For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருக்கலைப்பு நிகழ்ந்த பின், உறவு கொள்ள முயன்றால் கருத்தரிப்பு விரைவாக நடக்குமாம்!

கருக்கலைப்பு என்பது பிரசவ சமயத்தில் நிகழும் ஒரு விரும்பத்தகாத மாற்றம்; கருக்கலைப்பு நிகழ்ந்த பின், உறவு கொள்ள முயன்றால் கருத்தரிப்பு விரைவாக நடக்குமா, இல்லையா என்பதை பற்றி இங்கு படிக்கலாம்.

|

தம்பதியர் ஒவ்வொருவரின் வாழ்க்கை இலட்சியம் என்பது தங்களுக்கு என ஒரு குழந்தையை பெற்று வளர்க்க வேண்டும் என்பது தான். திருமணம் முடிந்து கணவனும் மனைவியும் உறவு கொண்டு குழந்தையை கருத்தரிக்க முயற்சி மேற்கொள்வர். தங்களுக்குள் இருக்கும் ஆழமான அன்பை மனது அளவிலும், உடல் அளவிலும் வெளிப்படுத்தும் பொழுது, உருவாகும் ஒரு அருமையான விஷயம் தான் குழந்தைகள்.

When One Should Try For Baby After A Miscarriage?

இந்த பதிப்பில் கருக்கலைப்பு ஏற்பட்ட பின் எப்பொழுது உடலுறவு கொள்ளலாம் மற்றும் கருக்கலைப்புக்கு பின் உறவு கொண்டால் விரைவாக குழந்தை பிறக்குமா என்பது பற்றி படித்து அறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருக்கலைப்பு என்றால் என்ன?

கருக்கலைப்பு என்றால் என்ன?

கருக்கலைப்பு என்பது பெண்ணின் கர்ப்பத்தில் உருவான கரு சரியான வளர்ச்சி இன்மை ஏற்படுவதன் காரணமாக, கருத்தரிப்பு கொண்ட பெண்ணின் உடலில் ஏற்படும் ஏதேனும் ஒரு ஆரோக்கிய குறைபாடு காரணமாக கலைந்து, அழிந்து போகலாம். இது தம்பதியர்களுக்கு ஏற்படுவது சாதாரணமானது; இயற்கையானது என்று கூறலாம்.

கருக்கலைப்பு ஏற்படுதல்!

கருக்கலைப்பு ஏற்படுதல்!

பெண்களுக்கு கருக்கலைப்பு என்பது இயற்கையாக ஏற்படும் பொழுது உருவான கரு, மாதவிடாய் நாட்களில் வெளிப்படுவது போல, இரத்தமாக வெளிப்பட்டு கலையும். உருவான கரு முற்றிலுமாக வெளியேறும் வரை இரத்தப்போக்கு காணப்படும். பெண்கள் இந்த இரத்தப்போக்கு ஏற்படும் சமயம் அல்லது அதற்கு முன் பயங்கரமான வயிற்று வலியை உணர்வர். இந்த அறிகுறிகளும், நிகழ்வுகளும் பெண்களில் கருக்கலைப்பு நிகழந்ததை எடுத்துக் காட்டும்.

பிறகு என்ன செய்வது?

பிறகு என்ன செய்வது?

கருக்கலைப்பு ஏற்பட்ட பின் பெண்ணின் உடல் பழைய பலத்தையும் செயல்பாட்டையும் பெற கொஞ்ச கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட காலங்கள் வரை பெண்களுக்கு கடினமான எந்த வேலையும் கொடுக்காமல், கலவி கொள்ளாமல் அவர்கள் இயல்பு நிலையை எட்ட உதவ வேண்டும். பெண்கள் இயல்பு நிலையை அடைய 3 மாதங்கள் தேவைப்படலாம்.

சமீபத்திய ஆய்வு!

சமீபத்திய ஆய்வு!

சமீப காலத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கை ஒன்றில் பெண்களின் உடலில் கருக்கலைப்பு ஏற்பட்ட பின், தம்பதியர் கலவி கொண்டு கருத்தரிப்பு நிகழ முயன்றால் அது விரைவாக நடக்கும் என்று அறிவிக்க பட்டுள்ளது. இந்த ஆய்வில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தம்பதியர் கலந்து கொண்டனர்; அவர்களுக்கு அறிவுரை கொடுக்கப்பட்டு, அதன்படி அவர்கள் நடந்து கொள்ள பணிக்கப்பட்டனர்.

மேலும் படிக்க: குழந்தை இறந்து பிறந்த பின் கணவன்மார்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயம்?!

சரியான கால அளவு!

சரியான கால அளவு!

தம்பதியர்கள் சரியான அறிவுரைகளை மேற்கொண்ட பின், கண்டு பிடிக்கப்பட்டு வெளியிடப்பட்ட முடிவில் கருக்கலைப்பு நிகழ்ந்த பிறகு ஆறு மாதங்களுக்குள் சரியான முறையில் கலவி கொண்டால், கருத்தரிப்பு விரைவில் ஏற்படும் என்ற விஷயம் நிரூபணமாகி விட்டது. கருக்கலைப்பு நிகழ்ந்து வருத்தத்தில் இருந்த கர்ப்பிணிகளும், அவர்தம் கணவன்மார்களும் ஆய்வுக்கு பின் மிகவும் சந்தோசம் அடைந்தனர்.

கருத்தரிப்பு நிகழும்!

கருத்தரிப்பு நிகழும்!

ஆகவே தம்பதியர்களே! கருக்கலைப்பு ஏற்பட்ட பின் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் பெண்ணின் உடலுக்கு சரியான கால அளவு ஓய்வு கொடுக்க வேண்டும். பின் நான்கு ஆவது மாதம் முதல் ஆறு மாதங்களுக்கு உள்ளாக கருத்தரிப்பு கொள்ள முயற்சி மேற்கொண்டால் கண்டிப்பாக குழந்தை உருவாகும். அப்படி உருவாகும் குழந்தையும் ஆரோக்கியமாக, பிரச்சனை இன்றி வளரும் என்று கூறலாம்.

இயற்கையாக நடந்தால் மட்டுமே!

இயற்கையாக நடந்தால் மட்டுமே!

காதல் கொள்ளும் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் எல்லை மீறுவதால் ஏற்படும் கருத்தரிப்பு பலவந்தமாக கலைக்கப்படும்; இது அவர் அவர்களின் தனிப்பட்ட கருத்தை பொறுத்தது. இந்த மாதிரி பலவந்தமாக கருக்கலைப்பு ஏற்பட்டு விட்டால், அது இந்த ஆய்வின் படியான விளைவு நிகழ்வுகள் அதாவது பலவந்தமான கருக்கலைப்பு செய்து கொண்ட பெண்களுக்கு விரைவில் கருத்தரிப்பு ஏற்படும் என்று கூற முடியாது.

இந்த ஆய்வின் முடிவு இயற்கையான கருக்கலைப்பு கொண்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும்; பலவந்தமாக மேற்கொள்ளப்பட்ட முறைக்கு கட்டாயம் பொருந்தாது.

மேலும் படிக்க: உங்கள் பெயர் A என்னும் எழுத்தில் தொடங்குகிறதா? இதை படிங்க

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

When One Should Try For Baby After A Miscarriage?

When One Should Try For Baby After A Miscarriage?
Story first published: Saturday, September 22, 2018, 15:02 [IST]
Desktop Bottom Promotion