For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க ஆண்குறியில வெள்ளை வெள்ளையா இருக்கா? அது எதனால வருதுனு தெரியுமா?

|

வெண்படை என்பது ஒரு நோயல்ல. இது ஒரு சாதாரண நிறமிக் குறைபாடு. சருமத்தில் உள்ள மெலனின் நிறமி குறைபாட்டால் அந்த இடத்தில் வெண்மை நிற படை உருவாகிறது. இதனால் சருமத்தில் ஆங்காங்கே வெண்படை காணப்பட்டு பார்ப்பதற்கே அசிங்கமாக காணப்படும். இது ஆண் பெண் பேதம் இல்லாமல் எல்லாரையும் தாக்க கூடியது. உடம்பில் எந்த பகுதியில் வேண்டும் என்றாலும் வரலாம். வாய் மற்றும் மூக்கு பகுதி அதிகளவில் பாதிக்கப்படுகிறது. நேரடியாக சூரிய ஒளி படும் இடங்களில் பரவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பென்னிலி விட்டிலிகோ

பென்னிலி விட்டிலிகோ

இது ஒரு ஆண்குறி வெண்படை நோயாகும். ஆண்களின் ஆணுறுப்பு பகுதியில் நிறமாற்றம் ஏற்படுகிறது. அந்த பகுதியில் மெலானின் நிறமி இழப்பால் வெண்படைகள் உருவாகின்றன. அதே மாதிரி அந்தரங்க பகுதியில் உள்ள முடிகள் கூட வெண்மை நிறமாக மாறி விடும். இது ஆண்குறியின் நுனி பகுதிகளில் தோன்றுகிறது. ஆண்குறியின் தலைப் பகுதியில் தோன்றாது. இது எந்த வயதில் வேண்டும் என்றாலும் தோன்றலாம். சில சந்தர்ப்பங்களில் 20 வயதிற்கு முன்னரே உருவாகிறது.வெண்படை பரவக்கூடிய நோய் அல்ல. அதே மாதிரி எந்த விதத்திலும் ஆண்குறியின் செயல்பாடுகளை பாதிக்காது. இதனால் எந்த பாதிப்பும் கிடையாது. வெறும் தோல் நிறமாற்றம் மட்டுமே ஏற்படும்.

MOST READ: ஜப்பானில் கெட்ட சகுனம் - சுனாமியை காட்டிக்கொடுக்கும் மீன் செத்து மிதக்குதாம்...

அறிகுறிகள்

அறிகுறிகள்

ஆண்குறியின் சருமத்தில் நிறமாற்றம் ஏற்படுதல்.

மூக்கு மற்றும் வாயைச் சுற்றி வெண்படை ஏற்படுதல்.

கண்களில் பார்வை மங்குதல், காரணம் கருவிழியில் நிறமி குறைபாடு ஏற்படுதல்.

இளநரை மற்றும் வெள்ளை முடிகள்.

அறிகுறிகளை பொருத்து இதை 3 வகைகளாக பிரிக்கிறார்கள்

செக்மண்டல் விட்டிலிகோ (உடம்பின் ஒரு பக்கத்தை மட்டும் பாதித்தல்

ஜென்ரலைஸ்டு விட்டிலிகோ (உடம்பின் ஒவ்வொரு பகுதியையும் பாதித்தல்)

லோக்கலைஸ்டு விட்டிலிகோ (உடம்பின் எதாவது ஒன்று அல்லது இரண்டு பகுதிகளை பாதித்தல்)

விறைப்புத்தன்மை குறைபாடு, சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை, வலி இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

காரணங்கள்

காரணங்கள்

சரும நிறமியான மெலனோசைட் உற்பத்தி நின்று விடுவதால் இது ஏற்படுகிறது.

மன அழுத்தம்

மரபணு

பீனால் மற்றும் கேட்கால்ஸ் போன்ற கெமிக்கல் சருமத்தில் வெண்படையை உண்டாக்குகிறது.

சூரிய ஒளி சரும பாதிப்பு

நோயெதிர்ப்பு மண்டலத்தின் அசாதாரண செயல்பாடு.

அதாவது இது குறித்த ஆராய்ச்சி கருத்து படி நமது நோயெதிர்ப்பு செல்கள் (வெள்ளை அணுக்கள்) தோல் நிறமியான மெலனோசைட் நிறமிகளை நோய்க் கிருமி என்று நினைத்து அழித்து விடுகிறது. இதனால் தான் சருமத்தில் போதுமான நிறமி இல்லாமல் வெண்குஷ்டம் உருவாகிறது.

