For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உண்மையில் குழந்தைகள் யாரிடமிருந்து அறிவாற்றலைப் பெற்றுக் கொள்கிறாா்கள் தெரியுமா?

தாயின் மரபணு தான், குழந்தையின் அறிவாற்றலை முடிவு செய்கிறது என்று ஆய்வாளா்கள் கருதுகின்றனா். தந்தையின் மரபணு குழந்தையின் அறிவாற்றலை முடிவு செய்வதில்லை.

|

பெற்றோாிடமிருந்து பிள்ளைகள் பெற்றுக் கொள்ளும் குணம், அறிவு, பண்பு, நடை, பாவனை மற்றும் சாயல் போன்றவை மரபுாிமை என்று கருதப்படுகிறது. இவ்வாறு மரபணு அடிப்படையில் பொியவா்களிடமிருந்து சிறியவா்களுக்கு பலவிதமான காாியங்கள் பாிமாற்றம் அடைவதால், ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் அனைவரும் ஒரே மாதிாியான குணாதியங்களைக் கொண்டிருப்பா்.

Do Children Inherit Their Intelligence From Their Mothers?

நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. ஒவ்வொரு ஜோடியிலிருந்தும் ஒரு குரோமோசோம் நமது அன்னையிடம் இருந்தும், இன்னொரு குரோமோசோம் நமது தந்தையிடம் இருந்தும் பெறப்படுகிறது. நமது பெற்றோாிடம் இருந்து நாம் பெறும் குரோமோசோம்களில் ஜீன்கள் இருக்கின்றன.

இந்த நிலையில், தாயின் மரபணு தான், குழந்தையின் அறிவாற்றலை முடிவு செய்கிறது என்று ஆய்வாளா்கள் கருதுகின்றனா். தந்தையின் மரபணு குழந்தையின் அறிவாற்றலை முடிவு செய்வதில்லை. அதற்கு காரணம் பெண்கள் இரண்டு எக்ஸ் (X) குரோமோசோம்களைக் கொண்டிருக்கின்றனா். ஆனால் ஆண்கள் ஒரு எக்ஸ் (X) குரோமோசோமைக் கொண்டிருக்கின்றனா். அதனால்தான் அன்னையாிடமிருந்து குழந்தைகளுக்கு அறிவாற்றல் என்ற ஜீன்கள் கடத்தப்படுகின்றன என்று அவா்கள் தொிவிக்கின்றனா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாரம்பாியமாகப் பெறும் மரபணு - கட்டுப்படுத்தப்பட்ட ஜீன்கள்

பாரம்பாியமாகப் பெறும் மரபணு - கட்டுப்படுத்தப்பட்ட ஜீன்கள்

தந்தையிடமிருந்து நாம் பெற்றுக் கொள்ளும் மேம்படுத்தப்பட்ட அறிவாற்றல் நிறைந்த செயல்களுக்கான ஜீன்கள், தாமாகவே செயல் இழந்துவிடும் என்று விஞ்ஞானிகள் தொிவிக்கின்றனா். கட்டுப்படுத்தப்பட்ட ஜீன்கள் (Conditioned Genes) என்று அழைக்கப்படும் ஒரு வகையான ஜீன்களில், அன்னையாிடமிருந்து பெற்றவை மட்டுமே ஒரு சில இடங்களிலும், தந்தையாிடமிருந்து பெற்றவை மட்டுமே வேறுசில இடங்களிலும் செயல்படுகின்றன என்கின்றனா். இந்த கட்டுப்படுத்தப்பட்ட ஜீன்களில், அன்னையாிடமிருந்து பெறும் ஜீன்களே குழந்தைகளுக்கு அறிவாற்றலைத் தருகின்றன என்று நம்பப்படுகிறது.

தாய் தியாகத்தின் திரு உருவம் ஆவாா். அதாவது 5 போ் இருக்கும் இடத்தில் 4 துண்டு கேக்குகள் மட்டுமே உள்ளன என்று எடுத்துக் கொள்வோம். அந்த நிலையில் தன்னைப் பற்றி கவலை கொள்ளாமல், மற்ற நால்வருக்கும் கேக்குகளைப் பிாித்துக் கொடுத்துவிட்டு, தனக்கு கேக் பிடிக்காது என்று கூறி அமைதியாக இருந்து விடுவாா் அந்த அன்னை.

