For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அவசரப்பட்டு 'கசமுசா' பண்ணிட்டீங்களா? கர்ப்பமாகாம இருக்க 'இத' யூஸ் பண்ண நினைக்கிறீங்களா? முதல்ல இத படிங்க...

சில சமயங்களில் திட்டமிடப்படாமல் உறவில் ஈடுபட்டு, அதனால் கருத்தரிப்பதைத் தடுக்க என்ன செய்வதென்று பல தம்பதிகள் யோசிப்பதுண்டு. சரி, இம்மாதிரியான சூழ்நிலையில் அவசர கருத்தடை மாத்திரைகள் உதவுமா?

|

கொரோனா ஊரடங்கு காலத்தில் பல தம்பதிகள் வீட்டில் இருந்து கொண்டே தங்கள் அலுவல வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை தம்பதிகளுக்கு ஒன்றாக நேரத்தை கழிக்க சந்தர்ப்பம் கிடைத்ததில்லை. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பல தம்பதியர்கள் 24 மணிநேரமும் ஒன்றாகவே இருக்கிறார்கள். இதனால் தம்பதியர்கள் எளிதில் அடிக்கடி உடலுறவில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கிறது. கொரோனா பரவும் காலத்தில் கருத்தரிப்பது என்பது பாதுகாப்பானது அல்ல என்பதால், கருத்தரிக்காமல் இருக்க பல தம்பதிகள் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துகிறார்கள்.

Can Emergency Contraception Prevent Unplanned Pregnancies? Everything You Need To Know

ஆனால் சில சமயங்களில் திட்டமிடப்படாமல் உறவில் ஈடுபட்டு, அதனால் கருத்தரிப்பதைத் தடுக்க என்ன செய்வதென்று பல தம்பதிகள் யோசிப்பதுண்டு. சரி, இம்மாதிரியான சூழ்நிலையில் அவசர கருத்தடை மாத்திரைகள் உதவுமா? ஒருவர் எத்தனை முறை அதைப் பயன்படுத்தலாம்? என்பன போன்ற கேள்விகள் தற்போது பல தம்பதியர்களின் மனதில் அதிகம் எழுந்து வருகின்றன. இப்படி அவசர கருத்தடை மாத்திரைகள் குறித்து மனதில் எழும் பல கேள்விகளுக்கான விடை உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவசர கருத்தடை என்றால் என்ன?

அவசர கருத்தடை என்றால் என்ன?

அவசர கருத்தடை மாத்திரை என்றால் ஒரு வகையான பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரையாகும். பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடும் போது மற்றும் இன்னும் குழந்தையைப் பெற்றுக் கொள்ள தயாராக இல்லாத பெண்கள் கருத்தடை மாத்திரைகளை எடுக்கலாம்.

கருத்தடை மாத்திரைகளில் வகைகள் உள்ளதா?

கருத்தடை மாத்திரைகளில் வகைகள் உள்ளதா?

ஆம், கருத்தடை மாத்திரைகளில் இரண்டு வகைகள் உள்ளன.

* ஒன்று மாத்திரை வடிவத்தில் அறியப்படும் பிளான் பி அல்லது காலை பின் மாத்திரை ஆகும். இந்த மாத்திரைகளின் வர்த்தக பெயர் I-pill, Unwanted 72 , Smart 72 ஆகும். லெவோனோர்ஜெஸ்ட்ரல் கொண்ட கருத்தடை மாத்திரைகள் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்ட பின் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட வேண்டும்.

* மற்றொன்று கருப்பையக கருத்தடை சாதனங்கள் (Intrauterine Contraception Devices (IUD)). இது கர்ப்பத்தை தடுப்பதில் மாத்திரைகளை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவற்றை 120 மணி நேரம் அல்லது 5 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

அவசர கருத்தடை மாத்திரையை தினமும் பயன்படுத்தலாமா?

அவசர கருத்தடை மாத்திரையை தினமும் பயன்படுத்தலாமா?

