For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருத்தடையை ஏற்படுத்த உதவும் ஒரு புது வழிமுறை: பிறப்புறுப்பு மோதிரம்!

கருத்தடை என்பது கர்ப்பத்தை தடுக்க மிகவும் முக்கியமான வழிமுறை; கருத்தடையை ஏற்படுத்த உதவும் ஒரு புது வழிமுறை: பிறப்புறுப்பு மோதிரம் குறித்து இங்கு படிக்கலாம்.

|

குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருப்பது போலவே, சில சமயங்களில், சில சூழ்நிலைகளில் குழந்தை பிறப்பை தள்ளிப்போட வேண்டும் என்ற ஆசையும் ஏற்படுகிறது. குழந்தை பிறப்பை தள்ளிப்போட நினைப்பவர்கள், புதிதாய் திருமணமாகி தங்கள் தாம்பத்திய மற்றும் தம்பதியர் வாழ்வை நன்கு வாழ நினைக்கும் இளம் தம்பதிகளாக அல்லது முதல் குழந்தையை பெற்று எடுத்த பின் இரண்டாம் குழந்தையை தள்ளிப்போட நினைக்கும் பெற்றோர்களாக இருக்கலாம்.

new birth control option

மேலும் வயதுக் கோளாறால், காதலை காமமாக மாற்றி குழந்தை பிறப்பை தடுக்க தள்ளாடும் இளசுகளுக்கும் உதவும் வகையில் இந்த பதிப்பை சமர்ப்பிக்கிறோம். இந்த பதிப்பில் ஒரு புதிய கருத்தடை சாதன முறை குறித்து படித்து அறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்புறுப்பு மோதிரம் என்றால் என்ன?

பிறப்புறுப்பு மோதிரம் என்றால் என்ன?

பிறப்புறுப்பு மோதிரம் என்பது ஒரு பிளாஸ்டிக் வளையம் அதாவது மோதிரம் போன்ற ஒரு பொருள்! இதில் கருத்தடையை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் கோட்டிங் கொடுக்கப்பட்டு - மோதிரத்தில் தடவப்பட்டு கருத்தடையை தூண்டும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இதை பயன்படுத்தி எளிதில் குழந்தை பிறப்பை தள்ளிப்போடலாம்; மிகவும் பாதுகாப்பான முறையும் கூட.

எப்படி அணிவிப்பது?

எப்படி அணிவிப்பது?

இந்த மோதிரத்தை பிறப்புறுப்பின் உள்ளே இருக்கும் கருப்பை வாயின் சுவர்கள் இரண்டும் சேரும் வகையில் பிடித்து, அந்த இரண்டு சுவரும் மோதிர வட்டத்திற்குள் வரும் வகையில் அணிவிக்க வேண்டும். ஆனால் மோதிரத்தை தொட்டு பிறப்புறுப்பில் அணிவிக்கும் முன் நன்கு கையை சுத்தமாக கழுவி இருக்க வேண்டும். இதை ஒருமுறை அணிவித்து விட்டால், அதை நீங்கள் அகற்றாமல் மூன்று வாரங்கள் வரை அப்படியே பிறப்புறுப்பிற்கு உள்ளாக வைத்து இருக்கலாம்.

மாதவிடாயின் பொழுது எப்படி?

மாதவிடாயின் பொழுது எப்படி?

மாதவிடாயின் நாட்கள் ஏற்படும் முன், கையை நன்கு கழுவி பின்னர் பிறப்புறுப்பின் உள்ளே அணிவித்த மோதிரத்தை வெளியே எடுக்க வேண்டும். மோதிரத்தை வெளியே எடுத்த பின் வழக்கம் போல் மாதவிடாய் நிகழ்வது போல நிகழும்; மாதவிடாய் நாட்கள் முடிந்த பின் புதிய பிறப்புறுப்பு மோதிரம் வாங்கி அதை அணிந்து கலவியில் ஈடுபட்டுக் கொள்ளலாம்.

மாதவிடாயை தடுக்க விரும்பினால், அணிந்த மோதிரத்தை மாதவிடாய் நாட்கள் முடியும் வரை வெளியே எடுக்காமல் இருந்து மாதவிடாயின் எல்லை முடிந்த பின்னர் மோதிரத்தை வெளியே எடுக்கலாம்; இதன் மூலம் மாதவிடாய் ஏற்படுவது தடுக்கப்படும்.

மோதிரத்தின் பயன்கள்

மோதிரத்தின் பயன்கள்

இந்த மோதிரத்தை அணிவதால், கருவுறுதல் 91 சதவிகிதம் வரை தடுக்கப்படுகிறது. இதனை அணிந்து கொள்வதால் மாதவிடாயின் பொழுது ஏற்படும் வலி மற்றும் மாதவிடாய் உதிரப்போக்கினை தடுத்திட முடியும். மேலும் இந்த மோதிரத்தால் எந்தவித தீவிர பக்க விளைவுகளும் ஏற்படாது. இது சில புற்றுநோய்களையும் தடுக்க உதவுகிறது.

