Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
கர்ப்பமாக இருக்கும்போது உருளைக்கிழங்கு சாப்பிடலாமா? அது குழந்தையை பாதிக்குமா?
கர்ப்பமாக இருக்கும்பொழுது, அதிக ஸ்டார்ச் உள்ள உருளைக்கிழங்கு சாப்பிடுவது நல்லதா என்று இதை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
உருளைக்கிழங்கு நிறைய வீடுகளில் பிரதானமாக இருக்கிறது மற்றும் பல்வேறு காய்கறிகள் மற்றும் குழம்புகளில் சேர்க்கப்படுகின்றன. நல்ல செய்தி என்னவென்றால், உருளைக்கிழங்கில் நிறைய சத்துக்கள் உள்ளன. மற்றும் இதை கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்வது பாதுகாப்பானவை தான். எனினும், நீங்கள் கர்ப்ப காலத்தில் எதை சாப்பிட்டாலும் அது உங்கள் வயிற்றில் உள்ள குழந்தையை பாதிக்கும்.

ஆகவே நீங்கள் எதை சாப்பிடுவதாக இருந்தாலும் அதற்கேற்றவாறு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் உணவு பட்டியலில் இருந்து ஆரோக்கியமற்ற எல்லா உணவையும் நீக்க வேண்டும். எனவே, உருளைக்கிழங்கு சாப்பிடுவது பாதுகாப்பாக இருந்தாலும் அளவான முறையில் எடுத்து கொள்ளவேண்டும்.

நன்மைகள்
1. கர்ப்பத்தில் குழந்தையின் முக்கிய ஆதாரம் குளுக்கோஸ் ஆகும்; இது உருளைக்கிழங்கில் காணப்படுகிறது.
2. உங்கள் கர்ப்ப காலத்தில் நீங்கள் எடை குறைவாக காணப்பட்டால் இதை சாப்பிடலாம். ஏன்னெனில், உருளைக்கிழங்கு கர்ப்ப காலத்தில் எடை அதிகரிக்கும் ஆரோக்கியமான வழிகளில் ஒன்றாகும்.
3. சரியான முறையில் சமைத்தால், உருளைக்கிழங்கு கர்ப்பிணி பெண்களுக்கு செரிமான பிரச்சினைகளை சமாளிக்க உதவும்.
4. உருளைக்கிழங்கில் கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளது. மேலும், அதில் டயட்டரி பைபர், வைட்டமின் B6 மற்றும் வைட்டமின் C ஆகியவற்றின் வளமான ஆதாரங்கள் உள்ளன.
5. உருளைக்கிழங்கில் உள்ள அரை-கரையக்கூடிய மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து கர்ப்பகாலத்தின் போது கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது.
6. உருளைக்கிழங்கில் இரத்த அழுத்தம் அளவைக் கட்டுப்படுத்தும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன, இதனால் கர்ப்ப காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
7. பச்சை உருளைக்கிழங்கில் வைட்டமின் C நிறைந்த ஆதாரங்கள் உள்ளன; மற்றும் கர்ப்ப காலத்தில் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
8. உருளைக்கிழங்கில் இரும்பு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்திருக்கும். இந்த தாதுக்கள், கருவின் வளர்ச்சிக்கு அவசியமானவை.
9. உருளைக்கிழங்கில் ஃபோலேட் அதிகம் உள்ளது. ஃபோலேட் கர்ப்ப காலத்தில் முக்கியமானது; ஏனெனில், இது வளரும் குழந்தையின் மூளை மற்றும் முதுகெலும்பு தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளின் ஆபத்தை குறைக்கிறது.
10. உருளைக்கிழங்கில் ஆற்றல் நிறைந்திருக்கிறது.
11. உருளைக்கிழங்கின் செரிமானம் மெதுவாக நடக்கும். எனவே நீண்ட நேரத்திற்கு இது உங்களை முழுமையாக வைத்திருக்க உதவுகிறது.
12. கர்ப்பிணி பெண்களுக்கு கண்ணிற்கு கீழ் ஏற்பட்டிருக்கும் வீக்கத்தை போக்க துருகிய உருளைக்கிழங்கு பயன்படுத்தலாம்.

பச்சை உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு நிலத்திற்கு கீழ் வளரக்கூடியது. எனினும், சில நேரங்களில் அவை தரையில் வெளிப்படும். சூரிய ஒளியின் வெளிப்பாட்டின் விளைவாக, உருளைக்கிழங்கின் தோலில் உள்ள வளர்சிதை மாற்ற நடவடிக்கைகள் குளோரோஃபில் உருவாக காரணமாக அமைகிறது; இதுவே உருளைக்கிழங்கிற்கு பச்சை நிறத்தை வழங்குகிறது. இந்த நிகழ்வுக்கு காரணமாக அமைக்கப்பட்ட இன்னொரு தயாரிப்பு சோலனைன், இது ஒரு கிளைகோல்-ஆல்கலாய்ட் டோக்சின் ஆகும். எனவே, பச்சை உருளைக்கிழங்கை குறிப்பாக கர்ப்ப காலத்தில், உட்கொள்ளக்கூடாது.

