திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா?

தாம்பத்தியம் வாழ்க்கை, குழந்தை மற்றும் குடும்பம் ஆகியவற்றை பற்றி தெளிவாக இருக்க வேண்டியது அவசியம்.

திருமணத்திற்கு அழகான புடவை மற்றும் லெஹங்காவை தேர்ந்தெடுப்பதிலிருந்து, சிறந்த புகைப்படக் கலைஞர், மேக்-அப் பொருட்கள் மற்றும் மேக்-அப் மேன், பெரிய திருமண மண்டபம், அழகான திருமண அட்டை ஆகியவற்றினுடன் உங்கள் திருமண நாளைத் திட்டமிடுவீர்கள். அதை பற்றிய நினைவாகவே நீங்கள் இருப்பீர்கள்.

questions-to-ask-your-gynecologist-before-getting-married

மேலும், இதை தவிர கல்யாண சாப்பாடு என்று திருமணத்திற்கு முன்பு செய்ய வேண்டிய பட்டியல்கள் மற்றும் பயணங்களில் அதிக ஆர்வம் காட்டும் கல்யாண வீட்டார்கள், மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான திருமணத்தின் மிக முக்கியமான அம்சத்தை புறக்கணித்துவிடுகிறார்கள். அது மணமகன் மற்றும் மணமகனின் பாலியல் ஆரோக்கியம்தான். இருப்பினும் இதுகுறித்து மணமகனோ அல்லது மணமகளோ கூட தெரிந்துகொள்ள முயற்சி செய்வதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருமண வாழ்க்கை

திருமண வாழ்க்கை

யோசித்துப் பாருங்கள் திருமணம் என்பது உங்களுடைய வாழ்க்கையின் அடுத்தகட்டம். மிகப்பெரிய பொறுப்புகளோடு உங்கள் துணையுடன் சேர்ந்து நீங்கள் உங்கள் வாழ்க்கை பயணத்தை தொடங்கப்போகிறீர்கள். திருமணம் என்றால் சில வழக்கமான விஷயங்களை நீங்கள் பெறப் போகிறீர்கள். தாம்பத்தியம் வாழ்க்கை, குழந்தை மற்றும் குடும்பம் ஆகியவற்றை பற்றி தெளிவாக இருக்க வேண்டியது அவசியம்.

மருத்துவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்

மருத்துவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்

உங்கள் பாலியல் வாழ்க்கை பற்றி மருத்துவரிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். தாம்பத்திய வாழ்க்கைக்கு உங்கள் உடலும் மனமும் தயாரக இருக்கிறதா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும். திருமணத்திற்கு முன்பு நீங்கள் மகளீர் மருத்துவர் ஒருவரை சந்தித்து ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம்.

உடலுறவின்போது வலி

உடலுறவின்போது வலி

எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஒரு பயம் முதல்முதலாக உடலுறவு கொள்ளும்போது வலி ஏற்படும் என்று கூறுவதுதான். நீங்கள் வெரிஜினாக இருந்தால் அல்லது பாலியல் ரீதியாக செயல்படாத ஒருவர் என்றால், முதல் முறையாக உடலுறவு கொள்வதற்கான வாய்ப்பு அச்சுறுத்தலாக இருக்கலாம். உடலுறவு பற்றி உங்களுக்கு பல கேள்விகள் இருக்கலாம். அதை மருத்துவரிடம் கேட்டு தெளிவுபெற்றுக்கொள்ளலாம்.

மாதவிடாய் நாட்களை தள்ளிபோடுவது

மாதவிடாய் நாட்களை தள்ளிபோடுவது

திருமணமான புதிதில் உங்களின் தாம்பத்திய வாழ்க்கை மிக சந்தோஷமாக அமையும். அல்லது நீங்கள் ஹனிமூனுக்கு செல்ல ஏற்பாடுகள் செய்திருப்பீர்கள். இந்த சமயங்களில் உங்களுக்கு மாதவீடாய் என்பது மிகுந்த சிரமத்தையும், வேதனையும் தரும். ஆதலால், உங்கள் மாதவிடாய் காலங்களை தாமதப்படுத்த அல்லது திருமணத்திற்கு முன்பு மாதவிடாய் தூண்டுவதற்கான பாதுகாப்பான வழிமுறைகளைப் புரிந்துகொள்ள மருத்துவரிடம் கலந்து ஆலோசனை செய்யலாம்.

கர்ப்பம் தரிக்க சரியான வயது

கர்ப்பம் தரிக்க சரியான வயது

பெண்கள் கர்ப்பம் தரிப்பது என்பது மிகவும் மகிழ்ச்சிகரமான சம்பவம். உங்களது 20ஆவது வயதின் ஆரம்பத்தில் அல்லது அதற்கு பிற்பகுதியில் நீங்கள் திருமணம் செய்து கொண்டாலும், நீங்கள் எதிர்காலத்தில் கருத்தரிக்க திட்டமிட்டால், ஒரு மகளிர் மருத்துவ நிபுணரை அணுகுவது மிகமிக அவசியம். 25 வயதுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டாலும் கருத்தரிப்பது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும். மேலும் கருத்தரிப்பதற்கான உடல் வலு உங்களுக்கு இருக்க வேண்டும். அதற்கு வயது மிக முக்கியம்.