மோதிரத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்

மோதிரத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்

மோதிரத்தை பிறப்புறுப்பில் அணிந்து இருப்பதால், சில சமயங்களில் இரதம் கசிதல், மயக்கம், மனநிலை மாற்றங்கள், பிறப்புறுப்பின் வெள்ளைப்படுதல் அதிகமாதல், குண்டாதல் போன்ற குறைபாடுகள் ஏற்படலாம். இது அத்தனை தீவிரமான குறைபாடுகள் அல்ல. புதிதாய் பயன்படுத்தும் ஒரு விஷயத்தை உடலால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை என்றே இதை கூற முடியும்.

எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்?

எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்?

இந்த பிறப்புறுப்பு மோதிரத்தை மூன்று வாரங்கள் வரை தொடர்ந்து அணிந்திருக்கலாம்; மூன்று வாரங்களுக்கு பிறகு கண்டிப்பாக வேறு மோதிரம் மாற்றியாக வேண்டும். இல்லையெனில் கருத்தரிப்பு நிகழலாம், ஏனெனில் மோதிரத்தில் தடவப்பட்டுள்ள ஹார்மோன்கள் 3 வாரங்கள் மிஞ்சிப் போனால் 4 வாரங்கள் வரை மட்டுமே பணியாற்ற கூடியவை; அதற்கு மேல் அவைகளால் ஒரு பிரயோஜனமும் இல்லை. எனவே 3 வாரத்திற்கு ஒரு முறை பிறப்புறுப்பு மோதிரத்தை மாற்றி விடுதல் நல்லது.

பாலியல் நோய்களில் இருந்து காக்குமா?

பாலியல் நோய்களில் இருந்து காக்குமா?

ஒருவேளை கவனக்குறைவு காரணமாக இந்த பிறப்புறுப்பு மோதிரத்தை மாற்றாமல் விட்டு விட்டால், கண்டிப்பாக கருத்தரிப்பு நிகழும் என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை. அதே போல் இந்த மோதிரம் கருத்தரிப்பை தடுக்க தானே தவிர பாலியல் நோய்களை தடுக்க அல்ல என்பதை மனதில் கொண்டு கலவி புரிதல் நல்லது. இந்த மோதிரம் எந்த நோய்களையும் ஏற்படுத்தாது, அதே சமயம் எந்த நோய்களையும் தடுக்காது.

மோதிரம் அவிழ்ந்து விடாதா?

மோதிரம் அவிழ்ந்து விடாதா?

பெண்கள் தங்கள் பிறப்புறுப்பில் அணிந்த மோதிரம் கழன்று விழுந்து விடாதா என்று கேட்டால் கண்டிப்பாக கழன்று கீழே விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளன; ஆனால், நீங்கள் சரியாக மாட்டி விட்டால் அது அவ்வளவு சீக்கிரம் கழறாது. அவ்வாறு கழன்று விழுவது போன்ற உணர்வு ஏற்பட்டால், உடனே கையை நன்கு கழுவி மோதிரத்தை மீண்டும் பிறப்புறுப்பில் சரியாக பொருந்தும் வண்ணம் மாட்டிக் கொள்ள வேண்டும்.

இந்த பிறப்புறுப்பு மோதிரத்தை எந்த நாளில் மாட்டினீர்களோ, மூன்றாவது வாரம் முடிந்த பின் அதே நாளில் கழட்டி, வேறு ஒரு மோதிரத்தை மாற்றிக் கொள்வது நல்லது.

யார் பயன்படுத்தக் கூடாது?

யார் பயன்படுத்தக் கூடாது?

பெண்களில் யாருக்கெல்லாம் இருதய பாதிப்பு, இருதய தமனி அல்லது சிறை இரத்தக் குழாய்களில் பாதிப்பு, குண்டாதல் பிரச்சனை, பிறப்புறுப்பு மிகவும் பெரிதாக இருந்தாலோ அல்லது மிகச்சிறிதாக இருந்தாலோ, சர்க்கரை நோய், மார்பக புற்று நோய் மற்றும் முப்பத்து ஐந்து வயதிற்கு மேல் புகைபிடிக்கும் பழக்கம் கொண்ட பெண்கள் இதை பயன்படுத்துவது நல்லது அல்ல. இந்த பாதிப்புகள் கொண்ட பெண்களுக்கு பிறப்புறுப்பு மோதிரம் பரிந்துரைக்கப்பட வில்லை.

யார் இந்த மோதிரத்தை பயன்படுத்த நினைத்தாலும், பயன்படுத்தும் முன் உங்கள் மருத்துவரிடம் ஒரு முறை கலந்தாலோசித்து, மருத்துவர் அனுமதி தந்தால் பின்னர் பயன்படுத்தவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A New Birth Control Option: Vaginal Ring

A New Birth Control Option: Vaginal Ring
Story first published: Friday, August 24, 2018, 15:35 [IST]
Desktop Bottom Promotion