For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்ணுறுப்பில் மட்டும் அடிக்கடி ஏன் அரிப்பு ஏற்படுகிறது? எப்படி சரிசெய்யணும்?

பெண்களுக்குப் பிறப்புறுப்புகளில் ஏற்படுகின்ற அழற்சியைப் பற்றியும் அதற்கான வீட்டு வைத்திய முறைகளைப் பற்றியும் இந்த கட்டுரையில் உங்களுக்கு விளக்கமாகப் பார்க்க விருக்கிறோம்.

|

வெஜினிட்டீஸ் என்பது பெண்களின் அந்தரங்க பகுதியில் ஏற்படும் ஒருவித அழற்சி நோயாகும். இதில் நிறைய வகைகள் உள்ளன. பாக்டீரியல் வெஜினோஸிஸ், ஈஸ்ட் தொற்று, ட்ரைக்கோமோனியாஸிஸ், வெஜினல் ஆட்ரோஃபி. பெண்களின் யோனி பகுதியில் பாக்டீரியாக்களின் உற்பத்தி பெருகும் போது இந்த மாதிரியான அழற்சி ஏற்படுகிறது. மாதவிடாய் முடிந்த காலங்களில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாகும் போது இது ஏற்படுகிறது.

Home Remedies For Vaginitis

மேலும் வெஜினல் ஸ்பிரே, டவுச்சஸ், சோப்பு, நறுமணமிக்க டிடர்ஜெண்ட்கள், ஸ்பெர்மிசிடல் பொருட்கள் போன்றவை உள்ளன. இந்த பாக்டீரியா தொற்று டயாபெட்டீஸ், சில மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படுதல், தண்ணீரை கொண்டு ஸ்ப்ரே செய்தல், சுத்தமில்லாமல் இருத்தல், ஈரமான அல்லது இறுக்கமான உள்ளாடைகள், இன்ட்ராயூட்ரைன் கருவி போன்றவற்றை பிறப்புக் கட்டுப்பாடுக்கு பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறிகள்

அறிகுறிகள்

யோனி பகுதியில் அரிப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய், துர்நாற்றம், வலி, எரிச்சல் மற்றும் சிறுநீர் போகும் போது கடுகடுத்தல், உடலுறுவின் போது சிரமம், இரத்தக் கசிவு மற்றும் கொஞ்சம் கொஞ்சமாக இரத்தம் படுதல். இந்த அறிகுறிகளைக் கீழ்க்கண்ட வீட்டு முறைகளைக் கொண்டே சரி செய்து விடலாம்.

யோகார்ட்

யோகார்ட்

புரோபயோடிக் உணவுகள் பிறப்புறுப்பு தொற்றை போக்க சிறந்த ஒன்று. ஏனெனில் இந்த யோகார்ட்டில் உள்ள நல்ல பாக்டீரியாவான லாக்டோபேசில்ஸ் யோனி பகுதியில் உள்ள கெட்ட பாக்டீரியாவை அழிக்கிறது. வெஜினா பகுதியில் உள்ள pH அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

டோம்பன் கருவி மூலம் வெஜினா பகுதியில் யோகார்ட்டை வையுங்கள். 2 மணி நேரம் வையுங்கள். இதை தினமும் இரண்டு தடவை செய்து வாருங்கள்.

அதே மாதிரி யோகார்ட்டை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

MOST READ:தற்கொலை செய்ய போன பொண்ணு மூஞ்சி வெடிச்சு செத்த கொடூரத்த நீங்களே பாருங்க...

ஆப்பிள் சிடார் வினிகர்

ஆப்பிள் சிடார் வினிகர்

ஆப்பிள் சிடார் வினிகர் உங்கள் யோனி பகுதியில் உள்ள pHஅளவை சமநிலையில் வைக்க உதவுகிறது. இந்த சமநிலை pH அளவு நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்களின் உற்பத்தியை சமநிலையில் வைக்கிறது.

பயன்படுத்தும் முறை

2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளுங்கள். இதைக் கொண்டு உங்கள் அந்தரங்க பகுதியை சில நாட்கள் சுத்தம் செய்து வாருங்கள். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1-2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர், கொஞ்சம் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை தினமும் இரண்டு முறை குடித்து வாருங்கள்.

