For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பமாவதற்கு எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும்?

|

பொதுவாக திருமணமானவுடன் பல தம்பதிகள் சீக்கிரம் கருத்தரித்துவிடுவார்கள். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் தம்பதிகள் பலரும் தங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின்னரே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்று நினைத்து, செட்டில் ஆகும் வரை குழந்தைப் பெறுவதைத் தள்ளிப் போடுகிறார்கள். சில தம்பதிகள் குழந்தைப் பெற்றுக் கொள்ள ஆசைப்படுவார்கள். ஆனால் அவர்களால் முடியாமல் போகும்.

சில அதிர்ஷ்டமான தம்பதிகள் முதல் முயற்சியிலேயே கருத்தரித்துவிடுவார்கள், சிலருக்கு பல காலம் எடுக்கும். ஆனால் எத்தனை முறை உடலுறவு கொண்டால் கருத்தரிக்க உதவியாக இருக்கும் என்பது குறித்த ஒன்று புதிய ஆய்வு உள்ளது என்பது தெரியுமா? ஆம், சமீபத்தில் தான் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

MOST READ: கர்ப்பமாக கூடாது, ஆனா 'அது' பண்ணணும்.. எப்படி? தெரிஞ்சுக்க இத படிங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதிய ஆய்வு

புதிய ஆய்வு

சராசரியாக தம்பதிகள் கருத்தரிக்க முயற்சி செய்யத் தொடங்கிய நேரத்தில் இருந்து 78 முறை உடலுறவு கொள்கிறார்கள். இந்த 78 முறையானது 158 நாட்கள் அல்லது சுமார் 6 மாத காலமாகும்.

1,194 பெற்றோர்களை கொண்டு ஒரு ஆய்வு செய்த போது, அதில் பெரும்பாலான தம்பதிகள் கருத்தரிக்க முயற்சிக்கும் போது ஒரு மாதத்திற்கு 13 முறை உடலுறவு கொண்டிருந்ததைக் கண்டறிந்தனர். இவ்வளவு முறை உடலுறவு கேட்பதற்கு வேடிக்கையாக தோன்றினாலும், கருத்தரிக்க முயற்சிப்பதில் சில கவலைகள் உள்ளன.

MOST READ: கொரோனாவின் புதிய 6 எச்சரிக்கை அறிகுறிகள்!

கருத்தரிப்பதில் உள்ள சிரமம்

கருத்தரிப்பதில் உள்ள சிரமம்

இந்த ஆய்வில், கருத்தரிக்க முயற்சிக்கும் போது, பலரும் உடலுறவு கொள்வதை ஒரு வேலையாக உணர்வதை ஒப்புக் கொண்டுள்ளனர். அதில் 43 சதவீத மக்கள் கட்டாயம் கருத்தரிக்க வேண்டுமென்ற ஒருவித அழுத்தம் மற்றும் பயத்துடன் உடலுறவில் ஈடுபடுவதால், எங்கு நம்மால் கருத்தரிக்க முடியாமல் போகுமோ என்ற எண்ணம் தோன்ற ஆரம்பிப்பதும் தெரிய வந்தது.

பொதுவாக கருத்தரிப்பது கடினமான வேலை மற்றும் மன அழுத்தமாக உணரக்கூடும். ஆனால் நீங்கள் உங்கள் குழந்தையின் மீது கவனம் செலுத்தும் போது, ஒருவரை ஒருவர் நினைவில் வைத்து அன்பை பகிர்ந்து கொண்டால் நிச்சயம் உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

MOST READ: பிபி நோயாளிகளே! உங்க பிபி எக்குதப்பா எகிறாம இருக்க, இந்த ஜூஸை அடிக்கடி குடிங்க...

கருத்தரிப்பதற்கான சிறந்த பெஷிஷன் எது?

கருத்தரிப்பதற்கான சிறந்த பெஷிஷன் எது?

சில மக்கள் கருத்தரிப்பது என்பது உடலுறவு கொள்ளும் நிலையைப் பொறுத்தது என்று நம்புகின்றனர். அதில் மிகவும் பிரபலமான நிலையாக மூன்றில் ஒரு பகுதி மக்கள் நினைப்பது டாக்கி ஸ்டைல் தான். இதை சுமார் 36 சதவீத தம்பதிகள் பயன்படுத்துகின்றனர்.

