For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் கர்ப்பமடையாமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள் என்னென்ன?

பல தம்பதியர்கள் தங்களுக்கென ஒரு குழந்தை இல்லையே என்று எண்ணி ஏங்கித் தவிக்கின்றனர்; தம்பதியரின் மனதில் குழந்தைக்காக உருவான ஏக்கம் நாளடைவில் மனஅழுத்தமாக, வருத்தமாக மாறி அவர்களின் வாழ்வின் சந்தோஷத்தையே க

|

பல தம்பதியர்கள் தங்களுக்கென ஒரு குழந்தை இல்லையே என்று எண்ணி ஏங்கித் தவிக்கின்றனர்; தம்பதியரின் மனதில் குழந்தைக்காக உருவான ஏக்கம் நாளடைவில் மனஅழுத்தமாக, வருத்தமாக மாறி அவர்களின் வாழ்வின் சந்தோஷத்தையே கெடுத்து விடும் அளவிற்கு வளர்ந்து விடுகிறது. கருத்தரிக்க சரியான நேரம் மற்றும் காலம், முறை அறிந்து செயல்படல் வேண்டும்; அப்படி இல்லாவிட்டால் அது தவறான பலனையே தரும்.

what are the reasons for not getting pregnant

இந்த பதிப்பில் தம்பதியர்கள் பெற்றோராவதை தடுக்கும் சில முக்கிய காரணங்கள் பற்றி படித்து அறியலாம்.!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருமுட்டையும் உடலுறவுறவும்

கருமுட்டையும் உடலுறவுறவும்

ஆணும் பெண்ணும் உடலால் ஒருவரோடு ஒருவர் ஒன்றாக இணைவதால், கருத்தரிப்பு ஏற்படுகிறது; உடலால் இணைய உடலுறவு அதாவது தாம்பத்யம் எனும் விஷயம் முக்கிய நிகழ்வாக விளங்குகிறது. இந்த முக்கியமான விஷயத்தை சரியான நேரத்தில் செய்தால் எளிமையாக, விரைவில் கருத்தரிக்க முடியும். கருத்தரிக்க முக்கியத் தேவையாக இருப்பது பெண்ணின் அண்டம் மற்றும் ஆணின் விந்தணுக்கள்.

பெண்ணின் கருவறையில் அண்டம் ஆண் விந்துவிற்காக காத்திருந்து, இறந்து போய் வெளியேறும் நிகழ்வே மாதவிடாய். பெண்ணின் மாதவிடாய் தொடங்கிய நாளை நாள்-1 அதாவது முதல் நாளாக கணக்கில் கொண்டு, மாதவிடாய் முடிந்த பின் சரியாக ஏழாம் நாள் - நாள்-7 முதல் நாள்-20 வரை தொடர்ந்து காதலுடன் சரியாக உடலுறவு கொண்டு வந்தால், நீங்கள் கருத்தரித்து தாய்-தந்தை ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

லூப்ரிகண்ட்ஸ்

லூப்ரிகண்ட்ஸ்

கருத்தரிக்க விந்துக்களை பெண்ணின் உடலிற்குள் விரைவாக செலுத்த, சரியாக எடுத்துச்செல்ல மற்றும் உடலுறவை எளிதாக்க, வலி ஏற்படாமல் இருக்க பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருள் லூப்ரிகண்ட். ஆனால், அதை செயற்கை முறையில் வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டு தயாரிக்கப்பட்டதை வாங்கி உபயோகித்தால், அதில் கலந்துள்ள வேதிப்பொருட்கள் கருத்தரிப்பை தடுக்கலாம். இயற்கை முறையில் பெண்ணின் பிறப்புறுப்பு நன்கு ஈரம் அடைந்த பின் உடலுறவு கொண்டு, இன்பத்தின் உச்சகட்டத்தை அடைய முயலுங்கள் மற்றும் அது வலியை ஏற்படுத்தாமல் இன்பத்தை மட்டுமே கொடுக்கும்; விரைவில் கருத்தரிக்கவும் உதவும்.

பெண்ணின் பிறப்புறுப்பில் ஈரம் ஏற்பட, உடலுறவு முன் விளையாட்டுகளில் ஈடுபடுதல், செக்ஸியாக பேசி துணையை பிறப்புறுப்பில் ஈரம் கொள்ள செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

மது மற்றும் புகை

மது மற்றும் புகை

மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தை தம்பதியரில் ஒருவர் கொண்டிருந்தால், கருத்தரிக்க ஏதோ வாய்ப்பு இருக்கலாம் என்று கூறலாம். ஆனால், இருவருமே அத்தகைய தீய பழக்கங்களை கொண்டிருந்தால், நீங்கள் கருத்தரித்து தாய் - தந்தை ஆவது என்பது மிகவும் கடினமான விஷயமாக இருக்கலாம்; மாறலாம். எனவே, முடிந்த அளவிற்கு குடிப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கத்தை நிறுத்த அல்லது குழந்தை பெற்று எடுக்கும் வரையாவது தவிர்த்து வைக்க முயலுங்கள்.

அதிக உடல் எடை..

அதிக உடல் எடை..

தம்பதியர் இருவரில் ஆணோ பெண்ணோ அதிகமான உடல் எடையை கொண்டிருந்தால், அதாவது உடல் கொண்டிருக்க வேண்டிய எடையை விட அதிகம் எடை கொண்டிருந்தால், அவர்கள் தாய்-தந்தை ஆவது சற்று கடினமான விஷயமே! ஏனெனில், அதிக உடல் எடை கருக்கலைப்பு நிகழக் காரணமாகி, கர்ப்பம் என்பது தாமதமாகலாம் அல்லது தடைபட்டு போகலாம். தகாத உணவு முறையால் தான் உடல் எடை அதிகரித்திருக்கும்; அப்படி பின்பற்றப்பட்ட தகாத உணவு முறை தான் நீங்கள் அப்பா- அம்மா ஆவதை தடுக்கிறது.

எனவே உணவு முறையை ஒழுங்குபடுத்தி, விரைவில் உடல் எடையை குறைத்து, கருத்தரிக்க முயலுங்கள்! கண்டிப்பாக வெற்றி உங்கள் வசம் வந்து சேரும் - குழந்தையும் உங்களுக்கு கிடைக்கும்!

வைட்டமின் - டி

வைட்டமின் - டி

ஆண் அல்லது பெண்ணின் உடலில் வைட்டமின் குறைபாடு இருந்தால், அது கருத்தரிப்பை தாமதப்படுத்தலாம் அல்லது தடை செய்யலாம். ஆகையால், தம்பதியர் இருவரும் மருத்துவ பரிசோதனை செய்து தங்கள் உடலில் வைட்டமின் டியின் அளவு அறிந்து கொள்ளல் வேண்டும்; வைட்டமின் டி குறைவாக இருந்தால், உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்களால் அதை அதிகரிப்பது எப்படி என்று மருத்துவரை கேட்டு அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

ஏனெனில் வைட்டமின் டிக்காக நீங்கள் உட்கொள்ளும் மருந்து எவ்வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தி விடாமல் இருக்கவே இந்த யோசனை. எனவே இயற்கை முறையில் உடலில் வைட்டமின் டியின் அளவை அதிகரிக்க முயற்சிப்பது நல்ல பலனை தரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

what are the reasons for not getting pregnant

what are the reasons for not getting pregnant
Story first published: Friday, August 10, 2018, 17:44 [IST]
Desktop Bottom Promotion