ஐஸ் ஒத்தடம்

ஐஸ் ஒத்தடம்

அந்தரங்க பகுதியில் இருக்கும் அழற்சியை போக்க ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். குளிர்ந்த வெப்பநிலை அந்த பகுதியில் உணர்வை இழக்கவும், அரிப்பை போக்கவும், வலியை போக்கவும் பயன்படுகிறது. சில ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டிக் கொள்ளுங்கள்.

இதை 1 நிமிடங்கள் அந்தரங்க பகுதியில் வைத்து ஒத்தடம் கொடுங்கள்.

1 நிமிடங்கள் இடைவெளி விட்டு மீண்டும் அப்ளே செய்யுங்கள்.

இப்படியே சில நிமிடங்கள் செய்து வாருங்கள்.

இதை உங்கள் தேவைக்கேற்ப செய்து வாருங்கள்.

குளிர்ந்த நீரைக் கொண்டு கூட அந்தரங்க பகுதியை சுத்தம் செய்து வரலாம்.

MOST READ:அதிக சம்பளம் வாங்கும் குழந்தை நட்சத்திரங்கள் யார் யார்னு தெரியுமா? இவங்கதான் அது...

பூண்டு

பூண்டு

பூண்டில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி செப்டிக் தன்மை அந்தரங்க பகுதியில் உள்ள அழற்சியை போக்க உதவுகிறது. பாக்டீரியல் தொற்று, ஈஸ்ட் தொற்று இரண்டிற்கும் இது சிறந்தது. அதே மாதிரி பூண்டு உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றை எதிர்த்து போரிடுகிறது.

4-5 சொட்டுகள் பூண்டு ஆயில் 1/2 டீ ஸ்பூன் விட்டமின் ஈ ஆயில் தேங்காய் எண்ணெய் இவற்றை கலந்து அந்தரங்க பகுதியில் தடவலாம். இதை சில நாட்களுக்கு இரண்டு முறை என பயன்படுத்தி வர வேண்டும்.

சில பூண்டு துண்டுகளையும் தினமு‌ம் சமையலில் சேர்த்து சாப்பிடுங்கள்.

300 மில்லி கிராம் பூண்டு மாத்திரைகளைக் கூட நீங்கள் பயன்படுத்தி வரலாம். எடுப்பதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது.

MOST READ:உங்க நட்சத்திரத்துக்கு எந்த கடவுளை வணங்கினால் எல்லா செல்வங்களும் சேரும்?

போரிக் அமிலம்

போரிக் அமிலம்

அந்தரங்க பகுதியில் ஏற்படும் பாதிப்பை போக்க போரிக் அமிலம் பயன்படுகிறது. இதன் ஆன்டி செப்டிக், பூஞ்சை எதிர்ப்பு தன்மை அரிப்பு, வலி மற்றும் எரிச்சலை சரி செய்கிறது. இது அந்தரங்க பகுதியை சுத்தம் செய்து pH அளவை மீட்கிறது.

2011 ல் வெளியிடப்பட்ட பெண்களின் நலம் என்ற பத்திரிகையில் போரிக் அமிலம் பாதுகாப்பானது என்று கூறப்பட்டுள்ளது. இதை அந்தரங்க பகுதியில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்கு கூட பயன்படுத்தி கொள்ளலாம்.

பயன்படுத்தும் முறை

போரிக் அமில பவுடர் மாத்திரையை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளுங்கள். படுப்பதற்கு முன் உங்கள் அந்தரங்க பகுதியில் இந்த மாத்திரையை வைக்கவும்.

காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவி விடுங்கள்.

இதை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை என பயன்படுத்தி வரலாம்.

குறிப்பு: கருவுற்ற பெண்கள் இந்த முறையை செய்யக் கூடாது.

MOST READ:சிகரெட் பிடிக்கிறத திடீர்னு நிறுத்திட்டா என்ன ஆகும்னு தெரியுமா? இத பார்த்து தெரிஞ்சிகங்க...

கெமோமில்

கெமோமில்

கெமோமில் பொருளும் அந்தரங்க பகுதியில் உள்ள தொற்றை போக்குகிறது. இதன் இயற்கை மருத்தவ குணம் வீக்கம், வலி மற்றும் எரிச்சல், அரிப்பு போன்றவற்றை போக்குகிறது.

ஒரு சூடான நீரில் கெமோமில் டீ பேக்கை சில நிமிடங்கள் போட்டு வையுங்கள்.

இப்பொழுது டீ பேக்கை எடுத்து விட்டு பிரிட்ஜில் 10 நிமிடங்கள் வைக்கவும்.

