காண்டம் பயன்பாட்டால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள்! உங்களுக்கு தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

பல தம்பதிகள் மற்றும் காதல் ஜோடிகள் தங்களுக்குள் ஏற்பட்ட காதலால், தங்களையும் மீறி ஒன்றாய் சங்கமித்து விடுகின்றனர்; இந்த சங்கமத்தின் விளைவாக கர்ப்பம் எனும் மாற்றம் பெண்ணின் உடலில் நிகழ்கிறது. பலருக்கு தேவையில்லாத நேரங்களில் இந்த கர்ப்பம் எனும் பரிசு கிடைத்து விடுவதால், முன்னெச்சரிக்கையுடன் சங்கமித்து கர்ப்பத்தை தடுக்க அறிமுகப்படுத்தப்பட்ட கருத்தடை சாதனங்களில் ஒன்று தான் காண்டம்.

side effects of condoms

இந்த காண்டம் ஆண் மற்றும் பெண் என இருபாலரும் பயன்படுத்த உகந்தது; பல மருந்தக அங்காடிகளிலேயே விற்கப்படுகிறது; இதைப்பெற எந்தவித மருத்துவ சீட்டும் தேவையில்லை. காண்டம் தேவையில்லாத சமயங்களில் கர்ப்பதைக் கட்டுப்படுத்தி தடுக்க, HIV, STDs போன்ற பாலியல் நோய்கள் உடலில் ஏற்படாமல் கட்டுப்படுத்த அல்லது தடுக்க பெரிதும் உதவுகிறது.

இத்தனை நல்ல விஷயங்களை மனிதர்களுக்கு அளித்தாலும், இந்நன்மைகளுடன் ஒரு சில பக்க விளைவுகளையும் பக்காவாக அளித்து விடுகிறது காண்டம். அப்படி காண்டம் பயன்பட்டால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன என்று இங்கு படிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒவ்வாமை

ஒவ்வாமை

காண்டம் பயன்பாட்டால் பெரிதான பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது; ஆனால் ஆண் மற்றும் பெண் இருபாலர் பயன்படுத்தும் காண்டங்களும் latex என்ற பொருள் மூலமாக தயாரிக்கப்படுகிறது. இந்த காண்டங்கள் ஆண் மற்றும் பெண்ணின் உடலில், பிறப்புறுப்பு பகுதியில் அலர்ஜி எனும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இந்த அலர்ஜி சிறிய பாதிப்பாகவே முதலில் தோன்றும்; ஒருவரின் உடல் தன்மை, பழக்க வழக்கம், உட்கொள்ளும் மருந்துகள் போன்றவற்றின் அடிப்படையில் இந்த சிறிய பக்க விளைவு, உங்கள் வாழ்வையே முடிக்கும் அளவிற்கு பெரிதாகலாம். அதிலும் பெண்களுக்கான காண்டங்களைக் காட்டிலும் அதிக விளைவுகளை ஏற்படுத்துவது ஆண்களுக்கான காண்டங்கள் தான் என்று கண்டறியப்பட்டுள்ளது.

எப்படி அறிவது?

எப்படி அறிவது?

காண்டம் பயன்பாட்டால் உடல் பாதிக்கப்பட்டு உள்ளதை ஒருசில உடல் அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். அந்த அறிகுறிகளாவன:

காண்டம் பயன்படுத்தப்பட்ட இடத்தில், உடலின் தோலில்,

  1. அரிப்பு மற்றும் எரிச்சல்
  2. தடுப்புகள், வீக்கம், சிறுநீர் தொற்றுகள்
  3. சிவந்து போதல்
  4. வீசிங் அல்லது மூச்சுத்திணறல்
குறிப்பு: இந்த அறிகுறிகளில் ஒன்றான தீவிர மூச்சுத்திணறல் அதிர்ச்சி ஏற்பட்டு அல்லது அதிர்ச்சி ஏற்படாமல் ஏற்படலாம்; இரத்த அழுத்தத்தில் ஒரு தாழ்வு, அனபிளக்ஸிஸ் - இது ஒரு தீவிர ஒவ்வாமை இது போன்ற அறிகுறிகள் தோன்றினால், காண்டம் பயன்படுத்துவதால் உடலில் தீவிரமான ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக அர்த்தம் என்று அறிந்து கொள்ளுங்கள்.
ஸ்பெர்மிசைட்

ஸ்பெர்மிசைட்

காண்டம் பயன்படுத்தியும் கர்ப்பம் ஏற்பட்டு விடுவதை தவிர்க்க, தடுக்க சில பேர் ஸ்பெர்மிசைட் போன்ற வேதிப்பொருட்களை பயன்படுத்துவர். இதுவும் சில முக்கிய பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது தான். இதனை பெண்கள் பயன்படுத்தினால், பெண்களின் உடலில் விரைவாக விளைவுகளை ஏற்படுத்த கூடியது. இந்த ஸ்பெர்மிசைட் உபயோகம் ஆண் மற்றும் பெண் இருவரின் பிறப்புறுகளிலும் முக்கியமான நோய்த்தாக்குதலான ஈஸ்ட் தொற்றை ஏற்படுத்தலாம்; அதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தவறான பயன்பாடு

தவறான பயன்பாடு

காண்டம் எப்படி பிறப்புறுப்பில் சரியாக பொருத்தப்பட வேண்டும் என்று அறியாமல் ஏனோதானோ என்று பொருத்தி, கலவியில் ஈடுபட்டால் கண்டிப்பாக கர்ப்பம் ஏற்படும். ஏனெனில் பலர் காண்டம் சரியாக பொருத்துவது எப்படி என்று அறியாமல் பயன்படுத்தி, தேவையில்லாமல் கர்ப்பம் அடைந்து சிக்கலில் மாட்டிக் கொண்டதுண்டு. ஆண் மற்றும் பெண் பயன்படுத்த வேண்டிய காண்டம் வகைகளில் சில மாற்றங்கள் உண்டு; பயன்படுத்தும் முறையும் வேறுபடும்.