கருதரிக்க இப்போது விருப்பமில்லை

கருதரிக்க இப்போது விருப்பமில்லை

திருமணத்திற்கு பிறகு உடனே கர்ப்பம் தரிப்பதா அல்லது சில காலங்கள் எடுத்துக்கொள்ளலாமா என்று உங்கள் துணையிடம் நீங்கள் கலந்து ஆலோசிக்க வேண்டும். பின்னர், கால தாமதம் கழித்து கர்ப்பம் தரித்துக்கொள்ளலாம் என்றால், அதற்கான ஆலோசனைகளை மருத்துவரிடம் இருவரும் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் எடுக்கக்கூடிய கருத்தடை வகைகள் மற்றும் உங்கள் உடலை எவ்வாறு தயார் படுத்துவது என்பது குறித்து மருத்துவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளவும்.

திருமணத்திற்குப் பிறகு உடலில் மாற்றங்கள் ஏற்படுமா?

திருமணத்திற்குப் பிறகு உடலில் மாற்றங்கள் ஏற்படுமா?

திருமணத்திற்கு முன்பு நீங்கள் பாலியல் ரீதியாக எந்ததொடர்பிலும் இல்லாமல் இருந்திருப்பீர்கள். தாம்பத்திய வாழ்க்கை என்பது திருமணத்திற்கு பிறகு நீங்கள் சந்திப்பது. ஆதலால், திருமணத்திற்கு பிறகு உங்கள் உடல் சில மாற்றங்களைச் சந்திக்கும். இது குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதை மருத்துவரிடம் கேட்டறியலாம்.

திருமணத்திற்கு முன் சோதனை

திருமணத்திற்கு முன் சோதனை

திருமணத்திற்கு முன்பு நீங்களும், உங்கள் துணையும் சோதனை செய்து கொள்வது நல்லது. திருமணத்திற்கு முன்பு நீங்கள் இருவரும் எடுக்க வேண்டிய சில சோதனைகளை பற்றி மருத்துவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள். திருமணத்திற்கு முன்பு தகாத உடலுறவினால் நோய் அல்லது வேறு நாள்பட்ட நோய்கள் ஆகியவை உங்கள் துணையின் மூலமாக உங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சோதனை செய்துகொள்ளவது மிகமிக அவசியம்.

கருத்தடை மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படுமா?

கருத்தடை மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படுமா?

திருமணத்திற்கு பிறகு குறிப்பிட்ட காலகட்டங்களில் கர்ப்பம் தரிக்க விரும்பாத பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பய்னபடுத்துகின்றனர். இந்த மாத்திரையால் சில பெண்களுக்கு குமட்டல், வாந்தி, எடை அதிகரிப்பு மற்றும் மார்பக பிரச்சனைகளை போன்றவை ஏற்படுத்தக்கூடும். இதனால், கருத்தடை மாத்திரைகளை உபயோகிப்பதால் பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுமா? அல்லது அவற்றை எப்படி சமாளிப்பது என்பது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.

உடலுறவு கொள்ளும்போது இரத்தம் வருமா?

உடலுறவு கொள்ளும்போது இரத்தம் வருமா?

முதல் முறையாக உடலுறவு கொள்ளும்போது இரத்தப்போக்கு ஏற்படுமா? என்பது பலரின் கேள்வி. இது பதில் அவரவரின் உடல்நிலை பொருத்து முதல்முதலாக உடலுறவு கொள்ளும்போது இரத்தம் வருவதும் வராமல் இருப்பது. முதலிரவின்போது, இரத்தப்போக்கு ஏற்பட்டால் மட்டுமே அப்பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாள் என்று கூறுவது கட்டுக்கதை.

பாலியல் விழிப்புணர்வு அவசியம்

பாலியல் விழிப்புணர்வு அவசியம்

பெண்களின் உடல் செயல்பாடுகள் பொருத்துதான் இரத்தப்போக்கு வருவதும், வராமல் இருப்பதும். இதுகுறித்த விழிப்புணர்வு நிறைய பெண்கள் மத்தியிலே இல்லாமல் இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் அவளுடைய உடலும் வித்தியாசமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதுதொடர்பாக நீங்கள் மருத்துவரிடம் கேட்கும்போது அவர் விளக்கமளிப்பார்.

திருமணத்திற்கு ஜாதக பொருத்ததைவிட பாலியல் ரீதியான விழிப்புணர்வே முக்கியம் என்பதை அனைவரும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எனவே திருமணத்திற்கு முன்பு எல்லா மணமக்களும் மருத்துவரை அணுகி பாலியல் தொடர்பான தகவல்களையும், குழப்பங்களை பற்றியும் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, December 7, 2019, 18:26 [IST]
Desktop Bottom Promotion