Just In
- 2 hrs ago
ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! இனிமே இத யூஸ் பண்ணுங்க..
- 6 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்கவும்...
- 16 hrs ago
ஆந்திரா ஸ்பெஷல் புனுகுலு
- 17 hrs ago
உங்க குழந்தையோட ராசிப்படி... நீங்க அவர்கள இப்படி வளர்த்தாதான் பெரிய ஆள வருவாங்களாம் தெரியுமா?
Don't Miss
- Finance
இனி யாரையும் நம்ப தேவையில்லை.. இந்தியா-ரஷ்யா டீம்.. விளாடிமிர் புதின் தரமான திட்டம்..!
- News
அமலாக்கப் பிரிவு முன்பு ஆஜராக போகிறேன்.. மாஸ் காட்ட யாரும் வராதீங்க.. சிவசேனா சஞ்சய் ராவத் ரவுசு
- Movies
அட்லி கேரக்டரை கையில் எடுக்கும் லோகேஷ்..தளபதி 67ல் விஜய்க்கு இப்படி ஒரு ரோலா?
- Automobiles
சொகுசு கார்களை மிஞ்சும் உட்பக்கம்... வெற லெவலில் அப்டேட் செய்யப்பட்ட செல்டோஸை களமிறக்கும் பணியில் கியா!
- Sports
அதிரடி கம்பேக் தரும் ஷிகர் தவான்.. ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. கலக்கல் படை இதோ!!
- Technology
ப்ளூடூத் காலிங் உடன் புதிய ColorFit Pro 4 மற்றும் ColorFit Pro 4 Max.. விலை இவ்ளோ கம்மியா?
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ஆண்களே! இந்த விஷயங்களை தினமும் செஞ்சா...உங்க விந்தணுக்களின் எண்ணிக்கை இருமடங்கு அதிகரிக்குமாம்!
கருத்தரிக்கும் விஷயத்தில், ஆண்,பெண் இருவரும் அதில் சம பங்கு வகிக்கிறார்கள். ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு பெண்ணின் கருமுட்டைகளின் தரத்துடன், ஆணின் விந்தணு எண்ணிக்கையின் தரமும் முக்கியமானது. குறைந்த விந்தணு எண்ணிக்கை அல்லது விந்தணுவின் குறைந்த தரம் எந்த தம்பதியருக்கும் சாதாரணமாக கருத்தரிப்பதை கடினமாக்கும். இந்த வகையான பிரச்சினைகள் அசாதாரணமானது அல்ல, ஆனால் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில், கருவுறுதல் பிரச்சனைகள் அன்றாட வாழ்க்கைப் பழக்கவழக்கங்களால் ஏற்படுகின்றன மற்றும் அவற்றில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் எளிதில் சமாளிக்க முடியும்.
எப்பொழுதும் சிகிச்சையளிக்க முடியாத கருவுறுதல் தொடர்பான சில கடுமையான வழக்குகள் மட்டுமே உள்ளன. எனவே, உங்கள் கருவுறுதலை அதிகரிக்கவும், உங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நீங்கள் விரும்பினால், உங்கள் தினசரி வழக்கத்தில் நீங்கள் செய்ய வேண்டிய சில மாற்றங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்
தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் நன்மைகளை ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். உடல் எடையை குறைப்பதற்காக அல்லது தசைகளை வளர்ப்பதற்காக உடற்பயிற்சி செய்வது என்று பெரும்பாலான மக்கள் நம்பினாலும், உண்மை என்னவென்றால் அது பல்வேறு வழிகளில் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும்.

விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
வழக்கமான உடற்பயிற்சி உங்கள் வாழ்க்கையில் பல ஆண்டுகளை கூடுதலாக சேர்க்கலாம். நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம் மற்றும் உங்கள் இனப்பெருக்க ஆரோக்கியத்தை அதிகரிக்கும். ஒரு நாளில் 30 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்வது கூட விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் கருவுறுதலை அதிகரிக்கவும் உதவும்.

புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை நிறுத்துங்கள்
அதிகமாக புகைபிடிப்பது அல்லது மது அருந்துதல் விந்தணுக்களின் தரத்தை குறைத்து, கருவுறாமை அபாயத்தை அதிகரிக்கும். தொடர்ந்து மது அருந்துவது டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைத்து, விறைப்புச் செயலிழப்பு மற்றும் விந்தணு உற்பத்தியைக் குறைக்கும். மறுபுறம், புகையிலையானது விந்தணுக்களின் செறிவைக் குறைக்கும், விந்தணுவின் இயக்கம் குறைதல் மற்றும் விந்தணுவின் டிஎன்ஏ சேதத்தை அதிகரிக்கும். ஆண்களின் கருவுறுதலில் நேரடி மற்றும் இரண்டாவது புகைபிடித்தல் இரண்டும் ஒரே விளைவைக் கொண்டுள்ளன.

ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும்
ஆரோக்கியமான ஆண்களை விட அதிக எடை கொண்ட ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கான வாய்ப்பு 11 சதவீதம் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தவிர, அவர்களின் விந்தணுவில் விந்தணு இல்லாமல் இருப்பதற்கான வாய்ப்பு 39 சதவீதம் அதிகம். உடல் எடையை குறைப்பது மற்றும் ஆரோக்கியமான உடல் நிறை குறியீட்டை (பிஎம்ஐ) பராமரிப்பது கருவுறுதலை அதிகரிக்கவும். விந்தணு இயக்கத்தை அதிகரிக்கவும் உதவும். அதற்கு, உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாக உணவுகளை சாப்பிட வேண்டும்.

உங்கள் உணவில் வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ் சேர்க்கவும்
நீங்கள் கருவுறுதல் பிரச்சினைகளை எதிர்கொண்டால், உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசித்த பிறகு, உங்கள் உணவில் வைட்டமின் சி மற்றும் டி சப்ளிமெண்ட்களைச் சேர்க்கவும். வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், விந்து தரம், எண்ணிக்கை மற்றும் இயக்கம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, வைட்டமின் டி எடுத்துக்கொள்வதால் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரித்து, கருத்தரிக்கும் வாய்ப்பு 20 சதவீதம் அதிகரிக்கும். விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிப்பவர்களுக்கு துத்தநாகச் சத்துக்களை உட்கொள்வது நன்மை பயக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தத்தை நிர்வகிக்கவும்
நிர்வகிக்கப்படாத மன அழுத்த நிலை விறைப்புத்தன்மை, குறைந்த ஆண்மை மற்றும் குறைந்த விந்தணு எண்ணிக்கை, ஒரு குழந்தையைத் திட்டமிடும் போது சவாலாக இருக்கும் அனைத்து காரணிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும் போது நீங்களும் உங்கள் துணையும் சிரமத்தை எதிர்கொண்டால், உங்கள் மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான வழிகளைத் தேடுங்கள். தியானம் செய்யவும், சில செயல்களில் ஈடுபடவும் அல்லது தொழில்முறை உதவியை நாடவும்.