For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

24 வருடம் பழைய கருவின் மூலம் குழந்தை பெற்ற பெண் - மருத்துவ உலகின் அதிசயம்!

24 வருடம் பழைய கருவின் மூலம் குழந்தை பெற்ற பெண் - மருத்துவ உலகின் அதிசயம்!

|

அந்த பெண்ணின் பெயர் டினா கிப்சன். அவருக்கு 26 வயது. டினாவின் கணவரின் பெயர் பெஞ்சமின் கிப்சன். இந்த கிப்சன் தம்பதிக்கு கடந்த நவம்பர் மாதம் எம்மா ரென் என்ற பெண் குழந்தயை பிறந்துள்ளது. பிறக்கும் போது எம்மா ஆறு பவுண்ட் எடையும் 2.72 கிலோ எடையும், இருபது அங்குலம் உயரமும் இருந்துள்ளது.

இந்த எடையும், உயரமும் சராசரி தானே, இதில் என்ன ஆச்சரியம் என்பது உங்களின் கேள்வியாக இருக்கலாம். ஆச்சரியம் தான். ஏனெனில், எம்மா பிறக்க காரணமாக இருந்த கரு உருவாகி 24 வருடங்கள் ஆகிறது. அதை நீண்ட காலமாக உறை நிலையிலேயே மிக பாதுகாப்பாக வைத்து வந்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேசிய கரு மையம்!

தேசிய கரு மையம்!

தேசிய கரு தானம் மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி பார்த்தால். எம்மாவின் கரு கடந்த 1992ம் ஆண்டு முதல் உறைநிலையில் பாதுகாக்கப்பட்டு வருவது அறியப்படுகிறது. இவ்வகையில் பாதுகாக்கப்பட்ட எம்மாவின் கருவை டினாவின் கருக் குழாயில் செலுத்திப் பிறக்க செய்துள்ளனர்.

18 மாதங்கள்!

18 மாதங்கள்!

இதன்படி பார்த்தால்... டினா பிறந்த 18 மாதங்களில் எம்மாவின் கரு உருவாகியிருக்கும் என நம்பப்படுகிறது. இதுக் குறித்து தேசிய கரு தான மையத்தின் இயக்குனர் ஜெப்ரி கென்னன் கூறுகையில், எம்மாவின் இந்த பிறப்புக் கதை மூலமாக பலரும் கரு தானம் செய்ய முன் அவருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவர்களுக்கு ஒரு ஊக்கம் அளிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

யாரெல்லாம் கரு தானம் செய்யலாம்?

யாரெல்லாம் கரு தானம் செய்யலாம்?

கரு தானம் செய்வதென்பது எளிதானக் காரியம் அல்ல. மற்ற உடல் தானங்கள் போல, இதற்கும் சட்டத்திட்டங்கள் இருக்கின்றன. எனவே, முதலில் தானம் செய்ய முனையும் நபரின் உடல் ஆரோக்கியம், கரு ஆரோக்கியம் எப்படி இருக்கிறது எனப் பரிசோதனை செய்யப்படும்.

எப்படி தானம் செய்வது?

எப்படி தானம் செய்வது?

கரு தானம் செய்ய இதுநாள் வரை மூன்று வகைகள் பின்பற்றப்படுகிறது. தகுந்த மருத்துவர்கள் மூலமாக, ஏஜென்சிகள் மூலமாக அல்லது நேரடியாக.

மருத்துவர்கள் மூலமாக கரு தானம் செய்வோருக்கு $6,000 முதல் $8000 டாலர்கள் வரை கிடைக்கும். ஏஜென்சி மூலமாக கரு தானம் செய்வோருக்கு $25000 டாலர்கள் வரை கிடைக்கலாம் என கூறப்படுகிறது. அது, வாங்க முன் வரும் நபர்களை பொருத்தது.

மூன்றாவதாக நேரடி கரு தானம். அதாவது, உறவினர்கள் அல்லது நண்பர்களுக்கு நேரடியாக கரு தானம் செய்வது. இது லாப நோக்கத்துடன் செய்யப்படுவதல்ல.

உலகளவில்...

உலகளவில்...

உலகளவில் கரு தானத்தை, இரத்த தானத்தை போலப் பார்க்க வேண்டும் என்ற கூற்றும் நிலவி வருகிறது. ஆரம்பக் காலத்தில் இரத்தம் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இது ஆபத்தில் இருக்கும் உயிரை காக்கும் என்பதால், இதை தானமாக, சேவையாக செய்ய வேண்டும் என உலகம் முழுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

அதேப் போல தான் கருவும். குழந்தை செல்வம் இல்லாத நபர்களுக்கு ஒரு தலைமுறையை அளிக்கும் இந்த கருவை வியாபார நோக்கில் தானம் செய்யக் கூடாது என பல நாடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

சட்டவிரோத செயல்கள்!