பக்க விளைவுகள்
1. பச்சை உருளைக்கிழங்கு (பச்சை நிறமுள்ள உருளைக்கிழங்கு) ஆல்பா-சாக்கோனைன் மற்றும் ஆல்பா-சோலனைன் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இந்த வகை கிளைகோல்-ஆல்கலாய்ட் நச்சுத்தன்மை, பொதுவாக இரைப்பைக் குழாயை எரிச்சல் படுத்துகிறது. மேலும் இது வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படுத்துதல் மற்றும் கருச்சிதைவு வளர்ச்சியை மோசமாக பாதிக்கும்.
2. பச்சை உருளைக்கிழங்கு புதிதாக பிறந்த குழந்தைக்கு ஸ்பின்னா பிஃபிடியா போன்ற சாத்தியமான குறைபாடுகளை ஏற்படுத்தும். கர்ப்பகாலத்தின் போது உருளைக்கிழங்கு நிறைந்த உணவு கர்ப்பிணிப் பெண்களில் கர்ப்பகால நீரிழிவு ஏற்படுவதாக அறியப்படுகிறது.
3. ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் கர்ப்பகாலத்தின் போது, உருளைக்கிழங்கு மற்றும் பிற முளைக்கும் காய்கறிகளை நிறைந்த உணவு சாப்பிட தாய்மார்களின் குழந்தைகளுக்கு வகை 1 நீரிழிவு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக கண்டறியப்பட்டது.
4. அழுகிய உருளைக்கிழங்கு தாய்மார்களுக்கு விசமுற்ற உணவாக அமையும்.
5. உருளைக்கிழங்கு ஆல்கலாய்டுகளைக் கொண்டிருப்பதால், அதை அதிக அளவில் உட்கொள்ளவது கருச்சிதைவுக்கு வழிவகுக்கலாம்.
இந்த ஆல்கலாய்டுகள் உடல்களுக்கு உள்ளே சிக்கிக் கொள்ளலாம்.
6. இறுதியாக, ஆனால் மிக முக்கியமாக, அதிக எடைகொண்ட கர்ப்பிணி பெண்கள், கர்ப்ப காலத்தில் அதிகப்படியான உருளைக்கிழங்கு சாப்பிட்டால் பருமனாக ஆக வாய்ப்புள்ளது.

ஆரோக்கியமானதா?
உருளைக்கிழங்கு ஒழுங்காக சமைக்கப்பட்டு, மிதமான அளவில் சாப்பிட்டால் அது கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமானதாக இருக்கும். சமையல் முறைகளைப் பற்றி பேசுகையில், கர்ப்ப காலத்தில், நீங்கள் தவிர்க்க வேண்டிய சமையல் முறைகள் சில உள்ளன. அவை,

பிரெஞ்ச் பிரைஸ்
பிரெஞ்சு பிரைஸ்: பிரெஞ்சு பிரைஸுக்கு, உருளைக்கிழங்கை எண்ணெயில் பொரித்து எடுப்பர் மற்றும் அதில் நிறைய உப்பு சேர்ப்பர். எனவே இது கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியமற்றதாக இருக்கும்.

சீஸ்
சீஸ் கொண்டு வேகவைத்த உருளைக்கிழங்கு: இந்த உருளைக்கிழங்கு டிஷ் கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படவில்லை; ஏனெனில், இது அதிக எடையை தூண்டக்கூடியது மற்றும் அது சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

வறுத்த உருளைக்கிழங்கு சிப்ஸ்:
அதிக வெப்பநிலையில் செயல்படுத்தப்பட்டாலும், இது மிக அதிக கொழுப்பு மற்றும் உப்பு கொண்டது. இது உயர் கர்ப்பக்கால இரத்த அழுத்தத்தை தூண்டலாம். மற்றும் உடல் பருமன் ஆபத்து அதிகரிக்கக்கூடும் அதனால் பிற கர்ப்ப சிக்கல்களை அதிகரிக்க முடியும். எனவே, வறுத்த உருளைக்கிழங்கு சிப்ஸ் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்றதல்ல.

எப்படி சாப்பிடலாம்?
வேகவைத்த உருளைக்கிழங்கு
சுட்ட உருளைக்கிழங்கு
சூடான உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு சூப்
மசித்த உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு சாலட்

எப்படி நல்ல உருளைக்கிழங்கை தேர்வு செய்வது?
எப்போதும் புதிய உருளைக்கிழங்கு தேர்ந்தெடுக்கவும். முடிந்தால், ஆர்கானிக் பண்ணைகள் அல்லது கரிம காய்கறிகளை விற்கும் கடைகளிலிருந்து உருளைக்கிழங்கு வாங்கவும்
சமையல் செய்வதற்கு முன்பு உருளைக்கிழங்கை நன்கு சுத்தம் செய்யுங்கள்
கருப்பு புள்ளிகள் இல்லாத உருளைக்கிழங்கு தேர்ந்தெடுக்கவும். முளைத்த உருளைக்கிழங்கை எப்போதும் பயன்படுத்த வேண்டாம். அழுகும் நிலையில் உள்ள உருளைக்கிழங்கை பயன்படுத்த வேண்டாம். ஓர் சிறிய இடமாக இருந்தாலும் கூட.
எனவே, உருளைக்கிழங்கு கர்ப்ப காலத்தில் பாதுகாப்பானதா இல்லையா என்பது நீங்கள் சமைக்கும் மற்றும் சாப்பிடும் முறையை பொறுத்தே உள்ளது.



Click it and Unblock the Notifications