For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களது விந்தணுவுடன் இரத்தம் கலந்து வெளியேறுகிறதா? இது ஆபத்தா?

உங்களது விந்தணுவுடன் இரத்தம் கலந்து வெளியேறுகிறதா? இது ஆபத்தா?

By Lakshmi
|

பெண்களுக்கு சிறுநீர் பாதையில் தொற்று, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், உடலுறவின் போது வலி போன்றவை உண்டாவது போன்று ஆண்களுக்கும் சில வகையான பிரச்சனைகள் இருக்க தான் செய்கின்றன. அதில் முக்கியமான ஒன்று தான் விந்தணுவில் இரத்தம் கலந்து வெளியேறுதல் பிரச்சனையாகும்.

விந்தணுவில் இரத்தம் கலந்து வெளியேறினால் எந்த ஆணுக்கு தான் பயம் உண்டாகாது...? உண்மையில் இந்த விந்தணுவில் இரத்தம் கலந்து வெளியேறுதல் பிரச்சனையானது பயப்பட தேவையான ஒன்றா? இந்த பிரச்சனையால் ஏதேனும் ஆபத்து உண்டாகுமா? எதனால் விந்தணுவில் இரத்தம் கலந்து வெளியேறுகிறது போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த பகுதியை தொடந்து படியுங்கள்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கவனிக்கப்படுவதில்லை

கவனிக்கப்படுவதில்லை

விந்தணுவில் இரத்தம் கலந்து வெளியேறும் நிலையை தான் Hematospermia என்கிறார்கள். உடலுறவில் உச்சநிலையை அடையும் போது வெளிப்படும் விந்தணுவில் இரத்தம் கலந்திருப்பது பெரும்பான்மையான ஆண்களுக்கு அதிர்ச்சியை தருகிறது. இருப்பினும் பல ஆண்கள் இதனை கவனிப்பதே கிடையாது. எனவே இது பல நாட்களாக கவனிக்கப்படாத ஒரு பிரச்சனையாகவே உள்ளது.

சிகிச்சை தேவையா?

சிகிச்சை தேவையா?

ஆண்களில் பலர் விந்தணுக்களில் இரத்தம் கலந்து வெளியேறும் இந்த பிரச்சனையை தானாகவே வீட்டிலேயே சரி செய்து கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த பிரச்சனையானது ஒருவேளை சிறுநீரக பாதை பிரச்சனைகளையோ அல்லது சிறுநீரகத்தில் உண்டாகும் ஏதேனும் ஒரு பிரச்சனையின் அறிகுறியாக கூட இருக்கலாம். எனவே இது மருந்துவரால் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சனையாகும்.

40 வயதிற்கு கீழ் உள்ளவரா?

40 வயதிற்கு கீழ் உள்ளவரா?

40 வயதிற்கு கீழ் உள்ள ஆண்களுக்கு விந்தணுவுடன் இரத்தம் கலந்து வரும் என்றால் இது கவலைப்பட தேவையில்லாத ஒரு விஷமாகும். இது தானாகவே சரியாகிவிடக் கூடிய ஒன்றாகும். இது எந்த விதமான உடல்நல பிரச்சனைகளையும் சார்ந்ததாக இருக்க முடியாது.

40 வயதிற்கு மேல் உள்ளவரா?

40 வயதிற்கு மேல் உள்ளவரா?

40 வயதிற்கு மேல் உள்ள ஒரு ஆணுக்கு விந்தணுவில் இரத்தம் கலந்து வெளியேறினால், இது நிச்சயமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயமாகும். இது கேன்சர், உதிரப்போக்கு பிரச்சனை மற்றும் சில பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

சிலருக்கு இந்த விந்தணுவுடன் இரத்தம் கலந்து வெளியேறுதல் பிரச்சனையானது சில வகையான தொற்றுக்களால் உண்டாகலாம். மேலும் பாலியல் தொற்றுக்கள் மூலமாகவும் உண்டாகலாம். இது STI (sexually transmitted infection) என்றழைக்கப்படுகிறது. இது சில வகையான பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களினால் உண்டாகிறது.

சிகிச்சை

சிகிச்சை

சிகிச்சையின் போது உண்டான சில வகை காயங்கள் கூட விந்தணுவுடன் இரத்தம் கலந்து வெளியேறுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இது ஒரு பொதுவான பிரச்சனையாகும்.

