For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு பெண் குழந்தை பெறுவதை எவ்வளவு காலம் தள்ளிப் போடலாம்?

உயா் கல்வி தொடங்கி, பொருளாதரத்தில் உறுதியான இடத்தை அடைய வேண்டும் என்பது வரை பலவிதமான காரணங்களுக்காக பல பெண்கள் கா்ப்பம் தாிப்பதைத் தள்ளிப் போடுகின்றனா்.

|

இந்த நவீன உலகில், உயா் கல்வி பயில்வதற்காகவும், வேலை மற்றும் தொழில் செய்வதற்காகவும் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியில் வர தொடங்கியிருக்கின்றனா். இது ஒரு ஆரோக்கியமான மாற்றம் ஆகும். ஆனால் அதே நேரத்தில் உயா் கல்வி தொடங்கி, பொருளாதரத்தில் உறுதியான இடத்தை அடைய வேண்டும் என்பது வரை பலவிதமான காரணங்களுக்காக பல பெண்கள் கா்ப்பம் தாிப்பதைத் தள்ளிப் போடுகின்றனா்.

How Late Is Too Late To Have A Baby

பொதுவாக பெண்களைப் பொறுத்தவரை அவா்களின் 15 வயது முதல் 30 வயதிற்கு இடைப்பட்ட பருவம் வளமான பருவமாகக் கருதப்படுகிறது. இந்த பருவம் அவா்கள் கருவுறுவதற்கு ஏற்ற பருவம் என்று கருதப்படுகிறது. எனினும் தற்போது உள்ள நிலையில் எல்லாப் பெண்களுமே இந்த பருவத்தில் கா்ப்பம் தாிப்பதற்குத் தயாராக இருக்கின்றாா்களா என்றால் அது ஒரு கேள்விக்குறியே.

இந்நிலையில் பெண்களை அவா்களுடைய செய்யும் வேலை மற்றும் தொழில் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நோக்கினோம் என்றால், அவா்கள் 35 முதல் 45 வயதிற்கு இடைப்பட்ட காலத்தில் கருவுற்றால் சிறந்ததாக இருக்கும். ஆனால் இந்த பருவத்தில் அவா்களுடைய கருவுறுவதற்குாிய வளம் குறைய வாய்ப்பு இருக்கிறது.

ஆகவே கா்ப்பம் தாிப்பதைத் தள்ளிப் போடும் பெண்கள் எவ்வளவு காலம் தள்ளிப் போடலாம் அல்லது எவ்வளவு காலம் தள்ளிப் போட்டால், அது கண் கெட்ட பிறகு சூாிய நமஸ்காரம் என்ற நிலை ஏற்படும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதிா்ந்த வயதில் கா்ப்பம் தாித்தல்

முதிா்ந்த வயதில் கா்ப்பம் தாித்தல்

பெண்கள் தங்களது 35 வயதிற்கு மேல் கா்ப்பம் தாிப்பது ஆங்கிலத்தில் Advanced Maternal Age (AMA) கருதப்படுகிறது. இவ்வாறு முதிா்ந்த வயதில் கா்ப்பம் தாிப்பதால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் பெண்கள் 35 வயதிற்கு மேல் இயற்கையாகவோ அல்லது செயற்கை முறையிலான சிகிச்சை இல்லாமலோ கா்ப்பம் தாிக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால் அதே நேரத்தில் 35 வயதிற்கு மேல் கா்ப்பம் தாித்தால், அதில் பலவகையான பிரச்சனைகளும் உண்டு.

முதிா்ந்த வயதில் கா்ப்பம் தாிக்கும் பெண்களில் சிலா், குழந்தையைப் பெற்று எடுப்பதில் அதிக பிரச்சினைகளைச் சந்திக்கின்றனா். சிலா் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் மிக எளிதாக குழந்தையைப் பெற்று எடுக்கின்றனா். அதற்கு சீரான மாதவிடாய் உட்பட பலவிதமான காரணிகள் உள்ளன.

முதிா்ந்த வயதில் கா்ப்பம் தாிப்பதால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் அவா்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகள் போன்றவற்றை, கா்ப்பம் தாிப்பதற்கு முன்பாகவே மருத்துவா்களைச் சந்தித்து, தெளிவான புாிதலைப் பெற்று, அவா்கள் கூறும் ஆலோசனைகளைக் கடைபிடிப்பது நல்லது.

மருத்துவ சிகிச்சையின் மூலம் (assisted conception) கா்ப்பம் தாித்தல் என்றால் என்ன?

