Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
கர்ப்ப பரிசோதனையில நெகட்டிவ் ரிசல்ட் வந்திடுச்சா?... உடனே என்ன பண்ணணும் தெரியுமா?
கர்ப்ப பரிசோதனை செய்தபின் அதில் நெகட்டிவ்வாக முடிவு வந்தால் அந்த மனநிலையில் இருந்து மீண்டு வருவது எப்படி என்று பார்க்கலாம்.
நிறைய தம்பதியர்களுக்கு தற்போது இருக்கும் பெரிய பிரச்சினை கர்ப்பம் தரிப்பதில் தாமதம் ஏற்படுதல். கர்ப்பம் தரிக்க நிறைய தடவை அவர்கள் முயன்றும் பல நேரங்களில் அது நடப்பதில்லை.

ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பரிசோதனை செய்தும் ரிசல்ட் என்னவோ நெகடிவ் ஆகவே அமைகிறது. இந்த நெகடிவ் ரிசல்ட் தம்பதியரின் மனநிலையையும் சேர்த்து பாதிக்கத்தான் செய்கிறது. இந்த சோகத்தை கையாள்வது தம்பதியர்களுக்கு கஷ்டமாகவும் இருக்கிறது.

கர்ப்ப சோதனை
அதிலும் உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லாரும் இதை பற்றி தொடர்ந்து கேட்கும் பொழுது அவர்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். இந்த மாதிரி நெகடிவ் ரிசல்ட் வரும்போது தம்பதியர்கள் எப்படி நம்பிக்கையாக செயல்பட வேண்டும், தங்கள் மனநிலையை எப்படி மீட்டெடுக்க வேண்டும் என்பது குறித்து சில வழிகள் இங்கே சொல்லப்பட்டுள்ளன. அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

நெகடிவ் ரிசல்டை சமாளிப்பது எப்படி?
ஒரு குழந்தையை கர்ப்பம் தரிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. உங்களுக்கு இந்த மாதம் கர்ப்ப பரிசோதனை நெகடிவ் ஆக அமைந்தால் நிதானமாக அடுத்த மாதம் முயற்சிக்க வேண்டும். அதற்கு சில வழிகளை மேற்கொள்ள நீங்கள் ஆயத்தமாக வேண்டும்.

கலந்துரையாடல்
கடந்த ரிசல்டை நினைத்து எப்பொழுதும் சோகத்திலயே மூழ்கி இருக்காதீர்கள். அப்படி இருப்பதால் எதுவும் மாறப் போவதில்லை. நேர்மையாக சிந்திக்க தொடங்குங்கள். உங்களுடைய பாசிட்டிவ் எண்ணமே கருவுற்ற மகிழ்ச்சியை ஒரு நாள் கொடுக்கும். மீண்டும் மீண்டும் விடாமல் முயற்சி செய்து வாருங்கள். மனதுக்கு ரிலாக்ஸாக பேசும் நண்பர்கள், உறவினர்களுடன் பேசி வரலாம்.

துணையின் மனநிலை
நெகடிவ் ரிசல்ட் ஆல் உங்களுடைய துணையும் மன அழுத்தத்தில் இருக்கலாம். இந்த துக்கம் அவரின் கோபம், காயம் ஆகியவையாக வெளி வரலாம். எனவே அவருக்கு ஆறுதலாக இருந்து நேர்மறை எண்ணங்களை விதையுங்கள்.

திட்டமிட்டதை செய்யுங்கள்
சீக்கிரம் கர்ப்ப தரிக்க வேண்டும் என்பது மட்டுமே வாழ்க்கை இல்லை. இதன் நெகடிவ் ரிசல்ட் உங்களை பாதித்து இருந்தாலும் உங்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ மறந்து விடாதீர்கள். குழந்தை பேறு என்ற நல்ல செய்தி நீங்கள் சந்தோஷமாக இருந்தால் தான் கிடைக்கும். எனவே உங்கள் கவலைகளை தூக்கி போட்டு விட்டு உங்களுக்கு பிடித்த புத்தகங்களை படித்தல், ஓவியம் வரைதல், பிடித்த இடங்களுக்கு சென்று வருதல் என்று உங்கள் மனநிலையை மாற்றி வரலாம்.

கடந்து செல்லுங்கள்
கர்ப்பம் தரிப்பு ஏற்படவில்லை என்ற கவலையை விட்டு கடந்து செல்லுங்கள். தனியாக அமர்ந்து உங்கள் மனநிலையை மாற்ற முயலுங்கள். ஒரு சில நாட்களில் கவலையை மறந்து சந்தோஷமாக பழைய நிலைக்கு செல்வது உங்களுக்கு நல்லது.

நம்பிக்கை
நம்பிக்கையான நபர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கர்ப்பம் தரிக்க முயற்சிப்பதை எல்லாரிடமும் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. ஒவ்வொரு மாதமும் என்னாச்சு என்னாச்சு என்று நச்சரிக்கும் மனிதர்களை விட்டு விலகி இருங்கள். அதற்கு பதிலாக உங்களுக்கு சீக்கிரமே நல்லது நடக்கும், கவலைப்படாதீங்க, நல்லா சாப்பிடுங்க என்று நம்பிக்கை ஊட்டும் நபர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.

மருத்துவரை அணுகலாம்
ஒன்று அல்லது இரண்டு முறை நெகடிவ் ரிசல்ட் வந்தால் நீங்கள் மருத்துவரை நாடி செல்லலாம். அவர்கள் சீக்கிரம் கர்ப்பம் தரிப்பதற்கான வழிகளையும், சிகிச்சைகளையும் உங்களுக்கு கூறுவார்கள். நீங்களும் உங்கள் துணையும் சரியான விதத்தில் சிகச்சை எடுத்து கொண்டால் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிடைக்கும்.

கொஞ்சம் இடைவெளி விடலாம்
சில சமயங்களில் கர்ப்ப தரிப்பதை சிறுது காலம் தள்ளிப்போட்டு முயற்சிக்கலாம். இந்த ஓய்வு உங்களுக்கு நம்பிக்கையும், உற்சாகத்தையும் திரும்ப கொடுக்கும்.

ஆன்லைன் தொடர்புகள்
உங்களை மாதிரி ஏகப்பட்ட பெண்கள், ஆண்கள் இந்த பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். அவர்களுடன் ஆன்லைன் உரையாடலை மேற்கொள்ளலாம். அவர்களின் நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள், வழிகள், அவர்கள் கூறும் சிகச்சைகள், டிப்ஸ்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும். முயற்சி செய்யும் போது பலன் அளிக்கக் கூடியதாக அமையலாம். எனவே வெறும் கவலை உங்களுக்கு தீர்வாகாது. நேர்மறை எண்ணத்தோடு முயன்று வாருங்கள். கண்டிப்பாக உங்கள் வீட்டிலும் குழந்தை சத்தம் கேட்கும்.



Click it and Unblock the Notifications











