For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகை உணவுகளை சாப்பிடுவது பாதுகாப்பானதா? இல்லையா? தெரிஞ்சிக்கோங்க…!

தாய் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது, அது அவளுடைய குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்யும்.

|

கர்ப்ப காலத்தில், சரியான அளவு வைட்டமின்கள், தாதுக்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றை எடுத்துக்கொள்வது மிக அவசியம். பெண்கள் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவு தேர்வுகளை செய்ய வேண்டும். இது அவர்களுக்கும், அவர்களுடைய வயிற்றில் உள்ள குழந்தைக்கும் நல்ல ஆரோக்கியத்தை அளிக்கிறது. சில உணவுகளை கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்வது அவர்களுக்கு பாதுகாப்பனது அல்ல என்று கூறப்படுகிறது. ஏனெனில், உங்கள் குழந்தை உங்கள் வயிற்றினுள்ளே வளர்ந்து வருகிறது. நீங்கள் சாப்பிடும் உணவுகளின் பக்கவிளைவை உங்கள் குழந்தையும் அனுபவிக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

benefits-of-eating-lentils-during-pregnancy

தாய் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது, அது அவளுடைய குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்யும். கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டை, காய்கறிகள், கீரைகள் மற்றும் மீன்கள் போன்ற சில உணவுகள் பொதுவாக பரிந்துரைக்கப்படுகின்றன. இதில் பருப்பு வகைகள் இருக்கிறதா? என்பது குறித்து நீங்கள் யோசிக்கலாம். கர்ப்ப காலத்தில் பருப்பு உட்கொள்வது பாதுகாப்பானதா இல்லையா? என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வு கூறுவது

ஆய்வு கூறுவது

பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது பருப்பு வகைகளையும் உட்கொள்ள வேண்டும். ஒரு ஆய்வின்படி, கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு மற்றும் பயிறு வகைகள், பீன்ஸ், பட்டாணி, பழங்கள், முழு தானியங்கள் மற்றும் மாவுச்சத்து இல்லாத காய்கறிகளில் இயற்கையாகக் காணப்படும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டுடன் (ஜி.ஐ) உயர்தர கார்போஹைட்ரேட்டுகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

MOST READ:அடிக்கடி மயக்கம் வராம இருக்கணும்னா இந்த பொருட்கள உங்க பாக்கெட்லயே வைச்சுக்கோங்க...!

கருப்பை வளர்ச்சி

கருப்பை வளர்ச்சி

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரோக்கியமான குழந்தையின் வளர்ச்சிக்கு கார்போஹைட்ரேட்டுகள் வழங்கும் ஆற்றல் தேவைப்படுகிறது. ஏனெனில் கார்போஹைட்ரேட்டுகளிலிருந்து பெறப்பட்ட குளுக்கோஸ் கருப்பையக வளர்ச்சிக்கு முதன்மை எரிபொருளாகும்.

பருப்பு

பருப்பு

பருப்பு என்பது ஒரு வகை பருப்பு வகையாகும். இதில், புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. அவை மாங்கனீசு, பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி 6, மெக்னீசியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் செலினியம் ஆகியவற்றின் வளமான மூலமாகும். எனவே, கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகைகளை சாப்பிடலாம்.

இரத்த சோகையைத் தடுக்கிறது

இரத்த சோகையைத் தடுக்கிறது

நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது, குழந்தையின் வளர்ச்சியை ஆதரிக்க உடல் அதிக இரத்தத்தை உருவாக்குகிறது. நீங்கள் போதுமான இரும்பு சத்து உணவுகளை உட்கொள்ளவில்லை என்றால், உங்கள் உடலுக்கு தேவையான சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை உருவாக்க முடியாது. எனவே, கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகைகளை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

MOST READ:உங்க உடல் எடையை ஈஸியாக குறைக்க வீட்டில் இருக்கும் இந்த புளிப்பு உணவுகளே போதுமாம்...!

