For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருத்தரிப்பை நிர்ணயிக்கும் மாதவிடாய் சுழற்சியை பற்றிய மருத்துவ உண்மைகள்..!

கருத்தரித்து குழந்தையை பெற்று எடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணின் கனவு; கருத்தரிப்பை நிர்ணயிக்கும் மாதவிடாய் சுழற்சியை பற்றிய மருத்துவ உண்மைகள் பற்றி இந்த பதிப்பில் படித்து அறியுங்கள்.

|

எல்லா பெண்களுக்குமே தனக்குள் நிகழும் மாதவிடாய் சுழற்சியை பற்றிய பல வித சந்தேகங்கள் ஏற்படும். தனது மாதவிடாய் சுழற்சி சரியாக தான் நடக்கிறதா? மாதவிடாய் சுழற்சியில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா? எனக்கு ஏன் மாதவிடாய் நாள் தள்ளிப்போகிறது என்று பல வித குழப்பங்கள் இருக்கும்.

Medical Facts About Menses Cycle And Ovulation

பெண்களின் மனதில் நிலவும் இந்த குழப்பங்களை நிவர்த்தி செய்ய மருத்துவர்களிடம் இருந்து கலந்துரையாடி பெற்ற உங்கள் கேள்விகளுக்கான பதில்களுடன் கூடிய பதிப்பினை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்! படித்து பயனடையவும்..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என் மாதவிடாய் சுழற்சி சரியானது தானா?

என் மாதவிடாய் சுழற்சி சரியானது தானா?

பல பெண்களின் மனதில் எழும் இத்தகைய கேள்விக்கு மருத்துவர் பமீலா பெரென்ஸ் அளிக்கும் விடையை இப்பொழுது காணலாம்; "இது எல்லா பெண்களின் மனதிலும் எழும் ஒரு பொதுவான கேள்வியே! உங்கள் சுழற்சி 28-32 நாட்களுக்கு ஒரு முறை என ஒவ்வொரு மாதமும் நிகழ்ந்து வந்தால், உங்கள் உடலின் மாதவிடாய் சுழற்சி சரியாக உள்ளது என்றே அர்த்தம். மருத்துவர் உங்களிடம் இந்த கேள்வியை கேட்து அறிவது 2 வாரத்திற்கு ஒரு முறை கரு முட்டை உருவாக்கம் நிகழ்கிறதா என்பதை பற்றி அறிந்து கொள்ள தான்".

சரியாக மாதவிடாய் சுழற்சி இல்லாத என்னால் கருத்தரிக்க முடியுமா?

சரியாக மாதவிடாய் சுழற்சி இல்லாத என்னால் கருத்தரிக்க முடியுமா?

பெரும்பாலான பெண்களின் மனதில் நிலவும் இந்த கேள்விக்கு மருத்துவர் மைக்கேல் அளிக்கும் பதிலை படியுங்கள்; " ஒவ்வொரு மதமும் நிகழும் 28 நாட்களுக்கு பின்னான சுழற்சியில் 14 ஆம் நாள் கருமுட்டை கருவுறுதலுக்கு தயாராக வெளிப்படும். இதுவே நாள் தள்ளிப்போகும் பெண்களில் சுழற்சி 35-42 நாட்களுக்கு ஒருமுறையோய் நிகழும். இத்தகைய பெண்களாலும் கட்டாயம் கருத்தரிக்க இயலும்; ஆனால் அதற்கு தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று செயல்பட வேண்டும்"

சுழற்சி நாட்களில் என்னால் கருத்தரிக்க இயலுமா?

சுழற்சி நாட்களில் என்னால் கருத்தரிக்க இயலுமா?

மாதவிடாய் நாட்களில் கருத்தரிப்பது குறித்த பெண்களின் கேள்விக்கு மைக்கேல் கீழ்கண்டவாறு பதிலளிக்கிறார்:

" கண்டிப்பாக கருத்தரிக்க முடியும், கணவரது விந்தணு பெண்ணின் பெலோப்பியன் குழாயில் இருந்தால், கருத்தரிப்பு நிகழும். உதாரணத்திற்கு 21 நாட்கள் சுழற்சி கொண்ட பெண்ணிற்கு 7 ஆம் நாள் கருமுட்டை வெளிப்பாடு நிகழும்; அப்பெண் 5 ஆம் நாள் தாம்பத்தியத்தில் ஈடுபட்டால், கண்டிப்பாக கருத்தரிக்க இயலும்."

பலவருடங்களாக கருத்தடை சாதனம் பயன்படுத்திய என்னால், கருத்தரிக்க இயலுமா?

பலவருடங்களாக கருத்தடை சாதனம் பயன்படுத்திய என்னால், கருத்தரிக்க இயலுமா?

