Latest Updates
-
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
முதல் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது இரண்டாவதாக கருவுற்றால் என்னென்ன பிரச்சனைகள்?
முதல் குழந்தை தாய்ப்பால் குடித்துக் கொண்டிருக்கும் போது இரண்டாவது குழந்தை கர்ப்பமானால் பெண்கள் சந்திக்கிற சில சிக்கல்கள்.
கர்ப்பமாக இருக்கும் போது எல்லாம் பெண்களுக்கும் அவர்களை சார்ந்திருக்கும் குடும்பத்தினருக்கும் பல்வேறு விதமான சந்தேகங்கள் எழுந்து கொண்டேயிருக்கும். இதைச் செய்யலாமா கூடாதா? இவற்றையெல்லாம் மருத்துவரிடம் எப்படி கேட்பது என்ற தவிப்பில் மனம் நிலை கொள்ளாது இருப்பவர்கள் உங்களுடைய சந்தேக கேள்விகளை எங்களுக்கு அனுப்பலாம்.
இப்போது இரண்டாவது குழந்தை கருத்தரிக்கும் பெண்களுக்காக இந்தக் கட்டுரை... முதல் குழந்தை தாய்ப்பால் குடித்துக் கொண்டிருக்கும் போது கருவுறலாமா? அப்படி கருவுற்றால் தாய்ப்பால் குடித்துக் கொண்டிருக்கும் முதல் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்புகள் வருமா என்பது குறித்து பார்க்கலாம்.

தாய்ப்பால் :
பழமை காலத்திலிருந்து தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கருத்தரிக்க கூடாது அப்படி தரித்தால் முதல் குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்காது என்பார்கள். அதை நம்பி இரண்டாவது குழந்தை குறித்த பயம் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும்.

கர்ப்பம் :
தாய்ப்பால் கொடுப்பது உங்களுடைய ஓவலூசனை தாமதப்படுத்துமே ஒழிய கர்பத்தை தடுக்காது. பலரும் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருப்பதால் கர்ப்பமடைய் மாட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதுவும் தொடர்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மாதவிடாய் உதிரப்போக்கு சில சமயங்களில் முறையற்று இருக்கும். மாதவிடாய் முறையற்று இருக்குமென்பதால் தாய்பால் கொடுக்கும் காலங்களில் தாங்கள் கர்ப்பமடைய மாட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது தவறானது.

ப்ரோலாக்டீன் :
தாய்ப்பால் சுரப்பதற்கு முக்கிய காரணியாக இருப்பது ப்ரோலாக்டீன் தான். இவை உங்களுடைய இனப்பெருக்க ஹார்மோன்களுக்கு அடிப்படையாய் விளங்குகிறது. இந்த ப்ரோலாக்டீன் அதிகமாக இருந்தால் உடலில் மலட்டுத் தன்மையை அதிகரிக்கும்.
ஏனென்றால் இந்த ப்ரோலாக்டீன் உங்களது மாதவிடாயை முறையற்று ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது.

ஆரோக்கியம் :
பொதுவாகப்பார்த்தால்.... உங்களுக்கு மாதவிடாய் சீரானதும் வழக்கம் போல ஒரு மாத இடைவெளியில் மாதவிடாய் வரத்துவங்கியதும் நீங்கள் கர்ப்பமடைவது தான் உங்களுக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பானது ஆரோக்கியமானதும் கூட தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இரண்டாவது குழந்தை கருத்தரிக்கும் முன்னர் இதை மட்டுமாவது உறுதி செய்து கொள்ளுங்கள்.

கர்பப்பை :
ஏனென்றால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு ஆக்ஸிடாசின் என்ற ஹார்மோன் சுரக்கும். இந்த ஹார்மோன் உங்கள் கருப்பையில் கரு உருவாவதை, வளர்வதை தடுத்திடும். இந்த ஹார்மோனால் கருவிற்கு பாதிப்புகள் உண்டு.
இப்படி ஆக்ஸிடாசினால் கருவின் வளர்ச்சியில் சிக்கல் இருக்கிறது என்பதை கர்ப்பமடைந்து 24வது வாரத்தில் தான் கணிக்க முடியும்.

எது சரியான நேரம் :
இதனால் ஓர் குழந்தை தொடர்ந்து தாய்ப்பால் குடிக்கும் போது உங்களுக்கு மாதவிடாய் இன்னும் சரியாகாத நேரத்தில் இரண்டாவது குழந்தை கருத்தரிக்க வேண்டாம்.
உங்களுடைய மாதவிடாயை மட்டும் கணக்கிடுங்கள். அதோடு உங்களுடைய உடல் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள் மாதவிடாய் சீராகிவிட்டது, பழைய உடல் ஆரோக்கியத்திற்கு திரும்பி விட்டேன் என்றால் நீங்கள் தாராளமாக இரண்டாவது குழந்தை கருத்தரிக்கலாம்.

