For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பிரச்சினைகளில் ஒன்று இருந்தாலும் பெண்களால் கருத்தரிக்க முடியாதாம்... உடனே டாக்டரை பாருங்க...!

ஒரு குழந்தையை கருத்தரிக்க முயற்சிப்பது ஒவ்வொரு தம்பதிகளுக்கும் ஒரு சோதனையான காலகட்டமாக இருக்கும். சிலருக்கு சில மாதங்களில் அதிர்ஷ்டம் கிடைக்கும், மற்றவர்கள் மகிழ்ச்சியான செய்தியைக் கேட்க பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

|

ஒரு குழந்தையை கருத்தரிக்க முயற்சிப்பது ஒவ்வொரு தம்பதிகளுக்கும் ஒரு சோதனையான காலகட்டமாக இருக்கும். சிலருக்கு சில மாதங்களில் அதிர்ஷ்டம் கிடைக்கும், மற்றவர்கள் மகிழ்ச்சியான செய்தியைக் கேட்க பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். நீங்கள் பல மாதங்கள் அல்லது வருடங்கள் முயற்சி செய்தாலும், காத்திருப்பு காலம் அனைவருக்கும் கடினமாக இருக்கும், ஆனால் அவர்களின் வழக்கமான சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் விரைவாக கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.

Reasons Why It Is Difficult To Get Pregnant in Tamil

உண்மைதான், நமது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் மற்றும் பிற செயல்பாடுகள் போன்ற பல காரணிகளால் கருவுறுதல் பாதிக்கப்படுகிறது. உங்கள் பழக்கவழக்த்தில் சில நேர்மறையான மாற்றங்களைச் செய்வதன் மூலம், நீங்கள் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை எளிதாக அதிகரிக்கலாம். நீங்கள் கருத்தரிப்பதை கடினமாக்கும் விஷயங்கள் என்ன மற்றும் அவற்றை எவ்வாறு கையாள்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனஅழுத்தம்

மனஅழுத்தம்

கடுமையான மன அழுத்தம் பல உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம் மற்றும் உங்கள் கருவுறுதலையும் பாதிக்கலாம். இது உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தலாம், இது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பைக் குறைக்கலாம். ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு, உங்கள் உடலும் மனமும் ஒத்திசைவாக இருக்க வேண்டும். கடுமையான மன அழுத்தத்தைக் கையாளும் போது நீங்கள் கர்ப்பமாகிவிட்டாலும், அது உங்களுடன் சேர்ந்து குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம்.

தூக்கமின்மை

தூக்கமின்மை

இரவில் அமைதியான தூக்கம் உங்களை புத்துணர்ச்சியடையச் செய்வது மட்டுமல்லாமல், அமைதியாகவும் மன அழுத்தமின்றி இருக்கவும் அவசியம். ஒரு ஒழுங்கற்ற தூக்க முறை பல உடல்நலக் கவலைகளுக்கு வழிவகுக்கலாம் மற்றும் கருவுறுதல் அளவையும் குறைக்கலாம். தூக்கமின்மை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவைக் குறைக்கிறது, மேலும் தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது. ஆண்களுக்கு, தூக்கமின்மை விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் மற்றும் பெண்களுக்கு, மாதவிடாய் தவறும் பிரச்சினையை ஏற்படுத்தலாம்.

அதிக எடை

அதிக எடை

அதிக எடை மற்றும் பருமனான பெண்களுக்கு கூட, கர்ப்பம் தரிப்பது மற்றவர்களை விட சற்று கடினமாக இருக்கும். ஏனென்றால், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது முறையற்ற அண்டவிடுப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இரண்டு நிலைகளிலும் கருவுறுதல் குறையக்கூடும், இது கர்ப்பம் தரிப்பதில் சிரமத்திற்கு வழிவகுக்கும். குறைந்த உடல் எடை கூட கர்ப்பமாக இருக்க முயற்சிப்பவர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கலாம். சரியாக சாப்பிடுவதும், உடற்பயிற்சி செய்வதும், உடல் சரியான வடிவத்தை பெற உதவும்.

 ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி

ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி

ஹார்மோன் நிலைகள், அதிக எடை அல்லது மன அழுத்தம் போன்ற பல காரணங்கள் ஒருவருக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி இருக்கலாம். ஒரு நிலையான மாதவிடாய் சுழற்சி இல்லாததால், அண்டவிடுப்பின் காலத்தைக் கணக்கிடுவது கடினமாக இருக்கலாம். எனவே நீங்கள் மாதம் முழுவதும் முயற்சி செய்து, அண்டவிடுப்பின் நேரத்தைத் தவறவிட்டாலும், கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

உடல்நல பிரச்சினைகள்

உடல்நல பிரச்சினைகள்

நீங்கள் நீண்ட காலமாக கர்ப்பமாக இருக்க முயற்சி செய்தும், உங்கள் முயற்சியில் தோல்வியுற்றால், மருத்துவரை அணுகவும். உண்மையில், ஒரு குழந்தையைத் திட்டமிடும்போது நீங்கள் முதலில் செய்ய வேண்டியது மருத்துவர்களின் ஆலோசனையாகும். உங்கள் திட்டத்தைத் தடுக்கும் சிக்கலைப் புரிந்துகொள்ள மருத்துவர் உங்களுக்கு உதவ முடியும். நீங்கள் கருத்தரிப்பதை கடினமாக்கும் உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கவும் அவை உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why It Is Difficult To Get Pregnant in Tamil

Here are important things that are making it difficult for you to conceive and how to handle them.
Story first published: Saturday, March 26, 2022, 16:56 [IST]
Desktop Bottom Promotion