For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வேர் ஒன்னு போதும்... 70 வயசானாலும் விறைப்பு தன்மையில பிரச்சினையே வராது...

By Mahibala
|

நம்முடைய இதயம், சிறுநீரகம், நுரையீரல், குடல் என அத்தனை உள்ளுறுப்புகளும் அதேபோல் ஒட்டுமொத்த உடலும் ஆண், பெண், குழந்தைகள் என எல்லோருமே ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தைப் பேணுவோம்.

ginseng

அதைத் தாண்டி ஆண்களின் ஆரோக்கியம் என்று நாம் குறிப்பாக ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொண்டால் அது பாலுறவு குறித்த ஆரோக்கியம் தான். ஆம். ஏன் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றால் அதை நாம் தவறாகவோ அருவருப்பாகவோ பார்க்கத் தேவையில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இனவிருத்தி

இனவிருத்தி

பாலுறவு குறித்த பாலியல் ஆரோக்கியம் பெண்களுக்கும் மிக முக்கியமானது தான். ஆண்கள் ஏன் அதிகமாக இந்த விஷயத்தில் கவனம் கொள்கிறார்கள் என்றால் அது வெறுமனே இன்பம் துய்க்கும் விஷயமாக மட்டும் நான் பார்ப்பது தான். ஆனால் ஒன்றை நீங்கள் நன்றாகக் கவனிக்க வேண்டும். ஆண்களின் விந்துக்கள் உயிரணுக்கள் கொண்டவை. அவை அடுத்தடுத்த தலைமுறையை அதாவது இன விருத்தியை உருவாக்கக்கூடியது. அதனால் தான் பாலியல் ஆரோக்கியம் ஆண்களுக்கு மற்றவற்றைக் காட்டிலும் முக்கியத்துவம் பெறுகிறது.

MOST READ: இப்படி உருளைக்கிழங்குலயே ரோஜா செடி வளர்க்கலாம் தெரியுமா? ரொம்ப ஈஸி... ட்ரை பண்ணிப்பாருங்க

பிரச்சினையை புரிந்து கொள்ளுதல்

பிரச்சினையை புரிந்து கொள்ளுதல்

பொதுவாக உடலுறவில் ஆண்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்றால் அதற்கு எளிமையாக அவருக்கு மலட்டுத் தன்மை பிரச்சினை இருக்கிறது என்று முடிவு செய்துவிடுகிறார்கள். ஆனால் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய உடலில் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் சிறந்தது என்று சில உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து உண்கிறோம். அது இயற்கையாகவே நம்மை நோயிலிருந்து காத்து ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. அதேபோல தான் பாலியல் ஆரோக்கிய விஷயத்துக்கென சில இயற்கை உணவுமுறைகள் இருக்கின்ற. அவற்றையெல்லாம் பின்பற்றித் தான் நம்முடைய முன்னோர்கள் டஷன் கணக்கில் பெற்றுப் போட்டார்கள். அவர்களும் உறுதியாக இருந்தார். வயோதிக வயதிற்குப் பிறகும் கூட செக்ஸ் வாழ்க்கையில் ஆரோக்கியமாக அவர்களால் செயல்பட முடிந்தது.

விறைப்புப் பிரச்சினை

விறைப்புப் பிரச்சினை

இந்த காலத்து ஆண்கள் செக்ஸ் உறவைப் பொருத்தவரையில் சந்திக்கும் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், விறைப்புத் தன்மை பிரச்சினை தான். மிக விரைவாக உறுப்பு சுருங்குதல், விந்து நீர்த்துப் போதல், வேகமாக விந்து வெளியேறுவது போன்ற பல பிரச்சினைகள் இருக்கின்றன. இதற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய பிரச்சினை தான் விறைப்புப் பிரச்சினை. இதை இயற்கையாக நமக்குக் கிடைக்கும் சில உணவுப் பொருள்களின் மூலம் சரி செய்து ஆணுறுப்பின், விந்து உயிரணுக்களின் வீரியத்தை அதிகப்படுத்திக் கொள்ள முடியும். அவை என்னென்ன என்று தெரியுமா?

வீரியம் தரும் உணவுகள்

வீரியம் தரும் உணவுகள்

பொதுவாகவே பாதாம், நட்ஸ், பழங்கள், வெங்காயம், தர்பூசணி பழம் மற்றும் விதைகள், பூசணி விதைகள், மீன், மாதுளை, பால், தக்காளி, வால்நட், முருங்கைக்காய், பெர்ரி பழங்கள், சிவப்பு இறைச்சி ஆகிய இயற்கை உணவுகள் வயாக்ரா போல செயல்பட்டு விந்தணுக்களை வீரியமானதாக மாற்றக்கூடியவை என்று நமக்குத் தெரியும். இவற்றை நம்முடைய அன்றாட உணவில் சேர்த்து வந்தாலே இந்த விறைப்புத் தன்மை பிரச்சினை சரியாகிவிடும். இவை இயற்கையான உணவுகள் என்பதால் பக்க விளைவுகள் அற்றவையாக இருக்கும்.

ஜின்செங்

ஜின்செங்

ஜின்செங் என்பது ஒரு மூலிகை. இந்த மூலிகையின் தோற்றம் எங்கு தெரியுமா? இது சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் கிடைத்த ஒரு மூலினை. இதை 9 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு அரேபியர்கள் ஐரோப்பிய நாடுகுளிலும் இதை பரப்புகிறார்கள். இந்த வேரை தான் அவர்கள் மலட்டுத் தன்மை நீங்கி, விந்துவை வீரியமாக்கவும் விறைப்புப் பிரச்சினை சரியாகவும் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். இது வெளிநாட்டு மூலிகை. நாம் ஏன் இதைப்பற்றி பேச வேண்டும் என்று யோசிக்க வேண்டாம். நம்ம ஊர்லயும் கிடைக்குது.

MOST READ: இந்த பேப்பரை காலில் இப்படி சுற்றி வைத்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா

அஸ்வகந்தா

அஸ்வகந்தா

ஜின்செங் என்பது இந்திய அஸ்வகந்தா என்று அழைக்கப்படுகிறது. இப்ப இந்த பேரை எங்கயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்குமே. அதேதான் நம்ம ஊர்ல எல்லா சூப்பர் மார்க்கெட்டுகளிலும் நாட்டு மருந்து கடைகளிலும் இந்த அஸ்வகந்தா வேராகவும் கிடைக்கிறது. பொடியாகவும் கிடைக்கிறது. பொடியில் கலப்படம் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் வேரை வாங்கி நீங்களே பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மூலிகையை தினமும் இரவு படுக்கச் செல்வதற்கு முன் சாப்பிட்டு வந்தால் தடி ஊன்றி நடக்கும் வயது வரைக்கும் விறைப்புப் பிரச்சினையே வராதாம்.

MOST READ: எப்படி இருந்த ஊர்லாம் இப்ப எப்படி மாறியிருக்குனு நீங்களே பாருங்க... புகைப்படங்கள் உள்ளே...

எப்படி சாப்பிட வேண்டும்?

எப்படி சாப்பிட வேண்டும்?

இந்த இஸ்வகந்தாவை தினமும் தூங்கச் செல்வதற்கு முன் நன்கு காய்ச்சிய பசும் பாலில் கலந்து குடிக்கலாம்.

பொதுவாக பால் நிறைய குடிக்காத பழக்கம் உள்ளவர்கள் வெந்நீரில் போட்டு சிறிது எலுமிச்சையும் தேனும் கலந்து டீயாகவும் குடிக்கலாம். மாலை நேரங்களில் சூப் குடிக்கும் போது அதில் கூட இந்த பொடியை தூவி சாப்பிட முடியும்.

இந்த வேரிலிருந்து தயாரிக்கப்பட்ட மாத்திரைகள் கூட கிடைக்கின்றன.

இதன் தைலங்களும் கிடைக்கின்றன. இதை தினமும் இரவில் ஆணுறுப்பில் தடவி மசாஜ் செய்துவிட்டு, பின் காலையில் குளிக்கும்போது வெதுவெதுப்பான நீர் கொண்டு அந்த பகுதியைக் கழுவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

ginseng herb for strong erection

Erectile dysfunction is a condition that affects a man's ability to achieve or maintain an erection suitable for sex. The condition can affect men at any age, but according to the American Academy of Family Physicians, erectile dysfunction (ED) is most common when a man is 75 years or older.
Story first published: Wednesday, March 13, 2019, 18:20 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more