மார்பகம் :
தாய்ப்பால் கொடுக்கும் இளம்தாய்மார்கள் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்.
உங்கள் மார்பகங்கள் தான் உங்களது முதல் அடையாளம். ஏற்கனவே ஒரு குழந்தைப் பெற்று தளர்ந்து போய் இருக்கும் உங்கள் மார்பகத்தில் சில மாற்றங்கள் தெரியும். சில நேரத்தில் தளர்ந்திருக்கும் மார்பகம் கட்டியாவதை உணர்வீர்கள்.

தாய்ப்பால் குறையும் :
தாய்ப்பால் உற்பத்தியாவதற்கு ஏதுவாக தளர்ந்திருக்கும் மார்பகங்கள் மீண்டும் கருத்தரிக்கும் போது சில மாற்றங்களை சந்திக்கும். அதோடு நம் உடலில் கரு உருவாகக்கூடிய ஹார்மோன் அதிகரிக்கும்போது தாய்ப்பால் உற்பத்தியாகிற அளவு குறைய ஆரம்பிக்கும்
இதனால் முதல் குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்காது. முதல் குழந்தைக்கு பிறந்து தாய்ப்பால் மட்டுமே குடிக்கிற மாதமே ஆகியிருக்கிறது என்றால் இது பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.

குமட்டல் வாந்தி :
கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இது வழக்கமாக ஏற்படக்கூடியது தான். ஆனால் குழந்தை பிறந்ததும் அல்லது முதல் ட்ரைம்ஸ்டரைத் தாண்டியதும் பலருக்கும் இந்த குமட்டல்... வாந்தி போன்றவை நின்றிருக்கும். மீண்டும் இந்தப் பிரச்சனை திடீரென்று எழுந்தால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று ஒரு முறை சோதித்திடுங்கள்.

சோர்வு :
பொதுவாக தாய்ப்பால் கொடுப்பது கலோரி குறையக்கூடிய ஓர் செயல் . தொடர்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சோர்வாக இருப்பார்கள் அதோடு எனர்ஜி குறைந்து எப்போதும் தூங்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
கருத்தரிக்கும் போதும் சிலருக்கு இதேப் பிரச்சனை தான் ஏற்படும். வழக்கத்தை விட அதிகமாக தூங்கினால் அல்லது நீங்கள் சோர்வாக உணர்ந்தால் கர்ப்ப பரிசோதனை நல்லது.

மாதவிடாய் :
பொதுவாக தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் மாதவிடாய் முறையாக இருக்காது. இதனால் எப்போது கர்ப்பம் தரிக்கிறோம் என்ற சிக்கல் பலருக்கும் ஏற்படக்கூடும்.
எப்போதாவது ப்ளீடிங் தெரிந்தால் உடனே அதனை மாதவிடாய் கணக்கில் சேர்த்துக் கொள்ளாதீர்கள். முதல் ட்ரைம்ஸ்டரில் குறிப்பாக நான்கு மற்றும் பன்னிரெண்டாவது வாரத்தில் இப்படியான ப்ளீடிங் வெளிப்படுவது சகஜம் தான். மாதவிடாய் தொடர்ந்து வாரத போது திடீரென்று உங்களுக்கு வந்தாலும் கர்ப்பப் பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.

கர்பப்பை :
குழந்தை பிறந்த சில நாட்களில் கர்பப்பை சுருங்கி அதன் இடத்தில் அமர்ந்து கொள்ளும். குறிப்பாக நான்கு வாரங்களில் கர்பப்பை முற்றிலுமாக நார்மலாகி அதன் இடமான பெல்விக் ஏரியாவில் அடங்கிக் கொள்ளும்.
இதன் போது திடீரென்று உங்களின் பப்ளிக் போனில் (boneskin
அழுத்தம் ஏற்பட்டால் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்பதை சோதித்திடுங்கள். ஏனென்றால் மீண்டும் கர்ப்பம் தரித்தால் உங்களுடைய கர்பப்பை விரிவடையும் அப்போது இப்படியான அழுத்தம் உண்டாகும்.

சரும மாற்றங்கள் :
நீங்கள் மிகவும் எளிதாக இதனை கண்டுபிடிக்கலாம். முதல் குழந்தை கருத்தரிப்பதற்கும்... இரண்டாவது குழந்தை அதுவும் முதல் தாய்ப்பால் குடித்துக் கொண்டிருக்கிற வயதில் இரண்டாம் குழந்தை கருத்திருக்கும் பெண்களுக்கு மிக வேகமாக ஸ்ட்ரச் மார்க் ஏற்படும். வயிறு மற்றும் மார்பகங்களில் திடீரென்று ஸ்ட்ரச் மார்க் தோன்றினால் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications











