Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கருப்பை நீர்கட்டியால் ஏற்படும் வலியை குணப்படுத்த பெண்கள் இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்..!
பெண்களுக்கு கருப்பையில் நீர்கட்டிகள் வருவது என்பது கருவுறும் காலத்தில் மிகவும் சாதாரணமான ஒன்றாகும்.
பெண்களுக்கு கருப்பையில் நீர்கட்டிகள் வருவது என்பது கருவுறும் காலத்தில் மிகவும் சாதாரணமான ஒன்றாகும். நீர்கட்டிகள் என்பது கருப்பையில் ஏற்படும் திரவம் நிரப்பப்பட்ட கட்டிகள் ஆகும். இவை பொதுவாக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாவிட்டாலும் பெண்களுக்கு வலியை ஏற்படுத்தும்.

இந்த கருப்பை நீர்க்கட்டிகள் தானாகவே மறைந்து விடும். ஆனால் ஒருவேளை நீர்க்கட்டிகள் பெரியதாக இருந்தால் அவை பெண்களுக்கு அடிவயிற்றுவலி, வயிறு வீக்கம், பின் முதுகு வலி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதனை ஆரம்பக்கட்டத்திலேயே கவனிக்கா விட்டால் சிலசமயம் இந்த நீர்க்கட்டிகள் PCOS போன்ற பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இதற்கு காரணம் பாலியல் ஹார்மோன்கள் சமநிலையில் இல்லாமல் இருப்பதுதான் காரணம்.

அறிகுறிகள்
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது. இதுபோன்ற சூழ்நிலைகளில் உணவில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டியது அவசியம். இதுபோன்ற சூழ்நிலைகளில் பின்வரும் உணவுகளை உணவில் சேர்த்து கொள்வது அவசியம். இந்த உணவுகளுடன் சில உடற்பயிற்சிகளை செய்ய வேண்டியதும் அவசியம்.

அதிக நார்ச்சத்துள்ள உணவுகள்
அதிக நார்ச்சத்துள்ள உணவுகளான பேரிச்சை, ஆரஞ்சு, பருப்பு, பட்டாணி போன்ற பொருட்களை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். ஏனெனில் இவற்றில் இருக்கும் பைட்டோகெமிக்கல்கள் உங்கள் உடலில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. மேலும் இவை கர்ப்பப்பை புற்றுநோய் வராமலும் தடுக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் பொதுவான ஹார்மோன் சமநிலையின்மையை இந்த உணவுகள் எளிதில் செரிசெய்யக்கூடும்.

குறைவான புரோட்டின் இருக்கும் உணவுகள்
இந்த சூழ்நிலையில் உங்கள் உடல் எடையை சீராக பராமரிக்க வேண்டியது அவசியம். எனவே அளவான புரோட்டின் இருக்கும் உணவுகளான மீன், சிக்கன் போன்ற உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள். இவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்கும். அதிக கொழுப்பு இருக்கும் உணவுகள் எடை அதிகரிப்பு, வீக்கம் போன்ற பல அசௌகரியங்களுக்கு வழிவகுக்கும்.

ஒமேகா 3 அமில உணவுகள்
ஒமேகா 3 அமிலம் அதிகமுள்ள உணவுகள் கருப்பை நீர்கட்டிகளில் ஏற்படும் ஹார்மோன் கோளாறுகளை கட்டுப்படுத்த உதவுகிறது. மீன்கள், தானியங்கள் போன்றவற்றில் ஒமேகா 3 அமிலம் அதிகமுள்ளது. இந்த நிலையில் அதிகரிக்கும் உடலின் ஆண்ட்ரோஜென் அளவுகளை குறைப்பதில் ஆளி விதைகள் சக்தி வாய்ந்தவை என நிரூபிக்கப்பட்டுள்ளது.

செவ்வந்தி பூ டீ
இந்த இனிமையான தேநீர் நீர்க்கட்டி காரணமாக ஏற்படும் தசைப்பிடிப்புகளில் இருந்து நிம்மதி அளிப்பதில் முக்கியப்பங்கை கொண்டுள்ளது. இதில் இருக்கும் வீக்கத்திற்கு எதிராக போராடும் பண்புகள் வலியை குறைக்கும். ஒரு கப் சூடான செவ்வந்தி பூ டீ குடிப்பது இதன் அறிகுறிகளை குறைக்கும்.

இன்டோல்- 3 கார்பினால் உணவுகள்
இன்டோல்- 3 கார்பினால் அதிகமுள்ள உணவுகளான முளைக்கட்டிய தானியங்கள், காலிபிளவர், முட்டைகோஸ், ப்ரோக்கோலி போன்ற உணவுகள் உடலில் அதிகமிருக்கும் ஹார்மோன்களை வெளியேற்றுகிறது. இந்த உணவுகளின் மூலம் ஈஸ்ட்ரோஜன் உடலில் இருந்து விடுவிக்கப்படுகிறது.

மக்னீசியம் அதிகமுள்ள உணவுகள்
கருப்பை நீர்கட்டிகளால் ஏற்படும் தசைப்பிடிப்புகளை குறைக்க மக்னீசியம் அதிகமுள்ள உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்து கொள்ளவேண்டும். வாழைப்பழம், முந்திரி, பாதாம், அவோகேடா, பச்சை காய்கறிகள் போன்றவற்றில் இந்த சத்துக்கள் அதிகம் உள்ளது.



Click it and Unblock the Notifications