For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உணவு உண்ணுதல் சார்ந்த கோளாறு மற்றும் கருவுறாமை - இரண்டிற்கும் தொடர்பு உள்ளதா?

திருமணமாகி ஒரு ஆண்டு தொடர்ந்து முயற்சித்தும் கருவுறாத நிலை கருவுறாமை என்று அறியப்படுகிறது. ஒரு நபர் தன்னை சரியான அளவு உணவு உட்கொள்ள அனுமதிக்காத நிலை அனோரெக்சியா எனப்படுகிறது.

|

திருமணமாகி ஒரு ஆண்டு தொடர்ந்து முயற்சித்தும் கருவுறாத நிலை கருவுறாமை என்று அறியப்படுகிறது. ஒரு நபர் தன்னை சரியான அளவு உணவு உட்கொள்ள அனுமதிக்காத நிலை அனோரெக்சியா எனப்படுகிறது. எடை குறைப்பதற்காக கலோரி அளவை தீவிரமாக குறைப்பது அல்லது அசாதாரணமாக தங்கள் உடல் எடை குறைய முயற்சிப்பது போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

Anorexia And Infertility: Can An Eating Disorder Risk A Woman’s Ability To Conceive

புலிமியா என்பது மனக்கோளாறின் காரணமாக அதிக உணவு தேடல் இருப்பதாகும், தங்கள் உணவு தேடலுக்காக ஒழுங்கற்ற உணவு அட்டவணையை நிர்வகிக்கும் நிலை இதுவாகும். அனோரெக்சியா அல்லது புலிமியா போன்ற உணவு கோளாறுகள் இல்லாத நிலையிலும் சில பெண்கள் இதர உடல் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கிய சவால்களை எதிர்கொள்கின்றனர்.

MOST READ: கருத்தரிப்பதில் பிரச்சனைக் கொண்டவரா? சீக்கிரம் கர்ப்பமாக இந்த டீயை தினமும் குடிங்க..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவு உண்ணுதல் சார்ந்த கோளாறுகள் கருவுறுதலை எவ்வாறு பாதிக்கிறது?

உணவு உண்ணுதல் சார்ந்த கோளாறுகள் கருவுறுதலை எவ்வாறு பாதிக்கிறது?

இந்த வகையான உணவு தொடர்பான கோளாறுகள் வழக்கமான இனப்பெருக்கத்தில் இடையூறு உண்டாக்கலாம். எல்லா வகையான கருவுறாமை பாதிப்பிலும் ஊட்டச்சத்து குறைபாடு, அதீத உடற்பயிற்சி, நாட்பட்ட மனஅழுத்தம் போன்றவை தவிர்க்க முடியாத காரணிகளாக உள்ளன.

நமது உடலில் இருக்கும் இனப்பெருக்க ஹார்மோன்கள் மேலே கூறப்பட்ட காரணிகளால் நேரடியாக பாதிக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே உணவு உட்கொள்ளுதல் சார்ந்த கோளாறுகள் உள்ள பல பெண்களுக்கும் ஒழுங்கற்ற மாதவிடாய், சரியான நேரத்தில் மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது, அல்லது மாதவிடாய் முற்றிலும் இல்லாமை போன்ற பாதிப்புகள் உள்ளன.

உணவு உட்கொள்ளுதல் சார்ந்த கோளாறுகளுடன் இணைந்த சுகாதார சிக்கல்கள்:

உணவு உட்கொள்ளுதல் சார்ந்த கோளாறுகளுடன் இணைந்த சுகாதார சிக்கல்கள்:

மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் கருவுறாமை தவிர இதர சிக்கல்களும் உணவு உட்கொள்ளுதல் சார்ந்த கோளாறுகளுடன் இணைந்துள்ளன. குறைவான கருமுட்டை எண்ணிக்கை , ஒழுங்கற்ற இனப்பெருக்க ஹார்மோன் காரணமாக அண்டவிடுப்பு சுழற்சியில் மாறுபாடு , குறைவான பாலியல் விருப்பம் போன்றவை இவற்றுள் அடங்கும்.

கருவுறுதலில் உணவின் பங்கு என்ன?

கருவுறுதலில் உணவின் பங்கு என்ன?

கலோரி அளவு குறைவாக எடுத்துக் கொள்வது, முக்கிய நுண்ணூட்டச்சத்துகளை குறைவாக எடுத்துக் கொள்வது குறிப்பாக கொழுப்பு, புரதம் மற்றும் கார்போ சத்துகளை குறைவாக எடுத்துக் கொள்வது, அதீத உடற்பயிற்சி, தீவிர உணவுத் தேடல் போன்றவை சில பாதிப்புகளை உண்டாக்குகின்றன.