இந்த குளிர்ந்த டீ பேக்கை உங்கள் வெஜினா பகுதியில் வையுங்கள்.

லைட்டா அந்த டீ பேக்கை வெஜினா பகுதியில் பிழிந்து விட்டால் அழற்சியை போக்கி விடும்.

இதை தினமும் 1-2 தடவை செய்து வாருங்கள் அழற்சியை போக்கிடலாம்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு

ஹைட்ரஜன் பெராக்ஸைடு

இந்த இயற்கை பொருள் கெட்ட பாக்டீரியாக்களை போக்குகிறது.

3% ஹைட்ரஜன் பெராக்ஸைடை பயன்படுத்தி வந்தால் போதும் யோனி பகுதியில் உள்ள அழற்சியை போக்கிடலாம்.

3% ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் சம அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதைக் கொண்டு உங்கள் யோனி பகுதியை அலசுங்கள். 10 நிமிடங்கள் இப்படி செய்து வாருங்கள். இதை தினமும் சில நாட்களுக்கு செய்து வாருங்கள். நல்ல பலனை பெறலாம்.

MOST READ:உங்க கால்ல பலமே இல்லாம இருக்கீங்களா? இத செய்ங்க... ரொம்ப ஸ்ட்ராங்கா ஆகிடுவீங்க...

டீ ட்ரி ஆயில்

டீ ட்ரி ஆயில்

டீ ட்ரி ஆயில் அந்தரங்க பகுதியில் ஏற்படும் அழற்சியை போக்க பயன்படுகிறது. இதன் இயற்கை ஆன்டி பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு தன்மை தொற்றை போக்குகிறது. இது அந்தரங்க பகுதியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்குகிறது.

பயன்படுத்தும் முறை

4-5 டீ ட்ரி ஆயிலை ஒரு பெளலில் எடுத்து அதை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளுங்கள். நன்றாக கலந்து யோனி பகுதியை அலசுங்கள்

இதை சில நாட்களுக்கு ஒரு தடவை என செய்து வாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

குறிப்பு: கருவுற்ற பெண்கள் இந்த ரெசிபியை பயன்படுத்தாதீர்கள்

 நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்

நோயெதிர்ப்பு சக்தி உங்கள் தொற்றை எதிர்த்து போரிடுகிறது.

ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் விட்டமின் ஏ, சி, ஜிங்க், செலினியம், இரும்புச் சத்து போன்றவை உள்ளன. இது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை போக்க பயன்படுகிறது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளான ஆரஞ்சு, க்ரீன் டீ, இஞ்சி, பூண்டு, மிளகாய், மஸ்ரூம், ஆப்பிள், காரட், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பீன்ஸ், ப்ரக்கோலி, ஸ்ட்ராபெர்ரி போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

தினமு‌ம் 8-10 கிளாஸ் தண்ணீர் எடுத்து வாருங்கள்.

15 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருந்து உடம்பிற்கு தேவையான விட்டமின் டி யை எடுத்துக் கொள்ளுங்கள். தினமு‌ம் ஓய்வுடன் சந்தோஷமாக இருங்கள்.

30 நிமிடங்கள் வாரத்திற்கு 5 தடவை உடற்பயிற்சி செய்யுங்கள். நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்.

MOST READ:குளிக்கறப்ப காதுல நிறைய தண்ணி புகுந்திடுச்சா? அத எப்படி ஈஸியா வெளியேற்றலாம்...

யோனி பகுதி பராமரிப்பு

யோனி பகுதி பராமரிப்பு

உள்ளாடைகளை தினமு‌ம் சூடான நீரில் துவையுங்கள்

சூரிய ஒளியால் உள்ளாடைகளை காய வையுங்கள்

நல்ல காற்றோட்டமான ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள்

காட்டன் டைப் உள்ளாடைகளை அணிவது சிறந்தது

அதிக தடவை யோனி பகுதியை வாஸ் செய்வதை தவிருங்கள்

பாத் டப்பில் சோப்புக் குளியல் வேண்டாம்.

டாய்லெட் போன பிறகு முன்னிருந்து பின் கழுவுங்கள்.

ஈரமான துணியில் ரெம்ப நேரம் நிற்காதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies For Vaginitis

Vaginitis is a general term for inflammation of the vagina and vulva. The most common types of vaginitis are bacterial vaginosis, yeast infections, trichomoniasis and vaginal atrophy.
Desktop Bottom Promotion