சட்டவிரோத செயல்கள்!

கரு தானம் மட்டுமல்ல, உலகில் விந்தணு தானமும் அதிகரித்து வருகிறது. இவை இரண்டும் யாரும் தானமாக செய்வதில்லை. பணம் ஈட்டும் தொழிலாக செய்து வருகிறார்கள். பலர் இதை ஒரு சூதாட்டம் போல குறுகிய நேரத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் வழியாக பார்க்கிறார்கள்.

உலகின் பல நாடுகளில் விந்தணு மற்றும் கருவை அரசாங்க உத்தரவு இல்லாமல் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

விலை!

விலை!

லீகலான முறையில் சென்றாலும் கூட இந்த கரு மற்றும் விந்தணு தானம் பெற அதிக செலவு ஆவதால். பலரும் குறைந்த விலையில் விந்தணு, கரு தானம் செய்ய முன்வருகிறார்கள். ஆனால், இதை சட்டவிரோத செயலாக அரசு காண்கிறது.

ஆறு முறை!

ஆறு முறை!

அதிக பட்சமாக ஒரு பெண் தனது கருவை ஆறு முறை தானம் செய்யலாம். அதற்கு மேல் செய்யக் கூடாது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதுதான் தானம் செய்பவருக்கும் ஆரோக்கியமானது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆனால், லாப நோக்கில் செயல்பட்டு வருவோர்கள் இதுகுறித்து எதுவும் அறிவதில்லை. லீகலாக செய்யும் நபர்களும், ஒவ்வொரு மருத்துவ மனையிலும் ஆறாறு முறை என பின்பற்றி வருகிறார்கள்.

இது கரு தானத்திற்கு மட்டுமல்ல, விந்தணு தானத்திற்கும் பொருந்தும்.

வைரஸ்!

வைரஸ்!

ஒரு நாட்டில் ஏதனும் வைரஸ் தொற்று பரவியிருந்தால். அது முற்றிலுமாக நீங்கிவிட்டது என உலக சுகாதார மையம் கூறும் வரை அந்த நாட்டவரிடம் இருந்து கரு அல்லது விந்தணு தானம் பெறக் கூடாது. இது, அந்த வைரஸ் பரவிய ஒருசில மாதங்களுக்கு முன்னரும் பொருந்தும்.

பரிசோதனை!

பரிசோதனை!

ஒருவர் கரு தானம் செய்யப் போகிறார் எனில், அவர்களுக்கு லீகலாக உளவில் மற்றும் உடலியல் நிபுணர்கள் பரிசோதனை செய்வார்கள். இது எவ்வாறானதாக இருக்கும் என கூறுவார்கள். இந்த இரண்டு வகை பரிசோதனைகளும் முடிந்த பிறகு, வெகு சிலரே கரு தானம் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.

சிறந்த வயது எது?

சிறந்த வயது எது?

கரு தானம் செய்ய சிறந்த வயதாக கூறப்படுவது 26 - 32. அதிலும், சீரான இடைவேளையில் பீரியட்ஸ் இருக்கும் பெண்களே சிறந்தவர்களாக காணப்படுகிறார்கள். அதே போல தானம் செய்ய முன்வரும் நபர்களுக்கும் எல்லா பரிசோதனைகளும் செய்யப்படும். ஏனெனில், அவர்களுக்கே கூட, அவர்களுக்கு என்னென்ன நோய் தொற்று இருக்கிறது என அறியாமல் இருக்கலாம்.

எந்த மாதிரியான பெண்கள்?

எந்த மாதிரியான பெண்கள்?

மேலும், எல்லா பெண்களிடமும் கரு தானம் பெறப்படுவதில்லை. கல்லூரி முடித்த இளம் பெண்கள், திருமணமாகாத பெண்கள், கலைஞர்கள் மற்றும் ஆன்மிகம் அல்லது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என விரும்பும் பெண்களிடம் இருந்து தான் அதிகம் கரு தானம் பெறப்படுகிறது. இதன் மூலமாக எதிர்காலத்தில் எந்த ஒரு பிரச்சனையும் வராது என கருதப்படுகிறது.

உண்மையானவர்கள்!

உண்மையானவர்கள்!

உண்மையாக, ஒருவருக்கு உதவி செய்ய வருபவர்கள் யாரும் கரு தானம் செய்ய பணம் பெறுவதில்லை. இரத்த தானம் செய்து எப்படி மன திருப்தியுடன் செல்கிறார்களோ, அதே போல தான் கரு தானம் செய்து மன நிம்மதியுடன் செல்லும் நபர்களும் இருக்கிறார்கள் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Woman Gave Birth To 24 Year Old Frozen Egg!

Woman Gave Birth To 24 Year Old Frozen Egg!
Story first published: Thursday, December 21, 2017, 10:39 [IST]
Desktop Bottom Promotion