ஆண்களின் செக்ஸ் வாழ்க்கையில் கூடி கும்மியடிக்க போகுது ஸ்மார்ட் காண்டம் - தப்பிச்சுக்குங்க மக்களே!

Posted By:
Subscribe to Boldsky

பத்து வருடங்களுக்கு முன்னர் ஸ்மார்ட் என்றால் அது, ஒரு நபரின் தோற்றம், செயற்திறன், வேலை செய்யும் முறை போன்றவற்றை குறித்து வந்தது. ஆனால், இன்று ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கிளாஸ், ஸ்மார்ட் டிவி என திரும்பும் பக்கம் எல்லாம் ஸ்மார்ட் நிறைந்துள்ளது.

What is Smart Condom? Things To Know About it!

Image Courtesy: icon smart condoms

இத்தனை விஷயத்தில் நுழைந்த ஸ்மார்ட் இப்போது இப்போது ஆணுறையிலும் நுழைந்துவிட்டது. பொதுவாக நீங்கள் இதுவரை ஒரு கையில் அணியும் ஸ்மார்ட் வ்ரிஸ்ட் பேண்ட் பார்த்திருப்பீர்கள். அது நீங்கள் எத்தனை கலோரிகள் கரைத்துள்ளீர்கள், உங்கள் இதயத்துடிப்பு எப்படி இருக்கிறது, எத்தனை தூரம் நீங்கள் நடந்துள்ளீர்கள் என்பனவற்றை காண்பிக்கும்.

இதுப் போல தான் இந்த ஸ்மார்ட் காண்டமும்.... இது உங்கள் செக்ஸ் வாழ்க்கை குறித்த A2Z அனைத்தையும் கூறிவிடும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரிட்டிஷ் கம்பெனி!

பிரிட்டிஷ் கம்பெனி!

பிரிட்டிஷ் கம்பெனி ஒன்று தான் இந்த ஸ்மார்ட் காண்டம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. இது ஒரு ரிங் போன்றதாகும். இதை ஆண்குறியில் மாட்டிக் கொள்ள வேண்டும். அதன் மூலமாக நீங்கள் எத்தனை கலோரிகள் கரைத்தீர்கள் என்பதில் இருந்து நீங்கள் உடலுறவில் ஈடுபட்ட நேரம், உங்கள் உந்துதல் வேகம் போன்றவற்றை இது தெளிவாக கணக்கிட்டு கூரிவிடுமாம்.

ஃபிட்பிட் (Fitbit)

ஃபிட்பிட் (Fitbit)

சொல்லப்போனால் கையில் அணியும் ஃபிட்பிட் போல இது ஆண்குறியில் அணியும் ஒரு ஃபிட்பிட் என்று வைத்துக் கொள்ளலாம்.

வியரபல் (Wearable) என்ற பெயரில் தொழில்நுட்பமும், அதன் உபகரணங்களும் நம்மளை ஏற்கனவே கைது செய்துவிட்டன. வெறுமென படுக்கை அறையில் நுழைந்து உறவை கெடுத்த இந்த உபகரணங்கள் இப்போது உங்கள் உடலுறவில் மூக்கை நுழைக்க போகின்றன. i.Con Smart Condom என்ற பிரிட்டிஷ் காண்டம் நிறுவனம் தான் இந்த பிராடக்டை உருவாக்கியிருக்கிறது.

காண்டம் மட்டுமல்ல...

காண்டம் மட்டுமல்ல...

ஐ.கான் காண்டம் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த ஆணுறை வெறும் காண்டம் மட்டுமல்ல, அதுக்கும் மேல...! ஆம், ஆண்குறியில் அணிந்துக் கொள்ளும் ரிங் போல இருக்கிறது இந்த காண்டம். இது ஒரு ஸ்மார்ட் கருவி ஆகும். இதை உங்களது ஸ்மார்ட் போனுடன் இணைத்தும் வைத்துக் கொள்ளலாம்.

இது உங்கள் உடலுறவு சார்ந்த சக்தி, செயற்பாடு என அனைத்தையும் அறிந்து தகவல் கூறும்.

என்னவெல்லாம் கூறும்...

என்னவெல்லாம் கூறும்...

இந்த ஐ.கான் ஸ்மார்ட் காண்டம் என்னென்ன தகவல் எல்லாம் கூறும் என பிரிட்டிஷ் காண்டம் நிறுவனம் கூறியிருப்பவை...

  1. உடலுறவில் ஈடுப்பட்ட போது நீங்கள் எத்தனை கலோரிகள் கரைத்தீர்கள்?
  2. உங்கள் உந்துதல் வேகம் என்ன?
  3. எத்தனை முறை நீங்கள் உந்துநீர்கள்?
  4. நீங்கள் உடலுறவில் ஈடுபட்ட காலநேரம் எத்தனை ?
  5. சராசரியாக உங்கள் உந்துதல் வேகம் என்ன?
  6. உடலுறவில் ஈடுபட்ட போது உங்கள் ஆண்குறி எத்தனை அளவு விரிந்தது என்ற சுற்றளவு.
  7. உங்கள் சருமத்தின் வெட்ப நிலை

என A2Z அனைத்தையும் கூறிவிடுமாம் இந்த ஐ.கான் ஸ்மார்ட் காண்டம்.