ஆகையால் ஆண் மற்றும் பெண்களுக்கான காண்டம்களை சரியாக பொருத்தி, சரியாக பயன்படுத்துவது எப்படி என்று அடுத்து பார்க்கலாம்; ஏனெனில் காண்டம் சரியாக பொருத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டால்,பக்க விளைவுகள் மட்டும் அல்லாமல் எவ்வித விளைவுகளும் ஏற்படாமல் தடுக்கப்படும்.

ஆண் காண்டம் பொருத்தும் முறை

ஆண் காண்டம் பொருத்தும் முறை

ஆண் காண்டத்தை சரியாக பொருத்துவது, பயன்பாட்டிற்கு பின் முறையாக நீக்குவது எப்படி என்று படிப்படியாக பார்க்கலாம்.

  1. காண்டத்தினை பாக்கெட்டில் இருந்து பிரித்து, ஆணின் பிறப்புறுப்பின் கீழ் பாகத்தில் முதலில் பொருத்தவும்.
  2. பின் பிறப்புறுப்பின் முழு நீளம் வரை காண்டம் வருமாறு, நன்கு இழுத்து பிறப்புறுப்பை சரியாக காண்டம் கொன்டு மூடவும்.
  3. இந்த செயல் செய்து கொண்டிருக்கும் பொழுது, காற்றோ வேறு ஏதேனும் சிறு பொருட்களோ காண்டத்தினுள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்; அப்படி இருந்து விட்டால் எது வேறு ஏதேனும் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உண்டு.
காண்டத்தினை நீக்கும் முறை

காண்டத்தினை நீக்கும் முறை

காண்டத்தினை பயன்படுத்திய பின் நீக்குவது எப்படி என்று பார்க்கலாம்.

  1. உடலுறவு கொண்ட பின் காண்டத்தினை அகற்ற, காண்டத்தின் கீழ் பாகத்தை நன்றாக பிடித்துக் கொண்டு, பிறப்புறுப்பின் மேலிருந்து கீழாக நீக்க வேண்டும்.
  2. மிக கவனமாக காண்டத்தின் கீழ்பாகத்தை பிடித்துக் கொண்டு, காண்டத்தினை அகற்றுவது விந்தணுக்கள், பிறப்புறுப்பு திரவம் வெளிப்பட்டு, உடைகள் அல்லது உடல் பாகங்கள் அழுக்காகமல் தடுக்க உதவும்.
  3. நீக்கிய காண்டத்தினை உடனடியாக ஒரு காகிதத் தாளில் மடித்து குப்பைத் தொட்டியில் போட்டு விட வேண்டும்.
பெண் காண்டம் பொருத்தும் முறை

பெண் காண்டம் பொருத்தும் முறை

பெண் காண்டத்தினை எப்படி பொருத்துவது, எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் நீக்குவது என்று ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.

  1. பெண் காண்டத்தினை பாக்கெட்டில் இருந்து பிரித்து பார்த்தால் இரண்டு வளையங்கள் தென்படும்.
  2. அதில் முதல் வளையத்தை அதாவது உட்பகுதி வளையத்தை பிறப்புறுப்பின் உள் பாகத்தை நன்கு மூடுமாறு, மாதவிடாய் காலத்தில் பேட் பொருத்துவது போல் பாதுகாப்பாக இருக்கும் வகையில் பொருத்த வேண்டும்.
  3. மேலும் இந்த உட்பகுதி வளையத்தை பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலால் விரித்து சரியாக பொருந்தும் வண்ணம் பொருத்த வேண்டும். வெளிப்பகுதி வளையம் உடலின் வெளிப்புறமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
நீக்கும் முறை

நீக்கும் முறை

காண்டத்தினை பயன்படுத்திய பின் நீக்குவது எப்படி என்று பார்க்கலாம்.

  1. பின் உங்கள் துணையுடன் உடலுறவில் ஈடுபடலாம்; ஆனால் உடலுறவின் பொழுது துணையின் பிறப்புறுப்பு சரியாக காண்டத்திற்குள் பொருந்தும் வண்ணம் இருக்குமாறு கவனித்துக் கொள்ளவும்.
  2. மேலும் ஆணின் பிறப்புறுப்பு உங்கள் காண்டத்தினை உள்நுழைத்தலின் பொழுது நீக்கிவிடாதவாறு மிகவும் கவனமாக கவனித்துக் கொள்ளவும்.
  3. உடலுறவினை முடித்த பின், வெளிப்பகுதி வளையத்தை பிடித்து இழுத்து காண்டத்தினை பிறப்புறுப்பில் இருந்து பாதுகாப்பாக நீக்கிட வேண்டும்.
  4. நீக்கிய காண்டத்தினை காகிதத் தாளில் மடித்து குப்பைத் தொட்டியில் போட்டு பாதுகாப்பான முறையில் நீக்கவும்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    What Are The Side Effects Of Condoms?

    What Are The Side Effects Of Condoms?
    Story first published: Thursday, August 9, 2018, 12:40 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more