உங்க ஆண் உறுப்பில் மச்சம் போல சின்னச்சின்ன புள்ளிகள் இருக்கா? நீங்க தெரிந்துகொள்ள வேண்டியது இது!

Posted By: Dinesh
Subscribe to Boldsky

உங்களது ஆண்குறியில் திடிரென ஒரு மாற்றத்தை நீங்கள் கண்டால் நீங்கள் அதிர்ச்சியடைந்து போவீர்கள். பல ஆண்களுக்கு ஆண்குறியில் கருப்பு புள்ளிகள் இருக்கும். இதனை கண்டு சிலர் பயந்து போவார்கள்.. ஆனால் இதை கண்டு நீங்கள் பயப்பட தேவையில்லை.. இந்த ஆண்குறியில் வரும் கரும்பு நிற புள்ளியானது ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட அளவுகளில் தோற்றமளிக்கும். அதன் அளவு, வடிவம், நிறம் போன்றவை ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

இந்த கருப்பு புள்ளிகள் மிக நீண்ட நாட்கள் மறையாமல் இருந்தால் மட்டுமே பாதிப்பை தரக்கூடியதாக இருக்கும். இவை சீக்கிரமாக மறைந்துவிட்டால் எந்த பாதிப்பும் கிடையாது. இந்த பகுதியில் இந்த கருப்பு புள்ளிகள் எதனால் உண்டாகின்றன. அவற்றை வீட்டிலேயே குணப்படுத்துவது எப்படி என்பது பற்றி எல்லாம் விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. மெலனோசிஸ்

1. மெலனோசிஸ்

ஆணுறுப்பில் உண்டாகும் இந்த கருப்பு புள்ளிகளுக்கு காரணமாக இருப்பது மெலனோசிஸ் தான். இந்த நிலையில் இந்த கறுப்பு புள்ளிகள் ஆண்குறியின் மீது பழுப்பு நிறத்திலும் காணப்படுகிறது. இது போன்று இருந்தால் அது பாதிப்பில்லாத ஒரு நிலையாகும். இதற்கு சிகிச்சையும் தேவையில்லை.. நீங்கள் இந்த புள்ளியை கண்டு இது ஆண்குறி கட்டியாக இருக்குமோ என்ற குழப்பத்திற்கு ஆளாகலாம்.

ஆனால் இது போன்ற ஆண்குறி கட்டிகள் மிகக்குறைவான சதவீதத்தினருக்கு மட்டுமே வரக்கூடியது. இது பற்றி உங்களுக்கு அதிகமாக சந்தேகம் இருந்தால் நீங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறலாம்.

2. அழற்சிக்குரிய ஹைப்பர்பிக்மண்டேஷன்

2. அழற்சிக்குரிய ஹைப்பர்பிக்மண்டேஷன்

நீங்கள் சோப்புகள் மற்றும் ஷாம்புகளை ஆணுறுப்புக்கு பயன்படுத்துவதன் காரணமாகவும் இந்த நிலை உருவாகும். இது சிலருக்கு அரிப்பையும் உண்டாக்கும். இதனால் சருமம் பாதிக்கப்பட்டு இது ஹைப்பர் பிக்மண்டேஷனாக உருமாறுகிறது. இது பாதிப்பை உண்டாக்காது. ஆணுறுப்பில் கருமையை உண்டாக்கும் இது மெலனின் அந்த பகுதியில் அதிகமாக உற்பத்தியாவதால் உண்டாகிறது.

சிகிச்சை தேவையா?

சிகிச்சை தேவையா?

இதற்கு எந்த ஒரு சிகிச்சையும் தேவையில்லை... இது தானாகவே சில தினங்களில் மறைந்துவிடும். இந்த ஹைப்பர்பிக்மண்டேஷன் ஆனது உங்களுக்குள் மறைந்துள்ள மரபியல் பிரச்சனையாகவும் இருக்கலாம். அல்லது இது மெட்டபாலிக் டிஸ்ஆடர் காரணமாகவோ அல்லது சிலவகையான மருந்துகளை எடுத்துக்கொள்வதன் காரணமாகவோ கூட இருக்கலாம்.

3. செக்ஸூவல் தொற்றுகள்

3. செக்ஸூவல் தொற்றுகள்

பாலியல் தொற்றுகள் உள்ள துணையுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது ஆண்களுக்கு இந்த தொற்று ஆண்குறியில் உண்டாகிறது. இந்த வகை தொற்றுகள் HPV என்ற நிலைக்கு காரணமாகின்றன. இவை ஆரம்பத்தில் வலி இல்லாமல் தான் ஆரம்பிக்கும். ஆனால் அதன் பின்னர் சிறியதாக பிங்க் நிறம் அல்லது சிவப்பு நிறத்தில் வெளிப்படும் இது சிறிது சிறிதாக் ஆண் உறுப்பின் தோல் மீது பரவும்.

என்ன செய்வது?