இந்த கேள்விக்கு மருத்துவர் பமில்ல அளிக்கும் விடை:

" பெண்கள் கருத்தடை சாதனம் பயன்படுத்தினாலும், கருத்தரிக்க திட்டமிடும் 3 மாதங்களுக்கு அதனை நிறுத்திவிட வேண்டும்; மேலும் மருத்துவருடன் சரியான ஆலோசனை கொண்டு, மாதவிடாய் ஏற்பட்ட நாள் மற்றும் கருத்தடை பயன்படுத்திய காலம், நிறுத்திய நாள் என அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக கூறி கலந்தாலோசித்தல் வேண்டும். சரியான கலந்தாய்வு மற்றும் சரியான மருத்துவ வழிகாட்டல் மூலம் கருத்தடை சாதனம் பயன்படுத்திய பெண்களும் கருத்தரிக்க இயலும்".

மேலும் படிக்க: தவறு செய்யும் குழந்தைகளை நல்வழிப்படுத்த பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?

கருத்தரிப்பதை கண்டறிய உதவும் சுலபமான வழி எது?

கருத்தரிப்பதை கண்டறிய உதவும் சுலபமான வழி எது?

கருத்தரிப்பதை கண்டறிய, பிரக்னென்சி கிட் மூலம் காலை சிறுநீரில் பரிசோதனை செய்ய வேண்டும். இந்த சிறுநீர் பரிசோதனையை மாதவிடாய் நிகழ்வதற்கு 2 தினங்கள் முன் அல்லது மாதவிடாய் நாளின் அன்று அல்லது மாதவிடாய் தள்ளிப்போன அடுத்தநாள் பரிசோதிக்க வேண்டும். மாதவிடாய் தள்ளிப்போன ஒரு வாரத்திற்கு பின்னும் பரிசோதித்து பார்க்கலாம்; காலை சிறுநீரில் பிரசவ ஹார்மோன் அதிகமிருப்பதால், இது சரியான முடிவை அளிக்கும். மற்ற நாட்களில் பரிசோதனை செய்தல், முடிவ்வு சரியானதாக இராது."

மாதவிடாய் ஏற்பட்ட பின் அந்நாளில் நான் கருத்தரிக்க இயலுமா?

மாதவிடாய் ஏற்பட்ட பின் அந்நாளில் நான் கருத்தரிக்க இயலுமா?

இந்த விசித்திர கேள்விக்கும் தெளிவான விடையளிக்கிறார், மருத்துவர் பமீலா.

" மாதவிடாய் ஏற்பட்ட பின் எந்தவொரு பெண்ணாலும் அந்நாட்களில் கருத்தரிக்க இயலாது; ஏனெனில் மாதவிடாய் என்பதே கருமுட்டை மற்றும் கருப்பையின் சுவர் உரிந்து இரத்தமாக வெளியேறுவதே. இந்நாட்களில் கருத்தரித்தல் நிகழாது. ஆனால், மாதவிடாய்க்கு முன்னான தினங்களில் கருத்தரிக்க முயற்சித்தால், கருத்தரிப்பு கட்டாயம் நிகழும்"

எந்நேரத்தில் உடலுறவு கொள்வது கருத்தரிப்பிற்கு உதவும்?

எந்நேரத்தில் உடலுறவு கொள்வது கருத்தரிப்பிற்கு உதவும்?

பெண்களின் மனதில் ஏற்படும் இந்த பொதுவான கேள்விக்கு மருத்துவர் மைக்கேல் அளிக்கும் விடை:

" நீங்கள் 28 நாட்கள் சுழற்சி கொண்ட பெண்ணாய் இருந்தால், சரியாய் 14 ஆம் நாள் உடலுறவு கொள்ளுதல் வேண்டும்; அத்தினத்திற்கு முன்னும் பின்னும் தாம்பத்தியம் கொள்ளுதல் மேலும் நல்லது. இதுவே 35 நாட்கள் சுழற்சி கொண்ட பெண்கள் 20 ஆம் நாள் தாம்பத்தியம் கொள்ளுதல் நல்லது. மொத்தத்தில் கருமுட்டை வெளிப்படும் சமயத்தில் உடலுறவு கொள்வது சிறந்த பலனை தரும்."

எனக்குள் கரு வளர்வதை நான் எப்படி அறிவது?

எனக்குள் கரு வளர்வதை நான் எப்படி அறிவது?

இந்த கேள்விக்கு மருத்துவர் மைக்கேல் மிக எளிதாக ஒரு பதிலை தருகிறார்: " நீங்கள் கருத்தரித்து விட்டால், மாதவிடாய் நிகழாததன் காரணமாக வயிற்றில் வலி ஏற்படும்; மேலும் மாதவிடாய் ஏற்படாது. இதைக் கொண்டு நீங்கள் எளிதாக கருத்தரிப்பது குறித்து அறியலாம். மேலும் அந்த சமயத்தில் உடலுறவு கொள்வது கரு கலையாமல் பலப்பட்டு உருவாக உதவும். பிரக்னென்சி கிட் கொண்டு பரிசோதனை செய்தும் அறியலாம்...! கருத்தரிப்பை கண்டறிய உதவும் சாதனங்கள் 15$ முதல் 50$ வரையிலான விலையில் கிடைக்கின்றன."

மேலும் படிக்க: கருவில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிய உதவும் வித்தியாச தகவல்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Medical Facts About Menses Cycle And Ovulation

Medical Facts About Menses Cycle And Ovulation
Story first published: Monday, October 1, 2018, 10:40 [IST]
Desktop Bottom Promotion