Just In
- 6 min ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 49 min ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- 1 hr ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 2 hrs ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
Don't Miss
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- News சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணை.. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோர்ட்டில் ஆஜர்!
- Movies அச்சச்சோ.. என்ன ஆச்சு?.. ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. விசாரணைக்கு வர உத்தரவு!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆண்கள் ஒரே இரவில் எத்தனைமுறை உறவு கொள்ள முடியும்?... எவ்வளவு நேரம் இடைவெளி?
உடலுறவின்போது ஒருமுறை உச்சத்துக்குப் பின் பெண்கள் அடுத்த முறைக்குத் தயாராவதும் ஆண்கள் இடைவெளி எடுப்பதும் ஏன் என்பது பற்றி தான் இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கப் போகிறோம்.
உடலுறவில் உச்சக் கட்டத்தை அடைந்த பிறகு, இரண்டாம் முறையாக உறவுக்கு தயாராவது கடினம் என்று அநேகர் நினைக்கிறார்கள். பெண்கள், உச்சக் கட்டத்தை அடைந்த சில நொடிகளிலே இயற்கையாகவே அடுத்தச் சுற்றுக்கு தயாராகி விடுவார்கள் என்றும், ஆண்களை பொறுத்தமட்டில் அடுத்த முறை உறவு கொள்ள உடனடியாக தயாராவது எளிதல்ல.
அது அவர்களின் குறையல்ல; ஆண்களின் உயிரியல் அமைப்பே அத்தகையதுதான்.
பாலியல் களைப்பு
ஒருமுறை உடலுறவு கொண்டபின், உடல் தன்னை மீட்டெடுக்கும் நேரம் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடுகிறது. ஒருவர் பாலுறவின் உச்சத்தை தொட்ட மறுகணத்திலிருந்து பாலியல் களைப்பு என்னும் வேளை தொடங்குகிறது. பாலுறவின் உச்சக்கட்டத்திற்கும் மீண்டும் பாலியல் கிளர்ச்சி அடைவதற்கும் இடைப்பட்ட இந்த நேரத்தை இயல்பு நிலைக்கு திரும்புதல் என்றும் கூறலாம்
பாலுறவில் பெண்களுக்கு பல உச்சக்கட்ட நிலைகள் இருப்பதால். பாலியல் களைப்பு ஆண்கள் அளவுக்கு நீண்டதாக இருப்பதில்லை. ஆண்களை பொறுத்தமட்டில் ஆண் பாலியல் களைப்பு என்று குறிப்பிடப்படுகிறது. விந்து வெளியேறும் கணத்திலிருந்து சில நிமிடங்கள் முதல் சிலருக்கு சில நாள்கள் வரைக்கும் பாலியல் களைப்பு நீடிக்கலாம்.
MOST READ: ஆண்களைவிட பெண்களுக்கு ஏன் ஒற்றைத் தலைவலி அதிகமா வருது என்று தெரியுமா?
பாலியல் களைப்பை பாதிக்கும் காரணிகள்
புதிதாக பாலுறவில் ஈடுபடுபவர்களுக்கு பாலியல் களைப்பு, எதிர்பாராமல் எப்போதாவது ஏற்படும் ஒன்று. பாலியல் களைப்பை தீர்மானிப்பதில் பல விஷயங்களுக்கு பங்கு உண்டு. தனிப்பட்ட மனிதனின் உணர்ச்சி, இணையுடன் உணர்வுப் பூர்வமான உறவின் நெருக்கம், மது பழக்கம், நுனித்தோல் நீக்கம், வேறு நோய்களுக்காக சாப்பிடும் மருந்துகள், தனிப்பட்ட மனிதனின் உணர்வுப் பூர்வமான திருப்தி ஆகியவையே இதை தீர்மானிக்கின்றன.
ஆண்களுக்கு பாலியல் களைப்பு: உயிரியல் ரீதியானதே!
ஒருமுறை பாலுறவு கொண்ட பின்னர், மறுபடியும் உறவில் ஈடுபட முடியாததை பல ஆண்கள் தர்மசங்கடமாக உணர்கின்றனர்; மனமுடைந்து போகின்றனர். குறிப்பிட்ட ஆண்களுக்குள்ள குறையாக இது தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால், ஆண் உடலுக்கான பொதுவான சில உடற்ரீதியான காரணிகளாலே இக்களைப்பு ஏற்படுகிறது.