கண்டறிதல்

கண்டறிதல்

உடல் ஆய்வு

ஆண்குறியில் ஏற்பட்டுள்ள பாதிப்பை மருத்துவர் பார்த்து சிகச்சை அளிப்பார். உடம்பு முழுவதும் மருத்துவர் பார்த்து அதற்கு தகுந்தாற் போல் ஆலோசனை வழங்குவார்.

அல்ட்ரா வைல்ட் கதிரியக்கம் மூலம் வெண்படையை கண்டறியலாம்

ஆண்குறி ப் பகுதியில் உள்ள சருமத்தை எடுத்து மைக்ரோஸ்கோப் மூலம் ஆராய்ந்து கண்டறிகின்றனர். பரம்பரை சார்ந்து வந்துள்ளதா என்பதையும் மருத்துவர் விசாரிப்பார்.

சிகிச்சைகள்

சிகிச்சைகள்

இந்த வெண்படையை முழுவதுமாக குணப்படுத்த முடியாது. ஆனால் சரும நிறத்தை பழைய படி ஓரளவுக்கு கொண்டு வரலாம்.

MOST READ: ஷில்பா ஷெட்டி சொல்லும் பெட்ரூம் ரகசியங்கள்... இத ட்ரை பண்ணினா சண்டையே வராதாம்

லைட் தெரபி

லைட் தெரபி

இதில் அல்ட்ரா வைலட் ஏ மற்றும் பி கதிர்கள் உபயோகிக்கப்படுகின்றன. இந்த தெரபி மூலம் மெலனின் நிறமி யை பழைய நிலைக்கு கொண்டு வரலாம்.

மருந்துகள்

மருந்துகள்

களிம்புகள் மற்றும் க்ரீம்கள் சரும நிறத்தை கொடுக்க பயன்படுகிறது. கார்டிகோஸ்டீராய்டுகள் க்ரீம்கள் அழற்சி எதிர்ப்பு தன்மையுடன் பயன்படுகிறது. பிமேக்ரோலிமஸ் அல்லது டாக்ரோலிமஸ் போன்ற களிம்புகளும் நல்லது. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே சாப்பிடுங்கள்.

அறுவை சிகிச்சைகள்

அறுவை சிகிச்சைகள்

லைட் தெரபி மற்றும் மருந்துகள் பலனளிக்கா விட்டால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளுங்கள். இதில் உடம்பின் மற்ற பகுதியில் உள்ள நல்ல சருமத்தை எடுத்து பாதிக்கப்பட்ட சருமத்தில் வையுங்கள். பாதிக்கப்பட்ட இடம் சிறியதாக இருந்தால் மட்டுமே இப்படி செய்ய முடியும்.

கஷ்டங்கள்

கஷ்டங்கள்

ஆண்குறி வெண்படை நோய் பயப்படும் அளவுக்கு எதுவும் கிடையாது. இது உங்கள் உடம்பையும் தாம்பத்ய வாழ்க்கையையும் எந்த விதத்திலும் பாதிக்காது.

இதனால் சரும புற்றுநோய், கண் பிரச்சினைகள் மற்றும் காதில் பிரச்சினைகள் ஏற்படலாம்.

MOST READ: செலவில்லாம இந்த எலுமிச்சை தாந்தீரிகத்த வீட்ல பண்ணுங்க... 2 வாரத்துல வீட்ல பணமழை கொட்டும்

அருவருப்பு

அருவருப்பு

சமூகத்தை பொருத்த வரை இந்த வெண்குஷ்டம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெறுத்து ஒதுக்கப்படுகிறார்கள். காரணம் தோலில் ஏற்படும் இந்த அருவருப்பான தோற்றமே. இதனால் மன அழுத்தம், வேதனையை அவர்கள் சந்திக்கின்றனர். ஆனால் வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு இது ஒரு நோயல்ல. இது ஒரு நிறமி குறைபாடு மட்டுமே. எனவே இந்த மாதிரியான மனிதர்களிடம் அவ்வாறு நடந்து கொள்ளலாமல் மனித நேயத்துடன் நடந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: parenting pregnancy
English summary

penile vitiligo: causes symptoms and treatment

penile vitiligo is a skin condition that causes spots or patches of skin to lose melanin. Melanin helps to give your skin and hair color, so when these areas lose it, they become very light in color
Story first published: Thursday, February 7, 2019, 14:50 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more