என்ன செய்வது?

இது சிறிது நாட்களில் மறையும். ஆனால் இதற்கான மருத்துவத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டால் இது பிரச்சனையாக கூட முடியும். உங்களுக்கு இந்த தொற்று இருந்தால் நீங்கள் உங்களது துணையிடம் இது பற்றி தெரிவித்து அவருடன் உடலுறவு வைத்துக் கொள்ளாமல் இருப்பது சிறந்ததாகும்.

4. ஆண்குறி மச்சங்கள்

4. ஆண்குறி மச்சங்கள்

ஆண்குறியில் உள்ள மச்சங்கள் எந்த ஒரு பாதிப்பையும் உண்டு செய்யாது. இது சில நாட்களில் மறைந்தும் கூட போய்விடும். இதற்கு எந்தவிதமான சிகிச்சையும் தேவையில்லை.. அதோடு இது ஆண்குறியில் கருமை நிறத்தை உண்டாக்கும். இதனை நீங்கள் இயற்கை முறையில் மறைய வைப்பது நல்லது. ஒருவேளை இந்த கருமை அல்லது பிரவுன் நிற மச்சங்கள் ஆண்குறி முழுவதும் படர்ந்தால் நீங்கள் மருத்துவரின் ஆலோசனை பெறலாம்.

தொடர்ந்து இது போன்ற பிரச்சனைகளை நீங்கள் வீட்டிலேயே எப்படி எல்லாம் சரி செய்யலாம் என்பதை பற்றி காணலாம்.

1. ஆப்பிள் சீடர் வினிகர்

1. ஆப்பிள் சீடர் வினிகர்

பல நூற்றாண்டுகளாக ஆப்பிள் சீடர் வினிகர் சரும பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உள்ள ஆண்டி மைக்ரோபைல் தன்மையானது உங்களது ஆண் உறுப்பின் தோலில் உண்டாகும் தொற்றுகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. உங்களது ஆண் உறுப்பில் உள்ள கரும்புள்ளிகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக அமையும்.

எப்படி பயன்படுத்துவது?

எப்படி பயன்படுத்துவது?

அரை கப் அளவு ஆப்பிள் சீடர் வினிகரை மிதமான சூடுள்ள தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட இடங்களை இந்த தண்ணீரில் நனைக்க வேண்டும். இந்த முறையும் தினமும் இரண்டும் முதல் மூன்று தடவைகள் செய்து வந்தால் நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.

2. டீ ட்ரீ ஆயில்

2. டீ ட்ரீ ஆயில்

டீ ட்ரீ ஆயில் சரும பிரச்சனைகளுக்கு ஒரு மிகச்சிறந்த தீர்வாக உள்ளது. இது ஒரு மிகச்சிறந்த ஆண்டி செப்டிக்காக உள்ளது இது உங்களது சருமத்தை மிகச்சிறப்பாக விளங்க செய்கிறது. இது சரும பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருப்பதோடு உங்களது ஆண் உறுப்பில் உள்ள கரும்புள்ளிகளை போக்கவும் உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

பயன்படுத்தும் முறை

சில துளிகள் டீ ட்ரீ ஆயிலை எடுத்து ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து உங்களது ஆண் உறுப்பில் மசாஜ் செய்யுங்கள். இதனை வாரத்தில் ஒருமுறை செய்வதால் உங்களது ஆண் உறுப்பில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

3. தேங்காய் எண்ணெய்

3. தேங்காய் எண்ணெய்

நமக்கு எளியமையாக கிடைக்க கூடிய ஒரு மிகச்சிறந்த எண்ணெய் தேங்காய் எண்ணெய். இந்த தேங்காய் எண்ணெய்யை கொண்டு உங்களது ஆண் உறுப்பில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மசாஜ் செய்து வந்தால் ஆண்உறுப்பில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

4. வெங்காய சாறு

4. வெங்காய சாறு

வெங்காய சாறு என்றவுடன் ஷாக் ஆகிவிட வேண்டாம் வெங்காய சாறில் மிகச்சிறந்த ஆண்டி மைக்ரோபையல் தன்மை உள்ளது. இது உங்களது ஆண் உறுப்பில் உள்ள கரும்புள்ளிகளை விரைவாக குணப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. எனவே இதனை பயன்படுத்தி நல்ல தீர்வு காணுங்கள்.

எப்படி பயன்படுத்துவது?

எப்படி பயன்படுத்துவது?

ஒரு புதிய வெங்காயத்தை சில துண்டுகளாக கட் செய்து கொள்ளுங்கள். இந்த வெங்காயத்தை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதிலிருந்து வெங்காய சாறை எடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவுங்கள். இதனை கரும்புள்ளிகள் மறையும் வரை தினமும் செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Is Dark Spots On Your Penis dangerous

    Is Dark Spots On Your Penis dangerous
    Story first published: Thursday, December 7, 2017, 15:00 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more