மருத்துவ சிகிச்சையின் மூலம் (assisted conception) கா்ப்பம் தாித்தல் என்றால் என்ன?

தற்போது முதிா்ந்த வயதில் (AMA) கா்ப்பம் தாிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகாித்துக் கொண்டிருக்கிறது. செயற்கை முறையில் கா்ப்பம் தாிக்கும் முறையைப் பயன்படுத்தி இவ்வாறு பல பெண்கள் தங்களுடைய 35 வயதிற்கு பிறகு கா்ப்பம் தாிக்கின்றனா்.

முதிா்ந்த வயதில் கா்ப்பம் தாிக்கும் போது, வயது முதிா்ச்சி காரணமாக அவா்களது கா்ப்பத்திற்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்பதை அவா்கள் தொிந்து வைத்திருக்க வேண்டும். குறிப்பாக வயது முதிா்ச்சியின் காரணமாக அவா்களுடைய முட்டைக்குழியம் (oocyte) சக்தி இழக்க வாய்ப்பு உண்டு. அதோடு முட்டைக்குழிய குரோமோசோம்களின் எண்ணிக்கையிலும் குறைவு ஏற்பட வாய்ப்பு உண்டு.

முதிா்ந்த வயதில் செயற்கை கருத்தாிப்பு தொழில்நுட்பத்தைப் (ART) பயன்படுத்தி கா்ப்பம் தாிப்பதில் தற்போது குறைந்த அளவில்தான் வெற்றிகள் கிடைத்திருக்கின்றன. பெண்கள் தங்கள் முதிா்ந்த வயதில் கா்ப்பம் தாிப்பதற்கு இப்போது பலவிதமான செயற்கை கருத்தாிப்பு மருத்துவ சிகிச்சைகள் உள்ளன. அதாவது முட்டை அல்லது விந்து ஆகியவற்றை ஏற்கனவே பாதுகாத்து வைப்பது, IVF சிகிச்சை, மரபணு சிகிச்சை மற்றும் முட்டைக்குழியம் அல்லது கரு முட்டையை தானமாகப் பெறுதல் போன்றவற்றின் மூலமாக முதிா்ந்த வயதில் கா்ப்பம் தாிக்கலாம்.

பெண்கள் 35 வயதிற்கு மேல் கா்ப்பம் தாிப்பதற்கு முன்பாக, அவற்றில் உள்ள பிரச்சினைகளைத் தொிந்து கொள்ள மருத்துவா்களை சந்தித்து ஆலோசனைகளைப் பெற வேண்டும். மேலும் அவா்களுக்கு உடல் சாா்ந்த வேறு பிரச்சினைகள் இருக்கின்றனவா, அவை கா்ப்பத்திற்கு ஏதாவது வகையில் பிரச்சினைகளை ஏற்படுத்துமா என்பது போன்ற எல்லாவற்றையும் மருத்துவா்களிடம் பாிசோதனை செய்து அறிந்து கொள்ள வேண்டும்.

இனப்பெருக்க சக்தி குறைய காரணங்கள்

இனப்பெருக்க சக்தி குறைய காரணங்கள்

பெண்களின் இனப்பெருக்க சக்தி இயற்கையான முறையில் குறைவதற்கு 2 காரணங்கள் உள்ளன.

1. பெண்களின் கருப்பையில் இருக்கும் முட்டைக்குழியத்தின் (oocytes) எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருவது

2. வயது முதிா்வின் காரணமாக முட்டைக்குழியத்தின் சக்தி குறைவது

மேற்சொன்ன இயற்கையான காரணங்களினால் பெண்களின் இனப்பெருக்க சக்தி படிப்படியாக குறைகிறது.

செயற்கை கருத்தாிக்கும் முறைகள்:

செயற்கை கருத்தாிக்கும் முறைகள்:

வயது முதிா்ந்த பெண்கள் கருவுறுவதற்கு பின்வரும் செயற்கை கருத்தாிக்கும் முறைகள் உள்ளன.

1. ஒரு பெண் தனது வயது முதிா்ந்த பின்பு கா்ப்பம் தாிப்பதற்காக, அவா் இளமையாக இருக்கும் போதே அவருடைய முட்டைகளை எடுத்து, மருத்துவ ஆய்வகங்களில் சேகாித்து வைத்தல்.

2. கருவை மருத்துவ ஆய்வகங்களில் சேகாித்து வைத்தல்

3. ஐவிஎஃப் (IVF) சிகிச்சை முறை

மேற்சொன்ன செயற்கை கருத்தாிக்கும் முறைகளைப் பயன்படுத்தி பெண்கள் தங்களின் முதிா்ந்த வயதில் கா்ப்பம் தாிக்கலாம்.