பிறப்பு குறைபாடுகளின் அபாயத்தை குறைக்கிறது

பிறப்பு குறைபாடுகளின் அபாயத்தை குறைக்கிறது

பருப்பு வகைகள் ஃபோலிக் அமிலத்தின் ஒரு நல்ல மூலமாகும். இது அனென்ஸ்பாலி மற்றும் ஸ்பைனா பிஃபிடா போன்ற பிறப்பு குறைபாடுகளின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது. ஃபோலிக் அமிலம் உடலில் புதிய செல்கள் உருவாக உதவுகிறது மற்றும் கர்ப்பிணிப் பெண்களில் ஹோமோசைஸ்டீன் அளவைப் பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது

பருப்பு வகைகளில் பொட்டாசியத்தின் அதிக உள்ளடக்கம் உள்ளது. இது சரியான இரத்த ஓட்டத்தை உறுதிசெய்து இரத்த அழுத்தத்தை உறுதிப்படுத்துகிறது. கர்ப்ப காலத்தில் நிறைய தாய்மார்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளது. இது தாய்க்கு இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக நோய் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை அதிகம் ஏற்படுத்தும்.

ஒற்றைத் தலைவலியை குறைக்கிறது

ஒற்றைத் தலைவலியை குறைக்கிறது

உடலில் ஏற்படும் தொடர்ச்சியான ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக கர்ப்ப காலத்தில் ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலி இருப்பது மிகவும் பொதுவானது. பருப்பு வகை உணவுகளை உட்கொள்வது ஒற்றைத் தலைவலி தாக்குதலை எதிர்த்து நிற்கும். ஏனெனில் பருப்பு வைட்டமின் பி-யின் நல்ல மூலமாகும்.

MOST READ:ஆப்பிளை இந்த மாதிரி உங்க உணவில் சேர்த்துக் கொண்டால் உங்க ஆயுள் அதிகரிக்குமாம்...!

மலச்சிக்கலைத் தடுக்கிறது

மலச்சிக்கலைத் தடுக்கிறது

மலச்சிக்கல் என்பது பெரும்பாலான கர்ப்பிணித் தாய்மார்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சனை. பருப்பு வகைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குடல் இயக்கத்தை எளிதாக்க உதவுகிறது. ஆதலால், இது மலச்சிக்கலைத் தடுக்கிறது. இது குடல் பாதை கோளாறுகளையும் எதிர்த்து நிற்கிறது. மேலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் ஆகியவற்றையும் இது வழங்குகிறது.

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது

கர்ப்ப காலத்தில் உடலுக்கு போதுமான இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாதபோது, கர்ப்பகால நீரிழிவு நோய் ஏற்படலாம். எனவே, பருப்பு வகைகளை சாப்பிடுவது நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது, ஏனெனில் இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டு (ஜி.ஐ) உணவாகும். அதாவது எளிய கார்போஹைட்ரேட்டுகளை உடலுக்கு இது வழங்குகிறது. இது எடை அதிகரிப்பு மற்றும் நீரிழிவு நோயைத் தடுக்கிறது.

பருப்பை உட்கொள்வதற்கான உதவிக்குறிப்புகள்

பருப்பை உட்கொள்வதற்கான உதவிக்குறிப்புகள்

பருப்பு வகைகளை சமைப்பதற்கு முன் குறைந்தது 1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பருப்பு வகைகளை சரியான அளவு எடுத்துக்கொள்ளாவிட்டால், அது ஊட்டச்சத்து இழப்புக்கு வழிவகுக்கும். பருப்பு வகைகளை மற்ற வைட்டமின் சி நிறைந்த காய்கறிகளுடன் சமைக்கவும், இது சிறந்த இரும்பு ச் சத்தை உடலுக்கு தர உதவுகிறது. ஆதலால், கர்ப்பிணிப் பெண்கள் சரியான அளவு பருப்பு வகை உணவுகளை உட்கொண்டு, தங்களுடைய ஆரோக்கியத்தையும், குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதுகாத்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

benefits of eating lentils during pregnancy

Here we are talking about the benefits of eating lentils during pregnancy
Story first published: Monday, February 17, 2020, 11:32 [IST]
Desktop Bottom Promotion