MOST READ: டர்ர்ர்.... புர்ர்ர்... மூலமா கொரோனா வைரஸ் பரவும் என்பது உண்மையா? ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

அடிக்கடி கூடாது

அடிக்கடி கூடாது

பல நிபுணர்களின் கூற்றுப்படி, கருத்தரிக்க நினைக்கும் தம்பதிகள் ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் உடலுறவில் ஈடுபடக்கூடாது. பல முறை உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் உண்மையில், அடிக்கடி உடலுறவு கொண்டால், ஆரோக்கியமான விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இதன் விளைவாக கருத்தரிப்பதற்கான வாய்ப்பும் குறையும். ஆகவே எந்த தம்பதிகள் 2 நாட்களுக்கு ஒரு முறை உடலுறவில் ஈடுபடுகிறார்களோ, அவர்களுக்கு கருத்தரிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

MOST READ: நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றணுமா? அப்ப இந்த டீயை தினமும் குடிங்க...

கருத்தரிப்பதற்கு ஒரு மாதத்தில் உடலுறவு கொள்ள சரியான நேரம் எது?

கருத்தரிப்பதற்கு ஒரு மாதத்தில் உடலுறவு கொள்ள சரியான நேரம் எது?

அனைத்து நாட்களுமே பெண்கள் கருத்தரிப்பதற்கான சரியான நாளாக இருப்பதில்லை. சில நாட்கள் பெண்கள் எளிதில் கருத்தரிக்கும் நாட்களாக கருதப்படுகின்றன. அது மாதவிடாய் சுழற்சி ஆரம்பிப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பும், அண்டவிடுப்பு நாளும் ஆகும்.

அண்டவிடுப்பின் இரண்டு நாட்கள் மற்றும் அண்டவிடுப்பின் நாளில் உடலுறவில் ஈடுபட்டால், கருத்தரிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

MOST READ: இந்த சாதாரண பழக்கங்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தை அதிகரிக்கும் என்பது தெரியுமா? இன்னக்கே அத கைவிடுங்க...

ஓவுலேஷன்/அண்டவிடுப்பு

ஓவுலேஷன்/அண்டவிடுப்பு

அண்டவிடுப்பின் போது, கருப்பை ஒரு முதிர்ந்த கருமுட்டையை வெளியிடும். இந்த முட்டை கருப்பைக்கு செல்லும் வழியில் ஃபாலோபியன் குழாய் வரை செல்கிறது. இந்த செயல்முறையின் போது, விந்தணுக்கள் கருவுற்ற முட்டையை சந்திக்கின்றன. விந்தணு ஒரு பெண்ணின் உடலுக்குள் சுமார் 5 நாட்கள் வரை வாழக்கூடும். ஆகவே, கருத்தரிக்க முயற்சிக்கும் போது, அண்டவிடுப்பின் போது, விந்தணுக்களானது ஃபாலோபியன் குழாய்களில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதற்கு அண்டவிடுப்பிற்கு 2-3 நாட்கள் முன்பிருந்தே உடலுறவில் ஈடுபட வேண்டும்.

MOST READ: கொரோனாவின் புதிய அறிகுறியை கூறிய ஸ்பானிஷ் நிபுணர்கள்... அது என்ன அறிகுறி?

ஓவுலேசன் காலத்தை கணக்கிடுவது எப்படி?

ஓவுலேசன் காலத்தை கணக்கிடுவது எப்படி?

வீட்டின் காலண்டரில் உங்களுடைய மாதவிடாய் சுழற்சி காலத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு சுழற்சியும், உங்கள் மாதவிடாய் சுழற்சியின் முதல் நாளில் தொடங்கி, அடுத்த சுழற்சி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக முடிவடைகிறது.

உங்கள் சுழற்சியின் நடுப்பகுதியைத் தேடுங்கள். உங்களுடைய சுழற்சி 28 நாட்களைக் கொண்டிருந்தால், 14 ஆம் நாள் தான் உங்களின் அண்டவிடுப்பு/ஓவுலேசன் காலமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Frequently Should You Have Sex To Get Pregnant

Did you know there is a science-backed frequency of sex which can help couples get pregnant, finds a new study.