For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களோட பாலியல் ஆசையை அதிகரிக்கவும் சீக்கிரம் கர்ப்பமாகவும் இந்த பொருட்களை சாப்பிட்டால் போதுமாம்...!

ஒரு பெண்ணின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆரோக்கியமான உணவைப் பராமரிப்பது முக்கியம், ஆனால் ஒரு குழந்தையை கருத்தரிக்க முயற்சிக்கும்போது இது மிகவும் முக்கியமானது.

|

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின்படி, சுமார் 10 பெண்களில் 1 பெண் கருவுறாமை குறைபாடால் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு பெண்ணின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆரோக்கியமான உணவைப் பராமரிப்பது முக்கியம், ஆனால் ஒரு குழந்தையை கருத்தரிக்க முயற்சிக்கும்போது இது மிகவும் முக்கியமானது.

Foods That Increase Fertility and Libido in Women

கருவுறாமை என்பது எண்டோமெட்ரியோசிஸ், பி.சி.ஓ.எஸ் மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை, கருவுறாமை தொடரலாம். இந்த பதிவில் பெண்களின் கருவுறுதல் திறனை அதிகரிக்கும் உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடற்பாசி

கடற்பாசி

கருவுறுதல் திறனுக்கு இன்றியமையாத உறுப்புகளான கல்லீரல், சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் அட்ரீனல்களை வளப்படுத்த உதவும் ஊட்டச்சத்துக்கள் கடற்பாசி நிரம்பியுள்ளன. கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்கள் கடற்பசியை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

சால்மன்

சால்மன்

சால்மன் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது, அவை இனப்பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகின்றன. ஆண், பெண் இருவருமே தங்களின் கருவுரும் திறனை அதிகரிக்க சால்மனை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

அத்திப்பழம்

அத்திப்பழம்

பண்டைய கிரேக்கர்களின் காலத்திலிருந்தே அத்திப்பழம் கருவுறுதலை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது, இப்போது நம்மிடம் அறிவியல் சான்றுகள் உள்ளன. அத்திப்பழத்தில் நிறைய இரும்புச்சத்து உள்ளது, அவை ஆரோக்கியமான கருமுட்டை மற்றும் அண்டவிடுப்பிற்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.

MOST READ: கிரக மாற்றத்தால் உங்க படிப்பில் 2021 ஆம் ஆண்டு உங்க ராசிப்படி எப்படிப்பட்ட மாற்றம் வரப்போகிறது தெரியுமா?

சிப்பிகள்

சிப்பிகள்

சிப்பிகள் லிபிடோவை அதிகரிப்பதாக அறியப்படுகின்றன, ஆனால் சிப்பிகள் கருவுறுதலுக்கான சிறந்த ஆதாரமாகவும் இருக்கலாம், ஏனெனில் அவை துத்தநாகத்தால் நிரம்பியுள்ளன, இது நல்ல தரமான முட்டைகளின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

பெர்ரீஸ்

பெர்ரீஸ்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் எந்த வகையான பெர்ரிகளும் முட்டைகள் சேதமடைவதிலிருந்தும், வயதானதிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது. இயற்கையாகவே ஒரு பெண்ணின் பாலியல் செயல்திறனை அதிகரிப்பதில் ஸ்ட்ராபெர்ரிகளுக்கு முக்கியப்பங்கு உள்ளது.

பருப்புகள்

பருப்புகள்

பருப்புகளில் மெலிந்த புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. , இது கருவுறுதல் மற்றும் லிபிடோவை அதிகரிக்க உதவுகிறது. குறைவான இரும்புச்சத்து அளவு அனோவ்லேஷனுக்கு வழிவகுக்கும், இது அண்டவிடுப்பின் போது ஆரோக்கியமான முட்டையை உருவாக்காது. இந்த குறைபாட்டை போக்க பருப்புகள் உதவும்.

MOST READ: நாம் விரும்பி சாப்பிடும் இந்த ஆரோக்கியமான பழங்களில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா?

மக்கா ரூட்

மக்கா ரூட்

மக்கா ரூட் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆற்றலை அதிகரிப்பதன் மூலமும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலமும், முக்கிய தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலமும் கருவுறுதலை அதிகரிக்கிறது. மக்கா ரூட் இரும்பு மற்றும் அயோடின்சத்துக்கள் நிரம்பியது.

சர்க்கரைவள்ளி கிழங்கு

சர்க்கரைவள்ளி கிழங்கு

கருவுறுதலை அதிகரிக்க உதவும் அண்டவிடுப்பின் தூண்டுதல் பொருள் சர்க்கரைவள்ளி கிழங்கில் நிறைந்துள்ளது. கருத்தரிக்க முயற்சிக்கும் போது பெண்கள் அவசியம் இதனை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

MOST READ: பெண்களின் யோனி குறித்த மூடநம்பிக்கைகளும் யோனியைப் பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகளும்...!

கொழுப்பு நிறைந்த பால்

கொழுப்பு நிறைந்த பால்

முழு கொழுப்புகள் நிறைந்த பால் கருவுறுதல் மற்றும் கர்ப்பத்திற்கு சிறந்த தேர்வாகும். பால் நிறைவுற்ற கொழுப்பில் நிறைந்துள்ளது, இது கருவுறுதலுக்கு குறிப்பாக நன்மை பயக்கும். வைட்டமின்கள் ஏ, ஈ, டி, கே மற்றும் கே 2 உள்ளிட்ட கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களின் நல்ல மூலமாகும். முழு கொழுப்புள்ள பால் பொருட்களை சாப்பிட்ட பெண்கள் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களை சாப்பிட்ட பெண்களுடன் ஒப்பிடும்போது அண்டவிடுப்பின் சிக்கல்களை சந்திப்பது குறைவு என்று கண்டறியப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That Increase Fertility and Libido in Women

Check out the list of foods that increase fertility and libido in women.
Story first published: Saturday, December 19, 2020, 17:56 [IST]
Desktop Bottom Promotion