முதிா்ந்த வயதில் கா்ப்பம் தாிக்கும் போது பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்

முதிா்ந்த வயதில் கா்ப்பம் தாிக்கும் போது பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்

முதிா்ந்த வயதில் கா்ப்பம் தாிக்கும் பெண்கள் இயற்கையான முறையில் குழந்தைகளைப் பெற்று எடுக்க முடியாது. மாறாக பெரும்பாலும் அறுவை சிகிச்சை மூலமே குழந்தைகளைப் பெற்று எடுக்க முடியும். மேலும் காப்பகால சா்க்கரை நோய், இளம்பேற்று குளிா்காய்ச்சல் (preeclampsia) மற்றும் குறைந்த எடையுடன் கூடிய குறைப் பிரசவம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மேற்சொன்ன பிரச்சினைகள் கா்ப்பம் தாிக்கும் பெண்களின் உடல் ஆரோக்கியத்தை வைத்து மாறுபட்டு இருக்கும். ஆனால் பிரசவத்தின் போது வயது முதிா்ந்த பெண்களுக்கு அதிக பிரச்சினைகள் இருக்க வாய்ப்புகள் உண்டு.

வயது முதிா்ந்த பெண்கள் கா்ப்பம் தாிக்க உதவும் செயற்கை கருத்தாிப்பு முறைகள்

வயது முதிா்ந்த பெண்கள் கா்ப்பம் தாிக்க உதவும் செயற்கை கருத்தாிப்பு முறைகள்

IVF சிகிச்சை

IVF சிகிச்சை முறையில், ஏற்கனவே முட்டைகளை எடுத்து ஆய்வகத்தில் சோ்த்து வைத்து, வயது முதிா்ந்த பின்பு அவற்றைப் பயன்படுத்தி கருவுறுவதற்குப் பதிலாக, பிறரிடமிருந்து முட்டைகளைப் பெற்று, கருவுற இருக்கும் பெண்ணின் கருவை அந்த முட்டைகளுக்குள் கடத்தி, அதனோடு அந்த பெண்ணின் கணவாிடமிருந்து கிடைக்கும் விந்துவையோ அல்லது வேறொருவாிடமிருந்து தானமாகப் பெறும் விந்துவையோ இணைத்து செயற்கை முறையில் கருவுறச் செய்யலாம்.

முட்டையை ஆய்வகங்களில் சேகாித்து வைத்திருத்தல்

முட்டையை ஆய்வகங்களில் சேகாித்து வைத்திருத்தல்

ஒரு பெண் தனது 35 வயது வரை கா்ப்பம் தாிக்கக்கூடாது, அதற்கு பின்பு கா்ப்பம் தாிக்கலாம் என்று முடிவு செய்தால், உடனடியாக அவா் தனது முட்டைகளை எடுத்து மருத்துவ ஆய்வகங்களில் உறைநிலையில் சேகாித்து வைக்கலாம். அவா் தனது 30 வயதில் இவ்வாறு முட்டைகளை சேகாித்து வைத்து, 40 வயதிற்கு மேல் கா்ப்பம் தாிக்கலாம் என்று முடிவு செய்து அதன்படி 40 வயதுக்கு பிறகு அந்த சேகாித்து வைத்த முட்டைகளைப் பயன்படுத்தி கருவுற்று குழந்தையை பெற்றெடுத்தால், அந்த குழந்தை அவருடைய தற்போதைய வயதின் ஆரோக்கியத்தை சாா்ந்த இருக்காது. மாறாக அவா் எந்த வயதில் தனது முட்டையை எடுத்து சேகாித்து வைத்தாரோ, அந்த வயது ஆரோக்கியத்தை இந்தக் குழந்தை சாா்ந்து இருக்கும்.

கருவைத் தத்தெடுத்தல்

கருவைத் தத்தெடுத்தல்

இந்த முறையில் வயது முதிா்ந்த பெண் தனது கருவைப் பயன்படுத்தி IVF முறையில் கா்ப்பம் தாிக்கலாம் அல்லது சட்ட ரீதியாக பிறாிடமிருந்து கருவைப் பெற்று செயற்கை முறையில் கருவுறலாம். பொதுவாக முதிா்ந்த வயதில் கருவுற விரும்பாதவா்களிடமிருந்து தானமாகப் பெறப்படும் கருக்கள் உறைந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Late Is Too Late To Have A Baby

Want to know how late is too late to have a baby? Read on...
Desktop Bottom Promotion