விந்து வெளிப்பட்டவுடன், ஆணின் உடல் அதிக வேலையினிமித்தம் களைப்புற்றதுபோல் தளர்வடைகிறது. பரிவு நரம்பு மண்டலம் உடலை சாந்தப்படுத்தி இயல்பு நிலைக்கு திரும்ப உதவுகிறது. பரிவு நரம்பு மண்டலம், சில நியூரோடிரான்ஸ்மிட்டர் என்னும் நரம்பிய கடத்திகளை தூண்டி, ஆண்குறி விறைப்புக்கு காரணமாகும் தசைகளை தளர்த்துகிறது.
பாலியல் களைப்பு நபருக்கு நபர் வேறுபடுமா?
உடலின் ஆரோக்கியம், பாலியல் வேட்கை மற்றும் உணவு ஆகியவை ஆணின் பாலியல் களைப்பு காலத்தை தீர்மானிப்பதிலும் அதில் தாக்கத்தை ஏற்படுத்துவதிலும் மைய பங்கு வகிக்கின்றன. வெவ்வேறு நபர்களுக்கு இக்கால அளவு வித்தியாசமாக இருக்கிறது.
MOST READ: 43 வயசுலயும் சுஸ்மிதா சென் சிக்குனு இருக்க என்ன பண்றாங்கனு தெரியுமா? நீங்களே பாருங்க...
பாலியல் களைப்பு எவ்வளவு நேரம் நீடிக்கும்?
பதின்ம வயது இளைஞனுக்கு பாலியல் களைப்பு சில நிமிடங்களே நீடிக்கும். முப்பது வயதான ஆண் என்றால் மீண்டும் கிளர்ச்சியுறுவது சற்று கடினம். ஐம்பது மற்றும் அதற்கு மூத்தவர்கள் என்றால் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஒரு முறை மட்டுமே உச்சக்கட்டத்தை அடைய முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன.
பாலியல் களைப்பு நேரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளுள் ஒன்று வயது. வயதை பொறுத்து ஒருவர் மறுபடியும் பாலியல் கிளர்ச்சியுறுவதற்கு 12 முதல் 24 மணி நேரம் ஆகக்கூடும். நாற்பது வயதில் முக்கியமான மாற்றம் வரும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன,
பாலியல் களைப்பு நேரத்தை குறைப்பது எவ்வாறு?
பாலியல் செயல்பாடு, கிளர்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகியவை பாலியல் களைப்பு நேரத்தை பாதிக்கும் காரணிகளாகும். இந்த மூன்று விஷயங்களையும் மேம்படுத்தினால் பாலியல் களைப்பு நீடிக்கும் நேரத்தை குறைக்கலாம்.
பாலியல் செயல்பாடு
உடலுறவு கொள்ளும் முன்பு மது அருந்துவதை தவிர்ப்பது, விறைப்பு தன்மையில் குறைபாடு இருந்தாலோ, வேறு ஏதாவது மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலோ அதைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசிப்பது, இடுப்புப் பகுதியை பலப்படுத்தும் கூபக உடற்பயிற்சிகள் செய்வது ஆகியவற்றின் மூலம் பாலியல் செயல்பாட்டினை அதிகரிக்கலாம்.
MOST READ: முழு முகத்துக்கும் ஒரே பொருள வெச்சு மேக்அப் போடலாம்... எப்படினு பாருங்க...
பாலியல் கிளர்ச்சி
புதிய நிலைகளில் உடலுறவு கொள்ளுதல், உடலுறவு கொள்ளும் முன்பு சுய புணர்ச்சி செய்யாமலிருத்தல், உடலுறவுக்கிடையேயான நேரத்தை மாற்றியமைத்தல், இணையோடு சேர்ந்து புதிய முறைகளை செய்து பார்த்தல் ஆகியவற்றின் மூலம் கிளர்ச்சியை தூண்டலாம்.
சுறுசுறுப்பாக செயல்படுதல் மற்றும் ஆரோக்கியமான உணவு பொருள்களை சாப்பிடுதல் ஆகியவற்றின் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.