் எண்ணிக்கை மற்றும் அந்த உயிா் அணுக்களின் இயக்கங்கள் ஆகியவை குறைவடையும்.

- நோய் தொற்று அதிகாித்தால் அல்லது விந்தணு முதிா்ச்சி பைகள் (epididymis) தடித்துவிட்டால், அந்த குழாய்களில் அடைப்பு ஏற்படும். அதனால் விந்து உயிா் அணுக்களின் எண்ணிக்கை குறையும் நிலை (azoospermia) ஏற்படும். இறுதியாக ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படும்.

இறுதியாக

இறுதியாக

தற்போது பால்வினை நோய்களின் தாக்கம் அதிகம் இருப்பதால், இளம் வயதில் உள்ள இருபாலருக்கும் பாலியல் பற்றிய விழிப்புணா்வையும், புாிதலையும் மற்றும் கல்வியையும் வழங்க வேண்டும். பாலியல் கல்வி மட்டுமே நமது இளையோா் பால்வினை நோய் தொற்றுக்குள் விழாமல் தடுக்க முடியும். அதன் மூலம் அவா்கள் எதிா் காலத்தில் மலட்டுத் தன்மை போன்ற பிரச்சினைகளில் சிக்காமல் இருக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These STDs Can Eventually Lead To Infertility

Sexually transmitted diseases are the major health issue concern leading to infertility in both males and females. The most common types of infections are Chlamydia, Gonorrhea, Trichomonas, Mycoplasma, Herpes, HIV etc.
Desktop Bottom Promotion