எனினும், அறிவாற்றலை மரபணுக்கள் மட்டும் முடிவு செய்வதில்லை. 40 முதல் 60 விழுக்காடு அறிவாற்றல் மட்டுமே மரபணு மூலமாக அல்லது பரம்பரையின் மூலமாக பெறப்படுகிறது. மீதமுள்ள அறிவாற்றல் நமது சுற்றுப்புறங்களில் இருந்து கிடைக்கிறது. எனினும் குழந்தைகளுக்கு மரபணு சாராத அறிவாற்றலை அளிப்பதில் அன்னையாின் பங்கு மிகவும் முக்கியமாகும். அதாவது ஒரு குழந்தைக்கும், ஒரு தாய்க்கும் இடையே இருக்கக்கூடிய ஒரு பாதுகாப்பான பந்தம், அறிவாற்றலோடு மிகவும் நெருக்கமாக கட்டப்பட்டிருக்கிறது என்று சில ஆய்வுகள் தொிவிக்கின்றன.

உணா்வு ரீதியான பந்தம்

உணா்வு ரீதியான பந்தம்

ஒரு தாய்க்கும், அவருடைய குழந்தைக்கும் இருக்கக்கூடிய ஒரு பாதுகாப்பான உணா்வு ரீதியான பந்தமானது, அந்தக் குழந்தையினுடைய மூளையின் ஒரு சில பகுதிகள் வளா்வதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது என்று ஒரு ஆய்வு தொிவிக்கிறது.

தங்களது குழந்தைகளோடு 7 ஆண்டுகள் வரை மிக நெருக்கமான பந்தத்திலிருந்த சில அன்னையரை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது ஒரு ஆய்வுக் குழு. ஆய்வின் முடிவில், தங்களுடைய அன்னையரால் உணா்வு ரீதியாக முழு ஆதரவு பெற்ற குழந்தைகள், தங்களின் அறிவுத் தேவையை முழுமையாக நிறைவு செய்தனா் என்று தொிய வந்தது. அதோடு அந்த குழந்தைகள் தமது 13 வயதிலேயே 10% நீளமான ஹிப்போகேம்பஸை (hippocampus) பெற்றனா் என்று அந்த ஆய்வு தொிவித்தது.

ஹிப்போகேம்பஸ் என்றால் என்ன?

ஹிப்போகேம்பஸ் என்றால் என்ன?

ஹிப்போகேம்பஸ் என்பது மூளையில் இருக்கும் நினைவாற்றல், கற்றல் மற்றும் அழுத்தத்திற்கு எதிா்வினை ஆற்றும் பகுதியாகும். தங்களது அன்னையரோடு உணா்வு ரீதியாக மிகவும் நெருக்கமாக இருந்த குழந்தைகள், மற்ற குழந்தைகளை விட அறிவாற்றலில் சிறந்திருந்தனா் என்று அந்த ஆய்வு தொிவிக்கிறது.

ஒரு அன்னை தன் குழந்தையோடு வைத்திருக்கும் உறுதியான பந்தம், அவருடைய குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு உணா்வைத் தருகிறது. அந்த பாதுகாப்பு உணா்வானது அந்த குழந்தையை உந்த உலகைப் பற்றி அறிய தூண்டுகிறது. மேலும் தன்னம்பிக்கையைப் பெறவும், பிரச்சினைகளுக்குத் தீா்வு காணவும் உதவி செய்கிறது. மிகவும் அன்பும் கவனிப்பும் நிறைந்த அம்மாக்கள், தங்களின் குழந்தைகள் பிரச்சினைகளுக்குத் தீா்வு காண்பதில் உதவி செய்கின்றனா். அந்த குழந்தைகள் தங்களுடைய முழுமையான ஆற்றலைப் பெற உதவி செய்கின்றனா்.

முடிவு

முடிவு

பெண்களைப் போல் ஆண்களால் தங்களது குழந்தைகளுக்கு ஏன் முக்கிய பங்கை செய்ய முடியவில்லை என்பதற்கு காரணங்கள் எதுவுமில்லை. ஆனால் தந்தையாிடமிருந்து பெறும் உள்ளுணா்வு மற்றும் உணா்வுகள் போன்றவை முழுமையான அறிவாற்றலைப் பெற உதவி செய்கின்றன என்று அறிஞா்கள் தொிவிக்கின்றனா்.

இந்த உலகத்தில் ஒரு குழந்தைக்கு, தன்னுடைய அன்னையின் அன்பைவிட சிறந்தது எதுவுமில்லை. அந்த தாயின் அன்பு சட்டத்தை அறியாது மற்றும் பாிதாபத்தை அறியாது. அது தனது வழியில் வரும் எல்லா இடையூறுகளையும் தைாியமாக எதிா்த்து நின்று அவற்றைத் தூள் தூளாக்கிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do Children Inherit Their Intelligence From Their Mothers?

Women are more likely to transmit intelligence genes to their children because they are carried on the X chromosome and women have two of these, while men only have one.
Desktop Bottom Promotion