இன்னும் வேறென்ன ஸ்பெஷல்?

இன்னும் வேறென்ன ஸ்பெஷல்?

இந்த சிறிய ரிங் போன்ற ஸ்மார்ட் காண்டம் கருவியில் எல்.இ.டி லைட்டிங் சிஸ்டம், ப்ளூடூத் மற்றும் ஒரு யு.எஸ்.பி போர்ட் (சார்ஜ் செய்துக் கொள்ள) தரப்பட்டுள்ளன.

மேலும், இது வாட்டர் ப்ரூஃப் திறன் கொண்டது ஆகும்.

முக்கியமான தகவல்!

முக்கியமான தகவல்!

இந்த கருவியை பயன்படுத்துவது மூலமாக ஒரு தனிநபரின் செக்ஸ் வாழ்க்கை எப்படி இருக்கிறது, அவரது திறன் என்ன, அவரது அந்தரங்க ஆரோக்கியம் எப்படி இருக்கிறது போன்ற மிக முக்கியமான அந்தரங்க தகவல்கள் ஒரு நிறுவனத்திடம் தஞ்சம் அடையும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

இது குறித்து பேசிய இந்நிறுவனத்தின் செயல் அதிகாரி ஒருவர்..., யாருடைய தனிப்பட்ட தகவல்களும் மூன்றாம் நபர்களுக்கு விற்கப்பட மாட்டாது என்று கூறியுள்ளார். ஆயினும், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் திருடு போக நிறையவே வாய்ப்புகள் உள்ளன.

ஐநூறு ரூபாய்க்கு ஆதார் தகவல்களே திருடு போகிறது எனும் போது. இதெல்லாம் எம்மாத்திரம்?

பாதுகாப்பும் கூட...

பாதுகாப்பும் கூட...

இந்த ஸ்மார்ட் காண்டமானது வெறுமென ஒரு நபரின் செக்ஸ் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை கணக்கிட பயன்படும் கருவி மட்டுமல்ல. இந்த கருவியை பயன்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான செக்ஸ் உறவிலும் ஈடுபடலாம்.

ஆம், இந்த கருவியை தயாரித்துள்ள ஐ.கான் ஸ்மார்ட் காண்டம் நிறுவனமானது, இது எச்.ஐ.வி போன்ற பால்வினை தாக்கம் இருப்பதை கண்டறிந்து கூறிவிடும். அதற்கான சென்சார்கள் இதில் இருக்கின்றன என்றும் கூறியுள்ளார்.

ஒருவேளை உடலுறவில் ஈடுப்பட்டு கொண்டிருக்கும் அந்த துணைக்கு பால்வினை நோய் தாக்கம் இருந்தால், இந்த ஸ்மார்ட் காண்டமில் இருக்கும் எல்.இ.டி லைட்டிங் சிஸ்டமில் பர்பிள் நிற லைட் வெளிப்படும் என கூறப்பட்டுள்ளது.

சிக்கல்!

சிக்கல்!

ஏற்கனவே இந்த ஐ.கான் ஸ்மார்ட் காண்டம் குறித்து ஒன்பது இலட்சத்திற்கும் மேலானவர்கள் விசாரித்துள்ளனர் என்று இந்நிறுவனத்தை சேர்ந்த செயல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த கருவியில் ஒரு சிக்கல் இருக்கிறது. இது சிலருக்கு இறுக்கமாகவும், சிலருக்கு லூசாகவும் இருக்கலாம். மேலும், இதை அணிந்துக் கொண்டு உடலுறவில் ஈடுபடும் போது இருவருக்கும் அல்லது இருவரில் யாரேனும் ஒருவருக்கு அசௌகரியங்கள் ஏற்படலாம்.

ஆனால், இந்த கேள்விக்கும் பிரிட்டிஷ் காண்டம் நிறுவனம் பதில் அளித்துள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் காண்டமானது பல அளவுகளில் கிடைக்கும் என்பதால் இந்த பிரச்சனை வராது என்கிறார்கள்.

இத கவனிங்க...

இத கவனிங்க...

ஆனால், இதற்கெல்லாம் மேலாக... ஒரு ஆணின் ஆண்மை அல்லது உடலுறவில் ஈடுபடும் திறனானது இப்படி வெளிப்படையாக மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடியும் என்ற பட்சத்தில்... இது தம்பதிகளின் தாம்பத்திய வாழ்க்கையில் சிக்கல்கள் கொண்டுவரலாம்.

கும்மியடிக்கும்!

கும்மியடிக்கும்!

ஒருவேளை, ஓர் ஆண், இன்னொரு ஆணின் திறனை விட தான் குறைந்துள்ளோம் என்பதை இப்படி கணக்கிட்டு கச்சிதமாக அறிய முடிந்துவிட்டால், அவர்களுக்குள் மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஆகமொத்தத்தில் இது நிம்மதியாக இருக்கும் குடும்பத்தில் கும்மியடிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What is Smart Condom? Things To Know About it!

What is Smart Condom? Things To Know About it!
Subscribe Newsletter