ஒரு பெண் தன்னுடைய உணவு அட்டவணையில் போதுமான கலோரிகள் தரக்கூடிய பல்வேறு வகையான உணவுகள் உட்கொள்ள வேண்டும் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் சமநிலை, புரத ஒருங்கிணைப்பு, கொழுப்பு மற்றும் கார்போ சத்துகளின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை கொண்ட ஒரு சமநிலையான உணவை தேர்ந்தெடுத்து உட்கொள்ளுதல் மிகவும் அவசியம். உணவு அட்டவணையில் கொழுப்பு ஒரு முக்கிய பங்காற்றுகிறது. காரணம் இவை இனப்பெருக்க ஹார்மோன்களை தொகுப்பாக்கம் செய்கிறது.

உணவு உட்கொள்ளுதல் சார்ந்த கோளாறுகளுடன் இணைந்த மற்ற காரணிகள் :

உணவு உட்கொள்ளுதல் சார்ந்த கோளாறுகளுடன் இணைந்த மற்ற காரணிகள் :

இந்த கோளாறு ஏற்பட மற்றொரு முக்கிய காரணியாக அமைவது உடற்பயிற்சி. அதீத உடற்பயிற்சி, இனப்பெருக்க ஆரோக்கியத்தில் இடையூறு உண்டாக்குகிறது மற்றும் கருவுறாமை அபாயத்தை அதிகரிக்கிறது. கடுமையான உடற்பயிற்சிகள் சீரான மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பை உண்டாக்குகின்றன. அதீத உடற்பயிற்சி மற்றும் குறைவான உணவு உட்கொள்ளல் ஆகியவை உயிர்வாழ அவசியமில்லாத உடல் உறுப்புகளை முடக்க முயற்சிக்கும். இதனால் இதர அத்தியாவசிய உறுப்புகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை உண்டாகும். இதில் இனப்பெருக்க உறுப்பும் அடங்கும்.

சரியான உடல் எடை

சரியான உடல் எடை

கருவுறுதலுக்கும், இயற்கையான முறையில் கருத்தரிக்கும் வாய்ப்பு மேம்படவும் சரியான பிஎம்ஐ முக்கியமாகும். எனவே உங்களின் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பராமரித்து வாருங்கள்.

நாள்பட்ட மன அழுத்தம்

நாள்பட்ட மன அழுத்தம்

உணர்ச்சி ரீதியான அல்லது சுற்றுப்புற சூழ்நிலை காரணமான நாள்பட்ட மனஅழுத்தம் போன்றவை வழக்கமான மாதவிடாய் மற்றும் அண்டவிடுப்பில் தலையீடு செய்யும் ஹார்மோன்களை வெளியிட காரணமாக அமைகிறது.

போதுமான ஊட்டச்சத்து இல்லாமை, அதீத உடற்பயிற்சி, போதுமான தூக்கமின்மை, உறவுகளில் சிக்கல், கடுமையான வேலை பளு போன்றவை சில காரணங்களாகும். மனஅழுத்தம் என்பது தவிர்க்க முடியாததாக இருந்தாலும் ஒவ்வொருவரும் அதனை எளிதாக நிர்வகிக்கும் முறையை கற்றுக் கொள்வது அவசியம். இதனால் சுய பராமரிப்பும் மேம்படுகிறது.

நல்ல செய்தி

நல்ல செய்தி

ஒரு சந்தோஷமான செய்தி என்னவென்றால் பெண்கள் அனோரெக்சியா பாதிப்பில் இருந்து வெளிவர முடியும். தங்கள் உடலை புத்துணர்ச்சி அடையச் செய்து, எடை மீட்டெடுத்து வழக்கமான மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்திக் கொள்ள முடியும். அனோரெக்சியா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாக ஏற்படத் தொடங்கினால் கருவுறுதல் வாய்ப்பும் அதிகரிக்கும்.

நீங்கள் மேலே கூறிய பாதிப்புகளுடன் இருந்தால் மனம் தளர வேண்டாம். உங்களால் முடித்த அளவிற்கு பாதிப்பில் இருந்து வெளிவர முயற்சியுங்கள். இதற்கான மருத்துவ நிபுணரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் அலல்து சரியான வழிகாட்டுதல் பெற்றுக் கொள்ளுங்கள். அனோரெக்சியா பாதிப்பை எதிர்த்து போராடி கருவுறுதலுக்கான வாய்ப்பை அதிகரிப்பது சாத்தியமே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Anorexia And Infertility: Can An Eating Disorder Risk A Woman’s Ability To Conceive

Anorexia And Infertility: Can an eating disorder risk a woman’s ability to conceive? Read on..
Desktop Bottom Promotion