அவசர கருத்தடை மாத்திரையை வழக்கமாக பயன்படுத்தலாமா என்ற கேள்வி நிச்சயம் பலரது மனதிலும் இருக்கும். இதற்கான பதில் இல்லை என்பதே ஆகும். அவசர கருத்தடை மாத்திரை, அதன் பெயரில் உள்ளது போன்றே ஒரு அவசர தீர்வை வழங்கும். இந்த முறையை வழக்கமாக பயன்படுத்த நினைக்கக்கூடாது. ஏனெனில் இந்த மாத்திரைகள் ஹார்மோன்களின் கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் இது மிகவும் ஆபத்தானதும் கூட.

அவசர கருத்தடை மாத்திரைகளை தவறாமல் உட்கொள்வதால் சந்திக்கும் பக்க விளைவுகள் என்ன?

அவசர கருத்தடை மாத்திரைகளை தவறாமல் உட்கொள்வதால் சந்திக்கும் பக்க விளைவுகள் என்ன?

அவசர கருத்தடை மாத்திரைகளானது அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு தான் மற்றும் இதை நீண்ட காலம் பயன்படுத்தக்கூடாது. அப்படி நீண்ட காலம் அவசர கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால் சந்திக்கும் கடுமையான பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

டீனேஜ் வயதினர் மாத்திரைகளை எடுக்கக்கூடாது

டீனேஜ் வயதினர் மாத்திரைகளை எடுக்கக்கூடாது

அவசர கருத்தடை மாத்திரைகள் 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்காக உருவாக்கப்பட்டது. டீனேஜ் வயதில் இந்த மாதிரியான மாத்திரைகளை உட்கொண்டால், அது இனப்பெருக்க மண்டலத்தை நிரந்தரமாக சேதமடையச் செய்து, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

கருத்தடை மாத்திரைகள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும்

கருத்தடை மாத்திரைகள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும்

கருத்தடை மாத்திரைகள் மாதவிடாய் சுழற்சியை படுமோசமாக பாதிக்கும். அதில் மாதவிடாய் சுழற்சியின் தேதிகளில் மாற்றத்தைக் காணலாம் மற்றும் ஆரோக்கியமற்ற உதிரபோக்கிற்கு வழிவகுக்கலாம். அதோடு அவசர கருத்தடை மாத்திரைகள் கடுமையான தலைவலி, குமட்டல், அடிவயிற்று வலி போன்ற பக்கவிளைவுகளையும் உண்டாக்கலாம்.

கருக்கலைப்பு மாத்திரையாக பயன்படுத்தலாமா?

கருக்கலைப்பு மாத்திரையாக பயன்படுத்தலாமா?

பெரும்பாலானோரின் மனதில் எழும் ஒரு பொதுவான கேள்வி தான், அவசர கருத்தடை மாத்திரையை கருக்கலைப்பு மாத்திரையாக பயன்படுத்தலாமா என்பது. இந்த கேள்விக்கு பதில் நிச்சயம் இல்லை என்பதாகும். அவசர கருத்தடை மாத்திரை கருத்தரிப்பதைத் தடுக்க பயன்படுமே தவிர, கருவை கலைக்க அல்ல.

 அவசர கருத்தடை மாத்திரையை பயன்படுத்துவதற்கான கால அளவு என்ன?

அவசர கருத்தடை மாத்திரையை பயன்படுத்துவதற்கான கால அளவு என்ன?

நிபுணர்களின் கூற்றுப்படி, அவசர கருத்தடை மாத்திரையை பயன்படுத்தினால், ஒருவர் திட்டமிடப்படாத கர்ப்பத்தை தடுக்க முடியும். ஆனால் அதற்கு மாத்திரையை உடலுறவு கொண்ட பின் 72 மணிநேரத்திற்குள் எடுக்க வேண்டும். IUD என்றால் அதை 120 மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can Emergency Contraception Prevent Unplanned Pregnancies? Everything You Need To Know

Emergency Contraception, can they really help in preventing unplanned pregnancies? How often can you take it? Here is everything you need to know.
Story first published: Saturday, May 29, 2021, 17:34 [IST]
Desktop Bottom Promotion