For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

PCOS பிரச்சினை இருக்கும் பெண்கள் கருத்தரிக்க என்ன செய்யணும் தெரியுமா?

மலட்டுத்தன்மையுடன் போராடும் பெண்களில் பி.சி.ஓ.எஸ் மிகவும் பொதுவான நிலைமைகளில் ஒன்றாகும்.

|

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்) உள்ள பல பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பது குறித்து கவலை உள்ளது. மலட்டுத்தன்மையுடன் போராடும் பெண்களில் பி.சி.ஓ.எஸ் மிகவும் பொதுவான நிலைமைகளில் ஒன்றாகும். இந்த நிலையில் உள்ள பெண்களுக்கு ஆண்ட்ரோஜன்கள் எனப்படும் ஆண் ஹார்மோன்கள் அதிக அளவில் உள்ளன

How To Get Pregnant With PCOS in Tamil

இந்த ஹார்மோன் ஏற்றத்தாழ்வு அண்டவிடுப்பில் தலையிட்டு பெண்கள் கருத்தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. பி.சி.ஓ.எஸ் இருக்கும் பெண்கள் கருத்தரிப்பது சவாலானதாக இருந்தாலும், அவர்களால் கருத்தரிக்கவே முடியாது என்று கூற இயலாது. PCOS இருக்கும் பெண்களின் கருவுறுதல் திறனை அதிகரிக்கும் வழிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மருந்துகள் தேவைப்படலாம்

மருந்துகள் தேவைப்படலாம்

அதிக அளவு ஆண்ட்ரோஜன்கள் ஆரோக்கியமான அண்டவிடுப்பில் தலையிடக்கூடும். அண்டவிடுப்பின் போது ஆரோக்கியமான முட்டை வெளியிடப்படாவிட்டால், ஒரு பெண் கர்ப்பமாக இருக்க முடியாது. பி.சி.ஓ.எஸ் உள்ள பல பெண்கள் அண்டவிடுப்பு மருந்துகளின் உதவியின்றி கர்ப்பமாக முடியாது. இந்த மருந்துகள் ஒரு பெண் கர்ப்பமாக இருக்க அண்டவிடுப்பிற்கு உதவும். பெண்கள் ஒரு சுகாதார நிபுணர் அல்லது கருவுறுதல் நிபுணருடன் இணைந்து சரியான அளவு மற்றும் சிறந்த மருந்துகளைக் கண்டறியலாம்.

ஆரோக்கியமான எடையைக் கண்டறியவும்

ஆரோக்கியமான எடையைக் கண்டறியவும்

தங்களின் மொத்த எடையில் 10% இழப்பதால் ஹார்மோன்கள் மற்றும் அண்டவிடுப்பின் அளவு மேம்படும் என்று மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். உடல் எடையில் 5% குறைப்பு ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சி, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் ஒட்டுமொத்த கருவுறுதலை மேம்படுத்த முடியும். ஒரு ஆய்வில் தவறாமல் உடற்பயிற்சி செய்த பெண்களுக்கு உடற்பயிற்சி செய்யாதவர்களை விட 5% குறைவான கருவுறாமை ஆபத்து இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகப்படியான உடற்பயிற்சி செய்வது உடலில் அழற்சியின் அளவை உயர்த்தும், இது கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும். சிறந்த முடிவுகளுக்கு, வாரத்திற்கு 3-5 நாட்கள் மிதமான தீவிரத்தில் உடற்பயிற்சி செய்வதை நோக்கமாகக் கொள்ளுங்கள்.

மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்கவும்

மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்கவும்

உங்கள் மாதவிடாய் சுழற்சிகளைக் கவனமாக கண்காணித்தால், நீங்கள் அண்டவிடுப்பின் போது, உங்கள் வளமானகாலம் எப்போது தொடங்குகிறது என்பதைப் புரிந்துகொள்ளத் தொடங்குவீர்கள், இதன்மூலம் குழந்தைக்கு முயற்சிக்க மாதத்தின் சரியான நான்கு நாட்களை நீங்கள் கண்டுபிடிக்கலாம்.

MOST READ: காமசாஸ்திரத்தின் படி உடலுறவின் போது உச்சக்கட்ட இன்பத்திற்கு ஆண்கள் பெண்களை எங்கு தீண்டணும் தெரியுமா?

மனஅழுத்தத்தை குறைக்கவும்

மனஅழுத்தத்தை குறைக்கவும்

உங்கள் கருவுறுதல் சீரான ஹார்மோன்கள் மற்றும் ஊட்டமளிக்கப்பட்ட அட்ரினல்களைப் பொறுத்தது, ஆனால் உங்கள் அட்ரீனல் சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோன் உங்கள் ஹார்மோன்களைப் பாதிக்கிறது. எனவே எந்தவொரு மன அழுத்தத்தையும் தீவிரமாக குறைத்து தடுப்பதன் மூலம் நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம். தியானம், மசாஜ், யோகா, உடற்பயிற்சி, செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடுதல். எது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமோ அதனை செய்யவும்.

சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும்

சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும்

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது பல சிக்கல்களை ஏற்படுத்தும். பெண்களைப் பொறுத்தவரை இது கூடுதல் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. PCOS பிரச்சினையும், அதிகளவு இரத்த சர்க்கரையும் ஒன்றோடொன்று நேரடித் தொடர்பு கொண்டவை. எனவே இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்திருப்பது கருவுறுதலை அதிகரிக்க மிகவும் முக்கியமானதாகும்.

ஆரோக்கியமான டயட்

ஆரோக்கியமான டயட்

உங்கள் உணவில் இருந்து சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸை குறைக்க முயற்சிக்கவும், உங்களுக்கு போதுமான புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் கிடைப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள், மேலும் உங்கள் இரத்த சர்க்கரை அளவையும் இன்சுலின் அளவையும் குறைக்க முயலுங்கள். சில பி.சி.ஓ.எஸ் பெண்களில் இன்சுலின் எதிர்ப்புக்கு சிகிச்சையளிப்பதில் மயோ-இனோசிட்டால் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மயோ-இனோசிட்டால் மற்றும் ஆல்பா-லாக்டல்புமின் இரண்டையும் கொண்ட புதிய இனோஃபோலிக் ஆல்பா, இன்சுலின் எதிர்ப்பை இன்னும் திறம்பட மாற்ற உதவும்.

MOST READ: நீங்க நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும் பழக்கம் கொண்டவரா? உங்க உயிருக்கே ஆபத்து வர வாய்ப்பிருக்காம்?

போதைப்பழக்கங்கள்

போதைப்பழக்கங்கள்

பொதுவாகவே புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகளவு தீங்கை ஏற்படுத்தும். PCOS பிரச்சினை உள்ளவர்கள் இந்த செயல்களில் ஈடுபடும்போது அவர்களுக்கு இருமடங்கு ஆபத்துகள் ஏற்படுகிறது. இதனால் அவர்களின் கருவுறுதல் திறன் முற்றிலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Get Pregnant With PCOS in Tamil

Read to know how to get pregnant with PCOS and irregular periods.
Story first published: Saturday, July 24, 2021, 11:45 [IST]
Desktop Bottom Promotion