சிறுநீரக பாதை

சிறுநீரக பாதை

சிறுநீரக பாதையில் உண்டான பிரச்சனைகளை சரி செய்வதற்காக எடுத்துக் கொண்டே சிகிச்சையின் போது உண்டாகும் சில வகை காயங்களாலும், விந்தணுவில் இரத்தம் கலந்து வெளியேறக்கூடும். இது தற்காலிகமானது தான். இது பொதுவாக ஒரு சில வாரங்களில் சரியாகிவிடும் தன்மை கொண்டதாகும். கதிர்வீச்சு சிகிச்சை, வாஸ்க்டேமி மற்றும் ஹேமிராய்டுகளுக்கான ஊசி போன்றவை இந்த நிலைக்கு காரணமாக இருக்கலாம்.

வேறு சில காரணங்கள்

வேறு சில காரணங்கள்

இடும்பு எலும்பில் உண்டான ஃபிராக்சர், விதைப்பையில் உண்டான காயங்கள், கடுமையான செக்ஸுவல் செயல்பாடு, சுய இன்பம் போன்றவைகளும் இந்த விந்தணுவுடன் இரத்தம் கலந்து வெளியேறுதல் பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம்.

இனப்பெருக்க உறுப்பில் அடைப்பு

இனப்பெருக்க உறுப்பில் அடைப்பு

ஆண் இனப்பெருக்க உறுப்பில் உள்ள சின்ன குழாயில் ஏதேனும் அடைப்புகள் உண்டாகியிருக்கலாம். இது இரத்த நாளங்களை உடைய செய்து சிறிய அளவிலான இரத்தத்தை விந்துடன் கலக்க செய்யலாம். இந்த நிலையானது BPH என்றழைக்கப்படுகிறது.

கட்டிகள்

கட்டிகள்

ஒரு ஆய்வில் விந்தணுவில் இரத்தம் கலந்து வெளியேறும் பிரச்சனை உள்ள 900 நபர்கள் 3.5% பேருக்கு மட்டுமே கட்டிகள் இருந்தது. இதில் பெரும்பாலோனோருக்கு புரோஸ்ட்ரேட் பகுதியில் தான் கட்டி இருந்தது. இந்த கட்டிகள் விதைப்பை, பிளேடர், மேலும் சிறுநீர் பாதையில் சில பகுதியில் கேன்சர் உண்டாக காரணமாக உள்ளது. முக்கியமாக வயதான ஆண்களுக்கு இந்த பிரச்சனை வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனை முறையாக கவனிக்காமல் விட்டால், பின்னாளில் பெரிய பிரச்சனையாகவும் வாய்ப்புகள் அதிகமாகும்.

இரத்த நாளங்களில் பிரச்சனை

இரத்த நாளங்களில் பிரச்சனை

ஆணுறுப்பில் உள்ள ஒவ்வொரு சின்னச்சின்ன பகுதிகளும் கூட ஆண் உச்சமடைதலுக்கு உதவுகின்றன. அப்போது இரத்த நாளங்களில் உண்டாகும் சிறிய பிரச்சனை கூட விந்தணுவில் இரத்தம் கலப்பதற்கு காரணமாக அமையலாம்.

மற்ற சில காரணங்கள்

மற்ற சில காரணங்கள்

உயர் இரத்த அழுத்தம், எச்.ஐ.வி, கல்லீரல் பிரச்சனைகள், லுக்கிமியா போன்ற சில மருத்துவ காரணங்களாலும் விந்தணுவில் இரத்தம் கலக்கலாம்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

1. சிறுநீரில் இரத்தம்

2. எரிச்சல் தன்மையுடனான சிறுநீர் வெளிப்படல், சிறுநீர் கழிக்கும் போது வலி உண்டாவது

3. சிறுநீர்ப்பை நிரம்பியே இருப்பது போன்ற உணர்வு

4. வலி மிகுந்த உச்சமடைதல்

5. உடலுறவின் போது வலி

6. இரத்த அழுத்தம் அதிகரித்தல், காய்ச்சல்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Blood in Seman Dangerous

Is Blood in Seman Dangerous
Story first published: Tuesday, January 9, 2018, 13:32 [IST]
Desktop Bottom Promotion