Latest Updates
-
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க...
வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா - எப்படி அறிவது? இதோ! 10 வழிகள்!
உங்கள் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்ள சில் ஈசியான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
கர்ப்பகாலம் என்பது ஒரு பெண்ணிற்கு மிகவும் உன்னதமான காலம், அப்போது உங்களுக்கு பிறக்க போகும் குழந்தை ஆணாக இருக்குமா அல்லது பெண்ணாக இருக்குமா என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் இருக்கும்.
உங்கள் கணவர் பெண்குழந்தை தான் என்று சொல்வார், நீங்களோ ஆண்குழந்தை தான் பிறக்கும் என்று சொல்வீர்கள். இந்த விவாதத்தில் உங்கள் குடும்பத்தினரும் இணைந்து கொள்வார்கள்...
இதோ உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என தெரிந்துகொள்ளலாம்.. இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு பகுதிகளையும் உங்களோடு தொடர்புபடுத்திக்கொண்டே வாருங்கள்.. இந்த கட்டுரையின் இறுதில் விடை காணலாம்.

1. சீன பாலின விளக்கப்படம்
சீன பாலின விளக்கப்படம், குழந்தையின் பாலினத்தை கண்டுபிடிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு பலங்கால முறையாகும். பல அம்மாக்கள் இது உண்மையாக உள்ளது என தெரிவித்துள்ளனர். இதில் பெண்ணின் கருத்தரித்த வயதையும், கருத்தரித்த மாதத்தையும் கொண்டு பிறக்கப்போவது ஆணா அல்லது பெண்ணா என அறிந்து கொள்ளலாம்.

2. திருமண மோதிர பரிசோதனை
உங்களது திருமண மோதிரத்தை ஒரு நூல் அல்லது தலை முடியில் கோர்த்து அதை வயிற்றிற்கு மேலே சுத்தி விட்டால், அது வலுவான வட்ட இயக்கத்தில் சுற்றினால், உங்களுக்கு பிறக்கப்போவது பெண் குழந்தை, அல்லது முன்னும் பின்னுமாக ஊஞ்சலாடினால், உங்களுக்கு பிறக்க போவது ஆண் குழந்தை. இது துல்லியமான முறையில்லை.

3.மேல் வயிறு அல்லது கீழ் வயிறு
இது கருவுற்ற பெண்ணின் வயிற்று பகுதியை பார்த்து கணிக்கப்படுகிறது. கருவுற்ற பெண் நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். அவ்வாறு நிற்கும் போது தொப்புள் பகுதி உடலின் மேல் புறமாக இருப்பது போல தோன்றினால், அது பெண் குழந்தை. அல்லது அடிப்பகுதி நோக்கி இருந்தால் அது ஆண் குழந்தை. இது பெரும்பாலும் ஆதரமற்ற ஒரு பரிசோதனை தான்.

4.குழந்தையின் இதய துடிப்பு
பாலின முன்கணிப்புக் கோட்பாடுகளின்படி, ஒரு குழந்தையின் இதய துடிப்பும், ஒரு பெண் குழந்தையின் இதய துடிப்பும் கணிசமாக வேறுபடும். இந்த கோட்பாடு குழந்தையின் பாலினத்தை அடையாளம் காண உதவும். குழந்தையின் இதயம் நிமிடத்திற்கு 140 துடிப்பிற்கும் குறைவாக இருந்தால், அது ஒரு பையன் என்றும், ஒரு நிமிடத்திற்கு 140 க்கு மேல் இருந்தால், பெண் என்றும் கூறப்படுகிறது.

5.தாயின் உள்ளுணர்வு
குழந்தையின் விஷயத்தில், பிறக்க போவது ஆணா, பெண்ணா என்று தாய்க்கு கர்ப காலத்தில், தோன்றும் உள்ளுணர்வு பெரும்பான்மையாக பொய் ஆவது இல்லை.

6. இனிப்பு, புளிப்பு பசி
உங்களுக்கு எடுக்கும் பசி கூட உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தெரியப்படுத்தும். உங்களுக்கு அதிகமாக இனிப்பு பசி எடுத்தால், பிறக்க போவது பெண்ணாக இருக்கும். உப்பு அல்லது புளிப்பு பசி எடுத்தால், பிறக்க போவது ஆண் குழந்தை. உங்களுக்கு எந்த சுவையில் உள்ள உணவை அதிகம் சாப்பிட தோன்றுகிறது என்று கணக்கெடுத்து வைப்பது உங்கள் குழந்தையின் பாலினத்தை பற்றி அறிய உதவும்.

7. தொடர்ந்து காலையில் நோய்வாய்படுதல்
காலையில் தொடர்ந்து நோய்வாய்ப்படுதல் பெண் குழந்தைக்கான அறிகுறியாகும். பெண் குழந்தைக்கான ஹார்மோன்கள் அதிகமாக வளர வேண்டியிருப்பதால், தாய் நோய்வாய்ப்பட வாய்ப்புகள் உள்ளது.

8. சருமம் உடைதல்
சருமம் உடைதல் கர்ப காலத்தில் நடக்கும் பொதுவான மாற்றமாகும். ஆனால் உங்களுக்கு அதிக காலங்கள் இந்த சருமம் உடைதல் பிரச்சனை நீடித்தால், உங்களுக்கு பிறக்க போவது பெண் குழந்தையாகும், ஏனென்றால் பெண் குழந்தை தாயின் அழகை திருடுகிறதாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த அடிப்படை கணிப்புகள் சரியாக இருக்கும்!

9. அல்ட்ராசவுண்ட் (Ultrasound)
அல்ட்ராசவுண்ட் சோதனை வயிற்றில் இருக்கும்போது குழந்தையின் உடலை ஒரு ஸ்கிரீனிங் முறையில் காண்பதாகும். 18-24 வாரங்கள், அல்ட்ராசவுண்ட் டெஸ்டை பெற இது சிறந்த காலம் மற்றும் அது நம்பகமான தகவலை அளிக்கிறது.

10. டிரானோ டெஸ்ட்
டிரானோ பரிசோதனை ஒரு எளிய வழியாகும். இந்த பரிசோதனைக்கு ஒரு பாத்திரத்தில் தாயின் சிறுநீரை சேகரிக்க வேண்டும். இதில் ஒரு ஸ்பூன் டிரோனோ சேர்க்க வேண்டும். இவை இரண்டும் கலந்து வரும் நிறம் பச்சையாக தோன்றினால், பெண் குழந்தை. அதன் நிறம் நீலமாக தோன்றினால் பிறக்க போவது கட்டாயமாக ஆண் குழந்தை தான்



Click it and Unblock the Notifications